உள்ளடக்கத்துக்குச் செல்

பம்பை அணை

ஆள்கூறுகள்: 9°23′26″N 77°09′35″E / 9.3906°N 77.1598°E / 9.3906; 77.1598
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பம்பை அணை
பம்பை அணை is located in கேரளம்
பம்பை அணை
கேரளம்-இல் பம்பை அணையின் அமைவிடம்
பம்பை அணை is located in இந்தியா
பம்பை அணை
பம்பை அணை (இந்தியா)
நாடுஇந்தியா
அமைவிடம்பத்தனம்திட்டா, கேரளம்
புவியியல் ஆள்கூற்று9°23′26″N 77°09′35″E / 9.3906°N 77.1598°E / 9.3906; 77.1598
நோக்கம்நீர்மின் உற்பத்தி
நிலைசெயல்பாட்டில்
திறந்தது1967 (58 ஆண்டுகளுக்கு முன்னர்) (1967)
உரிமையாளர்(கள்)கேரள மாநில மின்சார வாரியம்
அணையும் வழிகாலும்
வகைஈர்ப்பு
தடுக்கப்படும் ஆறுபம்பை ஆறு
உயரம் (அடித்தளம்)57.2 m (188 அடி)
நீளம்281.48 m (923.5 அடி)
உயரம் (உச்சி)981.46 m (3,220.0 அடி)
வழிகால்கள்6, ஆரக் கதவு, 7.0 x 4.87 மீ
வழிகால் அளவு912 m3/s (32,200 cu ft/s)
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்பம்பை நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு39,220,000 m3 (1.385×109 cu ft)
நீர்ப்பிடிப்பு பகுதி90.88 km2 (35.09 sq mi)
அதிகபட்சம் நீர் ஆழம்986.33 மீ (3,236.0 அடி)
இயல்பான ஏற்றம்986.33 மீ (3,236.0 அடி)
சபரிகிரி மின்திட்டம்
ஆள்கூறுகள்9°18′36″N 77°04′22″E / 9.31000°N 77.07278°E / 9.31000; 77.07278
இயக்குனர்(கள்)கேரள மாநில மின்சார வாரியம்
பணியமர்த்தம்1967 (58 ஆண்டுகளுக்கு முன்னர்) (1967)
சுழலிகள்2 x 60 வாட்/மெ.வா & 4 x 55 மெ.வா (பெல்டன் வகை)
நிறுவப்பட்ட திறன்340 MW
Annual உற்பத்தி1338 மெ.அ.
இணையதளம்
Official website

பம்பா அணை (Pamba Dam) என்பது இந்தியாவின் கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சீதத்தோடு ஊராட்சி ரன்னி வனப் பகுதியில் பம்பை ஆற்றின் மீது கட்டப்பட்ட ஓர் ஈர்ப்பு அணை ஆகும்.[1] இது 1967ஆம் ஆண்டில் சபரிகிரி நீர்மின் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கட்டப்பட்டது. சபரிகிரி நீர்மின் திட்டம் கேரளாவின் இரண்டாவது பெரிய நீர்மின் திட்டமாகும்.[2] பம்பை அணையின் நீர்த்தேக்கம் அருகிலுள்ள காக்கி அணையுடன் 3.21 கி. மீ. (1.99 மைல்) நீளமுள்ள நிலத்தடி சுரங்கப்பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அணை 281 மீ (922 ) நீளமும், 57.2 மீ (188 ) உயரமும் கொண்டது. இந்த அணை கடல் மட்டத்திலிருந்து 981.45 மீ உயரத்தில் பெரியார் தேசியப் பூங்கா ஒட்டிய வனப்பகுதியில் அமைந்துள்ளது. பம்பை மற்றும் காக்கி அணைகளில் சேமிக்கப்படும் நீர் குழாய்கள் மூலம் சபரிகிரி மின் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது. இந்த அணை 1967 முதல் செயல்பட்டு வருகிறது.[3]

வரலாறு

[தொகு]

காக்கி அணை நீர்த்தேக்கத்தினைப் பம்பை ஆற்று நீர்த்தேக்கம் இரண்டினையும் ஒரு சுரங்கப்பாதை மூலம் இணைத்து, நீர்த்தேக்கத்தை உருவாக்குவதன் மூலம் நீர்த்தேக்கத்தினை உருவாக்குவதே இத்திட்டத் திட்டமாக இருந்தது. ஆரம்பப் பணிகளும் முன்னெடுப்பும் 1958இல் மேற்கொள்ளப்பட்டு, 1960இல் பணிகள் தொடங்கப்பட்டன. 1961இல் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. 1960ஆம் ஆண்டு கால அட்டவணையின்படி அணை 1964ஆம் ஆண்டு கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் பணிகள் 1967இல் முழுமையாக முடிவடைந்தது. பம்பை அணையின் கட்டுமானத்தில் உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள் பயன்படுத்தப்பட்டன. அருகிலுள்ள பகுதிகளில் இயற்கை மணல் கிடைக்கவில்லை. எனவே, மின் நிலையத்தைத் தவிரப் பிற பயன்பாட்டிற்கு, கற்களை நொறுக்கிப் பெறப்பட்ட மணல் பயன்படுத்தப்பட்டது.

