உள்ளடக்கத்துக்குச் செல்

பம்பா சதர்லேண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பம்பா துலீப் சிங்
பஞ்சபின் இளவரசி
லாஃபாயெட் புகைப்பட அரங்கத்தில் எடுக்கப்பட்ட பம்பாவின் புகைப்படம் (1940க்கு முன்)
பிறப்புபாம்பா சோபியா ஜிந்தன் துலீப் சிங்
(1869-09-29)29 செப்டம்பர் 1869
இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
இறப்பு10 மார்ச்சு 1957(1957-03-10) (அகவை 87)
இலாகூர், பஞ்சாப் பகுதி, பாக்கித்தான்
புதைத்த இடம்
குல்பர்க் கிறுத்துவக் கல்லறை, இலாகூர்
துணைவர்டேவிட் வாட்டர்ஸ் சதர்லேண்ட்
பெயர்கள்
பம்பா சோபியா ஜிந்தன்
தந்தைதுலீப் சிங்
தாய்பம்பா முல்லர்

இளவரசி பம்பா சதர்லேண்ட் (Bamba Sutherland) (29 செப்டம்பர் 1869-10 மார்ச் 1957) பஞ்சாப் பகுதியில் சீக்கியப் பேரரசை ஆட்சி செய்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். "பம்பா" என்ற பெயருக்கு அரபு மொழியில் இளஞ்சிவப்பு என்று பொருள்.[1] இங்கிலாந்தில் குழந்தைப் பருவத்தைக் கழித்த பிறகு, இவர் தனது தந்தையின் இராச்சியத்தின் தலைநகரான இலாகூருக்கு வந்தார். அங்கு இவர் ஒரு வாக்குரிமை பெற்றவராகவும், சுயராஜ்ஜியம் மற்றும் இந்தியாவின் சுதந்திரத்தை ஆர்வத்துடன் ஆதரித்தார். லாலா லஜபதி ராய் போன்ற இந்திய புரட்சியாளர்களுக்கு இவர் நெருங்கிய மற்றும் தனிப்பட்ட நண்பராக இருந்தார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

பம்பா சோபியா ஜிந்தன் துலீப் சிங் என்ற பெயரில் பிறந்த இவர், மகாராஜா துலீப் சிங் மற்றும் அவரது அபிசீனிய-ஜெர்மன் முதல் மனைவி பம்பா முல்லரின் மூத்த மகள் ஆவார். இளவரசி பம்பா செப்டம்பர் 29,1869 அன்று இலண்டனில் பிறந்தார். இவரது தந்தை இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி மற்றும் அவரது மகன் எட்வர்ட் மன்னரின் மிகவும் விருப்பமானவராக இருந்தார். எட்வர்ட் மன்னர் இவரது தந்தையின் அகால மரணத்திற்குப் பிறகு இவரையும் இவரது உடன்பிறப்புகளையும் பாதுகாத்தார். இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போருக்குப் பிறகு, மார்ச் 29,1849 அன்று பஞ்சாப் இணைக்கப்பட்ட பின்னர், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் பராமரிப்பில் குழந்தையாக பிரிட்டனுக்கு அழைத்து வரப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Maharani Bamba Duleep Singh பரணிடப்பட்டது செப்டெம்பர் 19, 2013 at the வந்தவழி இயந்திரம், DuleepSingh.com, accessed March 2010

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்பா_சதர்லேண்ட்&oldid=4229945" இலிருந்து மீள்விக்கப்பட்டது