உள்ளடக்கத்துக்குச் செல்

பம்பர் பைனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பம்பர் பைனி யாக தலத்தின் பரந்த பார்வை

பம்பர் பைனி (Bambar Baini) தேவி எனப்படும் பெண் தெய்வம், நெருக்கமாக பிராந்திய அவதாரமான துர்க்கையுடன் அடையாளம் காணப்படுகிறார். [1] இவரது பெயர் ", சிங்கத்தின் மீது சவாரி செய்யும் சக்திவாய்ந்த தெய்வம்" என்கிற பொருளில் வழங்கப்படுகிறது. இவரது கோயில், ஒரு மலையின் மீதுள்ள 'லாண்டி' நகரத்தில் அமைந்துள்ளது.

இருப்பிடம்

[தொகு]

ஸ்ரீ தேவி பம்பர் பைனி அம்பாவின் இந்து கோயில், மலையின் உச்சியில் லாண்டி நகரின் மையத்திலிருந்து 1 கி.மீ. சுற்றி அமைந்துள்ளது. லாண்டி நகரம்,   இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் சதர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பக்தர்களும் பார்வையாளர்களும் சுமார் 450 படிகள் ஏறி மலையின் உச்சியில் உள்ள கோவிலை அடைகிறார்கள். ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகிறார்கள். இந்த வழிபாட்டுத் தலம் 17-18 ஆம் நூற்றாண்டில் இருந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கோயிலுக்கு முன்னால், மலையின் கீழே ஒரு அழகிய குளம் காணப்படுகிறது. இது புந்தேல்கண்டின் முக்கியமான இடமாக கருதப்படுகிறது.

நவராத்திரி மேளா

[தொகு]

பம்பர் பைனி கோயில் உள்ளூர் பகுதியில் உள்ள மிக முக்கியமான புனித யாத்திரை தலங்களில் ஒன்றாகும். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் கொண்டாடப்படும் நவராத்திரி மேளாவுக்கு, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது. நவராத்திரி மேளா என்பது, இந்துக்கள் அதிகமாக நோன்பு நோற்கும் நாட்கள் ஆகும்.

போக்குவரத்து

[தொகு]

இக் கோயிலுக்கு அருகிலுள்ள விமான நிலையம் கஜுராஹோ ஆகும் . மேலும், மஹோபா, கஜுராஹோ மற்றும் ஹர்பல்பூர் ரயில் நிலையங்கள் அருகிலேயே அமைந்துள்ளன, இந்த போக்குவரத்து வசதிகள், லாண்டி நகரத்தை இந்தியாவின் சில முக்கிய நகரங்கள் மற்றும் உள்ளூர் நகரங்களுடன் இணைக்கிறது.

தோற்றம்

[தொகு]

இந்த தலத்தில் அமைந்துள்ள தேவியின் தோற்றம் குறித்து புராணங்களில் சொல்லப்படுகிறது.[சான்று தேவை] இது, ஒரு உள்ளூர் பூசாரி அனுபவித்த கனவுடன் தொடர்புடையதாக உள்ளது. பம்பர் பைனி தேவி பூசாரியின் கனவில் தோன்றி, இந்த மலையின் உச்சியில் அவர் இருக்கும் இடத்தைப் பற்றி பூசாரியிடம் சொன்னதாகக் கூறப்படுகிறது. அதனால், அடுத்த நாள் காலையில், பூசாரி மற்றும் லாண்டி நகரத்தின் சில மூத்த பொறுப்புள்ள குடிமக்கள் தங்கள் வாழ்க்கையைத் துச்சமாக மதித்து, துணிச்சலுடன் மலையடிவாரத்தில் இருந்து மேலே சென்றபோது, ஒரு பெரிய குகையை உள்ளடக்கிய ஒரு பெரிய பாறையில் காணப்பட்ட ஒரு சிறிய துளைக்குள் தேவியின் கல்வெட்டு இருப்பதைக் கண்டார்கள்.

அந்த நாட்களில் மலையில் சிங்கங்கள், புலிகள் போன்ற காட்டு விலங்குகள் நிறைந்திருந்தன. ஆகையால், தேவி முறையாக 'பப்பர் வாகினி' என்று பெயரிடப்பட்டதாக உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள். அதாவது சிங்கத்தின் மீது அமர்ந்து சவாரி செய்பவர் என்ற பொருளில் அப்பெயர் அமைந்தது. பின்னர் காலப்போக்கில் 'பம்பர் பைனி' ஆனது. அப்போது நகர மக்கள் பாறையிலேயே ஒரு கோவிலைக் கட்ட முடிவு செய்தனர். நீண்ட படிக்கட்டு பின்னர் வந்தது. கோயிலின் முன்னேற்றத்திற்கான பணிகள் மற்றும் அணுகல் இன்றுவரை தொடர்கிறது.

படிமவியல்

[தொகு]

பம்பர் பைனி தேவியின் உருவம், ஒரு பெரிய பாறையின் துளைக்குள் ஒரு இளம் பெண்ணின் உருவத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இவர், பொதுவாக புடவை ஆடை அணிந்தவராகவும், அலங்கார நகைகளை பூண்டவராகவும் காணப்படுகிறார். பாறையின் துளைக்கு போதுமான வெளிச்சம் இல்லாததால் அசல் கல்வெட்டின் புகைப்படங்களை எடுப்பது கடினமாக உள்ளது.

குறிப்புகள்

[தொகு]
  1. Lala Ramcharan Lal. Ram Ram Bhaj Lev Neeraj Prakashan, Chhatarpur p. 58-59

மேலும் படிக்க

[தொகு]
  • லாலா ராம்சரண் லால் (1880-1942), பிப்ரவரி 2000. ராம் ராம் பஜ் லெவ் (புண்டேலி லோக் பஜன்), பிரிஸ் பூஷண் கரே, நீரஜ் பிரகாஷன், சதர்பூர்.
  • டேவிட் கின்ஸ்லி ', இந்து தேவதைகள்: இந்து மத மரபுகளில் தெய்வீக பெண்ணின் பார்வை, ( பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0379-5 )
"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்பர்_பைனி&oldid=2939324" இலிருந்து மீள்விக்கப்பட்டது