உள்ளடக்கத்துக்குச் செல்

பம்பாய் கலவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பம்பாய் கலவை
பம்பாய் மிக்சர்
மாற்றுப் பெயர்கள்சான்சூர்
வகைசிற்றுண்டி
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிமும்பை
தொடர்புடைய சமையல் வகைகள்இந்திய உணவுமுறை

 

பாம்பே கலவை (பாம்பே மிக்சர்)(Bombay mix) என்பது ஒரு இந்தியச் சிற்றுண்டி கலவையாகும். இது வடமாநிலங்களில் நம்கீன் என அறியப்படுகிறது. இச்சிற்றுண்டி வறுத்த பருப்பு, கடலை, கடலைப்பருப்பு, கடலை மாவு கந்தியா, மக்காச்சோளம், எண்ணெய், அரிசி பொரி, வறுத்த வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை போன்ற காரமான உலர்ந்த பொருட்களின் மாறுபட்ட கலவையைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் உப்பு மற்றும் கொத்தமல்லி மற்றும் கடுகு விதைகளை உள்ளடக்கிய மசாலா கலவையுடன் சுவைக்கப்படுகிறது.

வகைகள்

[தொகு]

பல்வேறு பகுதிகளில் இது அப்பகுதிக்கேற்ப தனிச்சுவையுடன் தயாரிக்கப்படுகிறது.

  • மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இது கசாங் புடிஹ் என்று அழைக்கப்படுகிறது. உள்ளூர் இந்தியச் சமூகத்தின் உறுப்பினர்கள் பொதுவாகத் தென்னிந்தியாவில் செய்வது போல் "கலவை" என்று குறிப்பிடுகின்றனர். இது சாலையோர வியாபாரிகள் மற்றும் கடைகள் மற்றும் உணவகங்களில் கிடைக்கும். சிங்கப்பூர் சந்தைகளில் பாம்பே கலவையை முறுக்கு என்று குறிப்பிடுகிறது. இது முற்றிலும் வேறுபட்ட தயாரிப்பு ஆகும்.[1]
  • தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற தென்மாநிலங்களிலும், இலங்கையின் வடக்கிலும், இது வெறும் "கலவை" என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது கிட்டத்தட்ட அனைத்து இனிப்பு கடைகள் மற்றும் அடுமனைகளில் கிடைக்கிறது. பொதுவாக இதில் வறுத்த வேர்க்கடலை, தேன்குழல்,[2] கார பூந்தி, [3] வறுத்த சனா பருப்பு, காரசேவ், சிறு துண்டுகளாக உடைக்கப்பட்ட முறுக்கு, பக்கோடா மற்றும் ஓமப் பொடி கலந்து தயாரிக்கப்படுகிறது.[4]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "catalogId=10051&storeId=90001&productId=314685&langId=-1&categoryId=33965&parent_category_rn=33965&top_category=10059 Product: FAIRPRICE - MURUKU THICK". Archived from the original on 9 November 2016. Retrieved 14 July 2014.
  2. "Thenkuzhal Recipe". Subbus Kitchen. Retrieved 2014-02-02.
  3. "Diwali special – Kara Boondi (Spicy Boondi)". Samai.in. 2008-09-23. Archived from the original on 15 February 2014. Retrieved 2014-02-02.
  4. "Padma's Recipes: OMA PODI / SEV". Padmasrecipes.blogspot.com. Retrieved 2014-02-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்பாய்_கலவை&oldid=3656291" இலிருந்து மீள்விக்கப்பட்டது