பப்ளிக் வங்கி
பப்ளிக் வங்கி கோபுரம், கோலாலம்பூர் | |
| வகை | பொது நிர்வாக நிறுவனம் |
|---|---|
| நிறுவனர்(கள்) | தே கோங் பியோவ் |
| சேவை வழங்கும் பகுதி | ஆசியா-பசிபிக் |
| முதன்மை நபர்கள் | லாய் வான்; (தலைவர்) தாய் ஆ லெக் (தலைமை இயக்குநர்) |
| தொழில்துறை | வங்கி மற்றும் நிதி |
| உற்பத்திகள் | நிதிச் சேவைகள் |
| வருமானம் | (US$5.49 பில்லியன்) (2019)[1] |
| இயக்க வருமானம் | (US$1.74 பில்லியன்) (2019)[1] |
| நிகர வருமானம் | ▼ RM5.51 பில்லியன் (US$1.35 பில்லியன்) (2019)[1] |
| மொத்தச் சொத்துகள் | (US$105.82 பில்லியன்) (2019)[1] |
| பணியாளர் | >18,000[2] |
பப்ளிக் வங்கி அல்லது பப்ளிக் வங்கி பெர்காட் (MYX: 1095) (ஆங்கிலம்: Public Bank; மலாய்; Public Bank Berhad; சீனம்: 大眾銀行); என்பது மலேசியா, கோலாலம்பூரில் தலைமையிடமாகக் கொண்டு மலேசியாவிலும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலும் நிதிச் சேவைகளை வழங்கி வரும் ஒரு வங்கியாகும். இந்த வங்கி, 1966-ஆம் ஆண்டில் மலாயா வங்கியின் அப்போதைய பொது மேலாளரான தே கோங் பியோவ் என்பவரால் நிறுவப்பட்டது. இந்த வங்கி 1967-ஆம் ஆண்டில் மலேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.
பப்ளிக் வங்கி தற்போது தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. 2015-ஆம் ஆண்டில் இதன் சொத்து மதிப்பு RM 363.76 பில்லியன் (US$91.26 பில்லியன்) ஆகவும், சந்தை மூலதனம் RM 71.90 பில்லியன் (US$18.04 பில்லியன்) ஆகவும் இருந்தது.
பொது
[தொகு]பங்குதாரர்களின் நிதிகளின் அடிப்படையில் மலேசியாவின் மிகப்பெரிய வங்கியாகவும், சந்தை மூலதனத்தின் அடிப்படையில் மலாயா வங்கிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய வங்கியாகவும், மொத்த சொத்துக்களின் அடிப்படையில் மலாயா வங்கி நிறுவனம் மற்றும் சிஐஎம்பி வங்கிக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய வங்கியாகவும் பப்ளிக் வங்கி விளங்குகிறது.[3]
பப்ளிக் வங்கி தற்போது தனிநபர் வங்கிச் சேவை, வணிக வங்கிச் சேவை, இசுலாமிய வங்கிச் சேவை, முதலீட்டு வங்கிச் சேவை, பங்குத் தரகு, அறங்காவலர் சேவைகள், நியமனதாரர் சேவைகள், கூட்டு முதலீட்டு முறை நிதிகளின் (Unit Trust Funds) விற்பனை மற்றும் மேலாண்மை, வங்கி-காப்பீடு மற்றும் பொதுக் காப்பீட்டுத் தயாரிப்புகள் உள்ளிட்ட விரிவான நிதித் தயாரிப்புச் சேவைகளை வழங்குகிறது.[4]
பப்ளிக் வங்கியின் உத்தி, சில்லறை வங்கி வணிகத்தைச் சார்ந்துள்ளது; குறிப்பாக சில்லறை நுகர்வோர் மற்றும் சிறு நடுத்தர நிறுவனங்களில் (SMEs) வளர்ச்சியை மையமாகக் கொண்டுள்ளது.[5]
செயல்பாடு
[தொகு]
பப்ளிக் வங்கி, அதன் வலுவான நிதிச் செயல்பாடு மற்றும் சீரான விவேகமான நிர்வாகத்திற்காக நன்கு அறியப்படுகிறது. இதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தரமதிப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து தொடர்ந்து வலுவான கடன் மற்றும் நிதி மதிப்பீடுகள் வழங்கப்படுகின்றன.[6]
பப்ளிக் வங்கி தற்போது மலேசியாவில் 259 கிளைகள் மற்றும் 2000-க்கும் மேற்பட்ட சுய முனையங்களைக் கொண்ட ஒரு வலையமைப்பைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலும் தனது இருப்பைக் கொண்டுள்ளது. ஆங்காங்கில் 1 துணை நிறுவனம் (79 கிளைகள்), கம்போடியாவில் 1 துணை நிறுவனம் (30 கிளைகள்), வியட்நாமில் 2 துணை நிறுவனங்கள் (12 கிளைகள்), லாவோஸில் 4 கிளைகள், சீனாவில் 3 கிளைகள் மற்றும் இலங்கையில் 3 கிளைகள் என ஒரு வலையமைப்பு உள்ளது.[7]
இந்த நிறுவனம் செயல்படும் நாடுகளில் 9 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்கிறது.[8]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 "Public Bank (PBB)'s and PBB Group's Audited Results for the Fourth Quarter and Financial Year Ended 31 December 2019". publicbankgroup.com. Archived from the original on 12 March 2020. Retrieved 26 February 2020.
- ↑ "Corporate Profile at official website of Public Bank".
- ↑ "Top 5 Biggest Banks in Malaysia". Archived from the original on 4 சூலை 2015. Retrieved 4 சூலை 2015.
- ↑ "Banks in Malaysia". Banks around the World.
- ↑ "Public Bank's Official website".
- ↑ Public Bank Berhad. "Corporate Profile". About Us. Retrieved 16 August 2016.
- ↑ "Official website of Public Bank".
- ↑ "Official website of Public Bank".