பயணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பயணம் கிராமம், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு வட்டத்தில் உள்ள உண்ணாமலைக் கடை பேரூராட்சிக்கு அருகில் அமைந்த கிராமம் ஆகும். இதன் மொத்த மக்கள் தொகை  2000 ஆகும். முக்கிய மதங்கள் இந்து மதம் மற்றும் கிறித்துவம் ஆகும். இப்பஞ்சாயத்துக்கு மிகப்பெரிய வேளாண்மை கிராமமாக பயணம் முதலிடம் வகிக்கிறது. இதன் மொத்த உணவு தேவை 35% ஆகும். பயணம் கிராமம் மார்த்தாண்டத்தில் இருந்து 1 கிமீ. தொலைவிலும், கிள்ளியூரிலிருந்து 3 கிமீ தொலைவிலும், நாகர்கோவிலிருந்து 30 கிமீ தொலைவிலும் உள்ளது. இது உண்ணாமலைக் கடை பகுதியில் அமைந்துள்ளது. இக்கிராமம் இயற்கை, ஆற்று, குளங்கள் மற்றும் மலைகள் நிரம்பியது. செங்கல் தொழிற்சாலைகள், ரப்பர் தோப்புகள், தேங்காய் தோட்டங்கள் மற்றும் நெல் வயல்கள் கிராமத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பயணம் கிராமத்தில் செண்பகவள்ளி அம்மன் கோயில் அமைந்துள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயணம்&oldid=3326425" இருந்து மீள்விக்கப்பட்டது