பம்ப்கின் ஹெட்
| பம்ப்கின் ஹெட் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ஸ்டான் விண்ட்ஸ்டன் |
| தயாரிப்பு | ரிச்சர்ட் வெயின்மேன் |
| கதை | மார்க் பாட்ரிக் கடுச்சி,ஸ்டான் வின்ஸ்டன் |
| இசை | ரிச்சர்ட் ஸ்டோன் |
| நடிப்பு | லான்ஸ் ஹென்ரிக்சன் ஜெஃப் ஈஸ்ட் |
| வெளியீடு | 1989 |
| ஓட்டம் | 86 நிமிடங்கள் |
| மொழி | ஆங்கிலம் |
பம்ப்கின் ஹெட் (pumpkin head) (1989) ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.
வகை
[தொகு]கதை
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
கிராமப் பகுதியில் வாழ்ந்து வரும் மகனுக்குத் தந்தையான எட் ஹார்லி (லான்ஸ் ஹென்ரிக்சன்) அப்பகுதியில் பலசரக்குக் கடையொன்றினை வைத்து நடத்துபவராவார்.அவர் பலசமயம் ஒரு பயங்கரமான உருவம் ஒன்றினை அக்கிராமத்தின் காட்டு மறைவுகளிடையே பார்த்துள்ளார் இருப்பினும் அது வெறும் பிரம்மையே என்றும் ஒதுங்குகின்றார்.அச்சமயம் நகரத்தில் இருந்து வரும் இளைஞர்களின் இரு சக்கரவண்டியினால் தவறுதலாக அவர் மகன் கொல்லப்படவே கடுங்கோபம் கொள்ளும் எட் ஹார்லி அக்கிராமத்தில் வாழும் சூனியக்காரியின் மூலம் தான் பார்த்த உருவத்தினை வலுவூட்டச் சொல்கின்றார்.அதன் போலவே அவ்வுருவமும் வலுப்பெற்று அவரின் மகனைக் கொன்றவர்கள் ஒவ்வொருவரையும் பழி வாங்குகின்றது.
