உள்ளடக்கத்துக்குச் செல்

பம்பிள்பீ வௌவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரும் தேனீ வௌவால்
புதைப்படிவ காலம்:அண்மைக்காலம் வரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கிராசோனிக்டெரிடே
பேரினம்:
கிராசோனிக்டெரிசு
இனம்:
கி. தோங்லோங்கை
இருசொற் பெயரீடு
கிராசோனிக்டெரிசு தோங்லோங்கை
கில், 1974
பெரும் தேனீ வௌவால் பரம்பல்

பெரும் தேனீ வௌவால் (Bumblebee bat)[1] என்பது கிட்டி பன்றி மூக்கு வௌவால் என்றும் அழைக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட அச்சுறு நிலையை அண்மித்த இனமாகவும் குரேசியோனிக்டெரிடே குடும்பத்தில் தற்போதுள்ள ஒரே சிற்றினமாகவும் உள்ளது. இது மேற்கு தாய்லாந்து மற்றும் தென்கிழக்கு மியான்மரில் காணப்படுகிறது. இது இங்குள்ள ஆற்றங்கரைகளில் உள்ள சுண்ணாம்பு குகைகளில் காணப்படுகிறது.[2] இது உலகின் சிறிய பாலூட்டி இனம் ஆகும்.[3]

விளக்கம்

[தொகு]

இது 2.9 செ.மீ முதல் 3.3 செ.மீ வரை நீளம் மட்டுமே வளரக் கூடியது. அதிகபட்சம் 2 கிராம் எடை மட்டுமே உடையது.[4][2] இது சிவப்பு-பழுப்பு அல்லது சாம்பல் நிற தோலினை கொண்டது. ஒரு தனித்துவமான பன்றி போன்ற மூக்குடன் காணப்படும்.[2][5] இதன் காதுகள் ஒப்பீட்டளவில் பெரியவை; அதே சமயம் அதன் கண்கள் சிறியவை. பெரும்பாலும் உரோமங்களால் மறைக்கப்படுகின்றன.[6] வௌவால்களின் மேற்பகுதி சிவப்பு-பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும்;[6] அடிப்பகுதி பொதுவாக வெளிர் நிறமாக இருக்கும்.[2] இறக்கைகள் ஒப்பீட்டளவில் பெரியதாகவும் அடர் நிறமாகவும் இருக்கும்.

குகை ஒன்றில் சராசரியாக 100 வௌவால்கள் என்ற அளவில் இதன் கூட்டமைப்பு பெரிய அளவில் உள்ளன. வௌவால், மாலை மற்றும் விடியற்காலையில் உணவினைத் தேடி சிறுது நேரம் விரைந்து செயல்படும்.[7] இவை அருகிலுள்ள வனப்பகுதிகளைச் சுற்றித் பூச்சிகளை இரையாகத் தேடுகிறது. ஆண்டுதோறும் ஒரு சந்ததியை தோற்றுவிக்கும் தன்மையுடையது.[7]

நிலை

[தொகு]

மியான்மரில் வௌவால்களின் நிலை நன்கு அறியப்படவில்லை என்றாலும், தாய்லாந்தின் இது ஒரு மாகாணத்தில் மட்டுமே காணப்படுகிறது. இதன் மக்கட்தொகை அழிந்துபோகும் அபாயத்தில் இருக்கலாம். இதன் சாத்தியமான அச்சுறுத்தல்கள் முதன்மையாக மானுடவியல் சார்ந்தவை. வாழ்விட சீரழிவு மற்றும் இரைத் தளங்களின் இடையூறு ஆகியவை இதன் அழிவின் காரணங்களில் அடங்கும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Bates, P.; Bumrungsri, S.; Francis, C. (2019). "Craseonycteris thonglongyai". IUCN Red List of Threatened Species 2019: e.T5481A22072935. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T5481A22072935.en. https://www.iucnredlist.org/species/5481/22072935. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. 2.0 2.1 2.2 2.3 "Bumblebee bat (Craseonycteris thonglongyai)". EDGE Species. Archived from the original on 21 September 2010. பார்க்கப்பட்ட நாள் 2008-04-10.
  3. https://www.guinnessworldrecords.com/world-records/70467-smallest-mammal
  4. Donati, Annabelle, and Pamela Johnson. "Which mammal is the smallest?." I wonder which snake is the longest: and other neat facts about animal records. Racine, Wis.: Western Pub. Co., 1993. 8. Print.
  5. Hulva; Horáček (2002). "Craseonycteris thonglongyai (Chiroptera: Craseonycteridae) is a rhinolophoid: molecular evidence from cytochrome b". Acta Chiropterologica 4 (2): 107–120. doi:10.3161/001.004.0201. 
  6. 6.0 6.1 Goswami, A. 1999. Craseonycteris thonglongyai, Animal Diversity Web. Retrieved on 11 April 2008.
  7. 7.0 7.1 Hutson, A. M.; Mickleburgh, S. P.; Racey, P. A. (2001). "Microchiropteran Bats: Global Status Survey and Conservation Action Plan". Gland, Switzerland: IUCN/SSC Chiroptera Specialist Group. IUCN. Archived from the original on 12 March 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்பிள்பீ_வௌவால்&oldid=3622866" இலிருந்து மீள்விக்கப்பட்டது