பம்மனேந்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பம்மனேந்தல்
—  கிராமம்  —
பம்மனேந்தல்
இருப்பிடம்: பம்மனேந்தல்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°17′22″N 78°21′50″E / 9.289392°N 78.363869°E / 9.289392; 78.363869ஆள்கூறுகள்: 9°17′22″N 78°21′50″E / 9.289392°N 78.363869°E / 9.289392; 78.363869
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் கொ. வீர ராகவ ராவ், இ. ஆ. ப. [3]
ஊராட்சி மன்றத் தலைவர் சி.கார்த்திக்
மக்கள் தொகை 828 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

பம்மனேந்தல் (ஆங்கிலம்:PAMMANENDAL) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு சிற்றூர். கமுதி வருவாய் வட்டத்தின் 37 ஆவது எண்கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:37) ஆகும்.[4][5]

முக்கிய பயிர்[தொகு]

இங்கு நெல் (பாரம்பரிய நெல் ரகங்கள்), பருத்தி, மிளகாய் அதிகமாக விளைகின்றன. இது வறட்சி மாவட்டம் என்பதால் இங்கு சீமைக் கருவேல மரம் (விறகுகளால் தயாரிக்கப்படும் அடுப்புக்கரி தயாரிக்கும் பொருட்டு) முகனையாக வளர்க்கப்படுகிறது.

அமைவிடம்[தொகு]

கமுதியிலிருந்து பெருநாழி செல்லும் வழியில் கமுதியிலிருந்து சுமார் 19 கி.மீ.தூரத்திலும், பெருநாழியிலில் இருந்து 7 கி.மீ.தூரத்திலும் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 325 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து வட கிழக்கே சுமார் 6 கி.மீ தூரத்தில் பறவைகளின் சரணாலயம் காஞ்சிரங்குளம் கண்மாய் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பம்மனேந்தல் கிராமத்தில் 828 பேர் வசிக்கின்றார்கள்.இதில் ஆண்கள் 403,பெண்கள்425 பாலின விகிதம் 960. எழுத்தறிவு பெற்றவர்கள் 372 பேர். இதில் 271 பேர் ஆண்கள்; 101 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 53.22. ஆறு வயதுக்குட்பட்டோர் மொத்தம் 129 ஆண் குழந்தைகள் 66,பெண் குழந்தைகள் 63 ஆவர்.[6]

நிர்வாக அலகு[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=27&centcode=0004&tlkname=Kamuthi#MAP
  5. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=27&blk_name=Kamudi&dcodenew=23&drdblknew=8
  6. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர்28, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்மனேந்தல்&oldid=1554613" இருந்து மீள்விக்கப்பட்டது