உள்ளடக்கத்துக்குச் செல்

பம்பெல்லைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பம்பெல்லைட்டு
Pumpellyite
பொதுவானாவை
வகைசோரோசிலிக்கேட்டு
இனங்காணல்
நிறம்ஆலிவ் பச்சை முதல் நீலப் பச்சை
படிக அமைப்புஒற்றைச்சாய்வு
பிளப்புஇரண்டு திசைகளில் தெளிவு
முறிவுஒழுங்கற்றது
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை5.5-6
மிளிர்வுபளபளக்கும், மங்கல்
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும்
ஒப்படர்த்தி3.2
மேற்கோள்கள்[1] [2]

பம்பெல்லைட்டு (Pumpellyite) என்பது நெருங்கிய தொடர்புடைய சோரோசிலிக்கேட்டு தாதுக்களின் ஒரு குழுவாகும்:

  • பம்பெல்லைட்டு-(Mg): Ca2MgAl2[Si2O6OH][SiO4](OH)2(OH)[3]
  • பம்பெல்லைட்டு-(Fe2+): Ca2Fe2+Al2[Si2O6OH][SiO4](OH)2(OH)[4]
  • பம்பெல்லைட்டு-(Fe3+): Ca2Fe3+Al2[Si2O6OH][SiO4](OH)2O[5]
  • பம்பெல்லைட்டு-(Mn2+): Ca2Mn2+Al2[Si2O6OH][SiO4](OH)2(OH)[6]
  • பம்பெல்லைட்டு-(Al): Ca2AlAl2[Si2O6OH][SiO4](OH)2O[7]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் பம்பெல்லைட் கனிமத்தை Pmp[8] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

பம்பெல்லைட்டு கனிமம் ஒற்றைச்சரிவச்சு பட்டகப் படிக அமைப்பில் படிகமாகிறது. இது பொதுவாக நீல-பச்சை முதல் ஆலிவ் பச்சை இழை வரையிலான நிறைகளாகக் காணப்படுகிறது. 5.5 என்ற மோவின் கடினத்தன்மை அளவும் 3.2 என்ற ஒப்படர்த்தியும் கொண்டு ஒளி ஊடுருவம் பண்பை வெளிப்படுத்துகிறது. கண்ணாடி போன்ற பளபளப்புடன் nα=1.674–1.748, nβ=1.675–1.754 மற்றும் nγ=1.688–1.764 என்ற ஒளிவிலகல் குறியீட்டு எண் மதிப்பை கொண்டுள்ளது.

உருமாற்ற நிலப்பரப்புகளில் உள்ள பாசால்டிக்கு மற்றும் கேப்ரோயிக்கு பாறைகளில் பாதம் வடிவத்தில் முறிவு நிரப்புதல்களாக பம்பெல்லைட் காணப்படுகிறது. பிரிக்ணைட்டு -பம்பெல்லைட் உருமாற்ற முகங்களின் ஒரு குறிகாட்டி கனிமமாகவும் கருதப்படுகிறது. குளோரைட்டு, எபிடோட்டு, குவார்ட்சு, கால்சைட்டு மற்றும் பிரிக்ணைட்டு ஆகிய கனிமங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது.

முதன்முதலில் 1925 ஆம் ஆண்டு மிச்சிகன் மாகாணத்திலுள்ள கெவீனாவ் தீபகற்பத்தின் ஔட்டன் கோ காலுமேட்டு சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. அமெரிக்க புவியியலாளர் ரபேல் பம்பெல்லியின் (1837–1923) நினைவாக கனிமத்திற்கு பம்பெல்லைட்டு எனப் பெயரிடப்பட்டது.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mineralienatlas
  2. Chesterman, Charles W. (1978). The Audubon Society field guide to North American rocks and minerals. New York: Alfred A. Knopf. p. 567. ISBN 0394502698.
  3. Mindat - Pumpellyite-(Mg)
  4. Mindat - Pumpellyite-(Fe2+)
  5. Mindat - Pumpellyite-(Fe3+)
  6. Mindat - Pumpellyite-(Mn2+)
  7. Mindat - Pumpellyite (Al)
  8. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A. 
  9. Huber, N. King (1975). The Geologic Story of Isle Royale National Park, USGS Bulletin 1309. Washington: U.S. Government Printing Office. p. 58.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்பெல்லைட்டு&oldid=4257026" இலிருந்து மீள்விக்கப்பட்டது