பம்பாய் சகோதரிகள்
பம்பாய் சகோதரிகள் சி. சரோஜா மற்றும் சி. லலிதா ஆகியோர் கருநாடக இசைப் பாடகர்கள் ஆவர். இவ்விருவரும் இசை மேடைகளில் இணைந்து பாடுகிறார்கள்.
ஆரம்பகால வாழ்க்கை[தொகு]
பம்பாய் சகோதரிகள், அப்போதைய பம்பாயில் பிறந்தவர்கள். இவர்கள் முசிரி சுப்பிரமணிய ஐயர், டி. கே. கோவிந்த ராவ் ஆகியோரிடம் இசைப்பயிற்சி பெற்றனர்.
தொழில் வாழ்க்கை[தொகு]
1963 ஆம் ஆண்டு முதல் பாடி வரும் இச்சகோதரிகள், தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமசுகிருதம், இந்தி, மராத்தி ஆகிய மொழிகளிலும் பாடல்கள் பாடி வருகின்றனர்.
விருதுகள்[தொகு]
- சங்கீத சூடாமணி விருது, 1991. வழங்கியது ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சென்னை
- இசைப்பேரறிஞர் விருது,2006. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[1]
- ஆஸ்தான விதுசி; வழங்கியது: காஞ்சி சங்கர மடம்
- சங்கீத கலாநிதி விருது,2010. வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
- மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நினைவு விருது, 2013. வழங்கியது: மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அறக்கட்டளை[2]
- சங்கீத கலாசிகாமணி விருது 2006 ; வழங்கியது இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018. 2012-02-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 டிசம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://www.thehindu.com/news/cities/chennai/award-for-bombay-sisters/article5434131.ece
பகுப்புகள்:
- கருநாடக இசைப் பாடகர்கள்
- சங்கீத கலாநிதி விருது பெற்றவர்கள்
- இசைப்பேரறிஞர் விருது பெற்றவர்கள்
- சகோதர இரட்டையர் (வாய்ப்பாட்டு)
- சங்கீத சூடாமணி விருது பெற்றவர்கள்
- மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நினைவு விருது பெற்றவர்கள்
- சங்கீத கலாசிகாமணி விருது பெற்றவர்கள்
- வாழும் நபர்கள்
- தமிழ்ப் பெண் இசைக் கலைஞர்கள்
- பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்