உள்ளடக்கத்துக்குச் செல்

பம்பாய் ரவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரவா தோசை - தென்னிந்திய காலை சிற்றுணவு

பம்பாய் ரவா (Bombay rava) அல்லது ரவ்வா என்பது ஒரு கோதுமை தயாரிப்பு உணவு ஆகும். உமி நீக்கிய கோதுமையை அரைப்பதன் மூலம் ரவை தயாரிக்கப்படுகிறது. இந்திய உணவு வகைகளான ரவா தோசை, ரவா இட்லி, உப்புமா, கிச்சடி போன்றவையும் ரவா லட்டு மற்றும் ரவா அல்வா அல்லது ரவா கேசரி போன்ற இனிப்புகளையும் தயாரிக்கிறார்கள்[1][2].

கோதுமை மாவிலிருந்து சம்பா ரவை என்று அழைக்கப்படும் மற்றொரு வகையும் தயாரிக்கப்படுகிறது. இது கோதுமை மாவின் சுத்திகரிக்கப்பட்ட வடிவம் ஆகும் [3].

செயல்முறை

[தொகு]

கோதுமையை மாவு ஆலையில் இட்டு அரைத்த பின்னர் அரைக்கப்பட்ட பொருட்களின் எச்சங்களை ரவை எனலாம். மாவும் ரவையும் பிரிக்கப்படும் வரை இது ஒரு சல்லடை வழியாக அனுப்பப்படுகிறது.

பயன்பாடு

[தொகு]

பம்பாய் ரவா இந்தியாவில் உப்மா செய்ய பயன்படுத்தப்படுகிறது. இது சில வகையான தோசைகளில், குறிப்பாக ரவா தோசையில் ஒரு மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது [3].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ravva kesari / Sheera பரணிடப்பட்டது சனவரி 6, 2011 at the வந்தவழி இயந்திரம்
  2. "Rava Ladoo receipe". Archived from the original on 14 June 2009. பார்க்கப்பட்ட நாள் 28 July 2009.
  3. 3.0 3.1 "Rava Dosa Receipe". Archived from the original on 2011-07-15. பார்க்கப்பட்ட நாள் 2009-07-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்பாய்_ரவா&oldid=2821349" இலிருந்து மீள்விக்கப்பட்டது