அணைக்கு சீமைக்காரை தமிழ்நாட்டில் உள்ள துளுக்கப்பட்டியிலிருந்து பெறப்பட்டது.[4]

அணை அம்சங்கள்

[தொகு]
  • அணையின் வகை: கொத்து-ஈர்ப்பு
  • வகைப்பாடு: உயரமான அணை
  • அதிகபட்ச நீர் மட்டம்: 986.33 மீட்டர்கள்
  • முழு நீர்த்தேக்க நிலை: 986.33 மீட்டர்கள்
  • ஆழமான அடித்தளத்திலிருந்து உயரம்: 57.00 மீட்டர்கள்
  • நீளம்: 281.48 மீட்டர்கள்
  • நீர்க்கசிவுப் பாதை: 6, வட்டப் பாதை, ஒவ்வொன்றும் 7 x 4.8 மீட்டர் அளவு
  • உயர மட்டம்: 981.46 மீட்டர்கள்
  • அணை நீர் வெளியேற்றம்: எண் 1, வெற்று உந்து அடைப்பிதழ், 1.8 மீட்டர் விட்டம்
  • திட்டத்தின் பெயர்: சபரிகிரி நீர்மின் உற்பத்தி
  • திட்டத்தின் நோக்கம்: நீர்மின் உற்பத்தி
  • நிறைவுற்ற ஆண்டு: 1967[5]

நீர்த்தேக்கம்

[தொகு]
பம்பை நீர்த்தேக்கம்

இந்த நீர்த்தேக்கம் பம்பை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாம்பை அணையால் உருவாகிறது.[6] இந்த நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் காக்கி நீர்த்தேக்கம் வரை நிலத்தடி 3.21 கி.மீ. சுரங்கப்பாதை வழியாகப் பாய்கிறது. நீர்ப் பரப்பு பகுதி/நீர்ப்பிடிப்புப் பகுதி 90.88 சதுர கி.மீ. ஆகும். சராசரி மழைப்பொழிவு 4572 மில்லி மீட்டர். முழு நீர்த்தேக்க நிலை 3236 அடி.

சபரிகிரி நீர்மின் திட்டம்

[தொகு]

சபரிகிரி நீர்மின் திட்டம் கேரளாவின் இரண்டாவது பெரிய நீர்மின் திட்டமாகும். இது இந்தோ அமெரிக்கக் கூட்டுத் திட்டமாகும். 1966ஆம் ஆண்டில் 300 மெகாவாட் திறனுடன் தொடங்கப்பட்டது.[7] 2005 முதல் 2009 வரை, திறன் 340 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டது.[8] இந்த மின் நிலையம் 1966-67ஆம் ஆண்டில் ஆறு மின்னாக்கிகளுடன் செங்குத்து தண்டு பெல்டன் விசையாழியைப் பிரதான இயக்கியாகக் கொண்டு தொடங்கப்பட்டது. மின் உற்பத்திக்குப் பிறகு, மின் நிலையத்திலிருந்து வெளியேறும் நீர் மூழியார் நீர்த்தேக்கத்திற்கு வெளியேற்றப்படுகிறது பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பா நீர்ப்பாசனத் திட்டம் சபரிகிரி நீர்மின் திட்டத்தின் கடைமடை நீரை நீர்ப்பாசன நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.[9][10]

சுற்றுலா

[தொகு]

இது பம்பை ஆற்றைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். படகுச் சவாரி மற்றும் சபரிமலை போன்ற சில சுற்றுச்சூழல் சுற்றுலா இடங்கள் இப்பகுதியில் உள்ளன.[11]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pamba Dam – KSEB Limited Dam Safety Organisation" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-07-21.
  2. "Kerala State Electricity Board Limited - Pamba Basin HydroProjects". www.kseb.in. Retrieved 2021-07-07.
  3. Liji, Samuel; Prasad, Dr. A.K. (September 2018). "Hydro Electric Power Dams in Kerala and Environmental Consequences from Socio-Economic Perspectives". International Journal of Research and Analytical Reviews 5 (3). http://ijrar.com/upload_issue/ijrar_issue_2021.pdf. 
  4. Thomas, Baby (November 1994). "TIME-LAG AND COST OVERRUN OF INFRASTRUCTURAL INVESTMENTS WITH SPECIAL REFERENCE TO POWER PROJECTS IN KERALA" (PDF). dyuthi.cusat.ac.in. Retrieved 2021-07-25.
  5. "Pamba Dam – KSEB Limited Dam Safety Organisation" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-07-21.
  6. "Pampa Reservoir Project". irrigationap.cgg.gov.in. Retrieved 2021-07-21.
  7. Project Sabarigiri (in ஆங்கிலம்), retrieved 2021-07-25
  8. "Kerala State Electricity Board Limited - Pamba Basin HydroProjects". www.kseb.in. Retrieved 2021-07-25.
  9. "Kerala State Electricity Board Limited - Kerala State Electricity Board Limited". www.kseb.in. Retrieved 2021-07-21.
  10. "Pamba Scheme". irrigation.kerala.gov.in. Retrieved 2021-07-25.
  11. "Pamba Reservoir at Gavi | Gavi Eco tourism | Eco tourism programmes in Kerala | Trekking packages Kerala". www.keralatourism.org. Retrieved 2021-07-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்பை_அணை&oldid=4141630" இலிருந்து மீள்விக்கப்பட்டது