உள்ளடக்கத்துக்குச் செல்

பப்புவா மாநிலம்

ஆள்கூறுகள்: 2°32′S 140°43′E / 2.533°S 140.717°E / -2.533; 140.717
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பப்புவா மாநிலம்
Papua
Province of Papua
Provinsi Papua
அலுவல் சின்னம் பப்புவா மாநிலம்
சின்னம்
பப்புவா மாநிலம் அமைவிடம்
Map
பப்புவா மாநிலம் is located in இந்தோனேசியா
பப்புவா மாநிலம்
      பப்புவா மாநிலம்

ஆள்கூறுகள்: 2°32′S 140°43′E / 2.533°S 140.717°E / -2.533; 140.717
நாடு இந்தோனேசியா
பகுதி மேற்கு நியூ கினி
மாநிலம்பப்புவா மாநிலம்
இடச்சு27 திசம்பர் 1949[1]
தன்னாட்சி1 May 1963[2]
பகிர்வு30 சூன் 2022
தலைநகரம்ஜெயபுரா
பரப்பளவு
 • மொத்தம்82,680.95 km2 (31,923.29 sq mi)
 • பரப்பளவு தரவரிசை7-ஆவது
உயர் புள்ளி
10,085 m (33,087 ft)
மக்கள்தொகை
 (சூன் 30, 2024)[4]
 • மொத்தம்10,60,550
 • அடர்த்தி13/km2 (33/sq mi)
மக்கள் தொகை
 • இனக்குழுக்கள்[5]45.42% மண்டார்
12.49% பூகிஸ் மக்கள்
10.91% மாமசா
8.12% களும்பாங்
4.92% ஜாவா
2.61% பாட்டா
2.19% மக்காசார் மக்கள்
9.0% வேறு
 • சமயம் (2023)[6]
 • மொழிகள்இந்தோனேசியம், பப்புவா மலாய்; தொபாத்தி; பியாக்; யாபென்
நேர வலயம்இந்தோனேசிய நேரம் +9
தொலைபேசி985xx-99xxx
ஐஎசுஓ 3166 குறியீடுID-PA
போக்குவரத்துPA
HDI (2024)Increase 73,83 (2024)
 உயர்வு [7]
இணையதளம்papua.go.id

பப்புவா மாநிலம் (இந்தோனேசியம்: Provinsi Papua; ஆங்கிலம்: Province of Papua) என்பது நியூ கினி தீவில்; இந்தோனேசியாவின் மேற்கு நியூ கினி நிலப் பகுதியில் உள்ள ஒரு மாநிலம் ஆகும். மேற்கு நியூ கினி நிலப் பகுதி இந்தோனேசிய நியூ கினி அல்லது இந்தோனேசிய பப்புவா என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த மாநிலம் மேற்கு நியூ கினியின் வடக்கு கடற்கரையையும், மேற்கில் சந்திரவாசி விரிகுடாவில் (Cenderawasih Bay) உள்ள தீவுக் குழுக்களையும் உள்ளடக்கியது;[9][10] 8 பிராந்தியங்களாகவும் (ஆங்கிலம்: Regency; City இந்தோனேசியம்: Kabupaten; Kota) 1 நகரமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநிலம் 82680.95 கிமீ2 நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இதன் தலைநகரம் ஜெயபுரா (Jayapura). பப்புவா மாநிலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் ஜெயபுரா விளங்குகிறது.

நியூ கினி

[தொகு]

நியூ கினி என்பது ஒரு தீவு; உலகின் இரண்டாவது பெரிய தீவு.

நிலவியல்

[தொகு]

இந்த மாநிலத்தின் கிழக்கில் பப்புவா நியூ கினி நாடு; வடக்கில் பசிபிக் பெருங்கடல்; மேற்கில் செந்திரவாசி விரிகுடா; தெற்கில் மத்திய பப்புவா மாநிலம்; மற்றும் மேல்நில பப்புவா மாநிலம்; ஆகியவை எல்லைககளாக உள்ளன. இந்த மாநிலம் பசிபிக் பெருங்கடலில் உள்ள பலாவு தீவுடன் கடல் எல்லைகளையும் கொண்டுள்ளது. பப்புவா மாநிலம், மற்ற இந்தோனேசிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அதிக அளவிலான தன்னாட்சி உரிமைகளைக் கொண்டுள்ளது.[11]

பப்புவா மாநிலம் 9 பிராந்தியங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் ஜெயபுரா மாநகரம் என்பது தனி ஒரு பிராந்தியமாக இயங்குகிறது

பப்புவா மாநில பிராந்தியங்கள்

[தொகு]
  1. போலேவாலி மண்டார் (Polewali Mandar Regency)
  2. ஜெயபுரா (Jayapura Regency)
  3. யாப்பென் தீவுகள் (Yapen Islands Regency)
  4. பியாக் நம்போர் (Biak Numfor Regency)
  5. சார்மி (Sarmi Regency)
  6. கீரோம் (Keerom Regency)
  7. வாருப்பென் (Waropen Regency)
  8. சுபியோரி (Supiori Regency)
  9. மாம்பரமோ ராயா (Mamberamo Raya Regency)
  10. ஜெயபுரா (Jayapura)

வரலாறு

[தொகு]

இந்த மாநிலம் 1962 முதல் 1973 வரை இரியான் பாராட் (Irian Barat) என்றும்; 1973 முதல் 2002 வரை இரியான் ஜெயா (Irian Jaya) என்றும் அழைக்கப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் மேற்கு நியூ கினி (Western New Guinea) முழுவதையும் உள்ளடக்கி இருந்தது. அப்போது பப்புவா என்றும் அழைக்கப்பட்டது.

2002-ஆம் ஆண்டில், பப்புவா அதன் தற்போதைய பாபுவா மாநிலம் எனும் பெயரைப் பெற்றது; மற்றும் இந்தோனேசிய சட்டத்தின் கீழ் பப்புவா மாநிலத்திற்கு ஒரு சிறப்பு தன்னாட்சித் தகுதியும் வழங்கப்பட்டது. 2001-ஆம் ஆண்டில், பப்புவா மாநிலத்தின் மேற்கு முனை; மேற்கு பப்புவா என்று ஒரு புதிய மாநிலமாகப் பிரிக்கப்பட்டது.

ஜெயபுரா

[தொகு]
மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
1971 2,10,901—    
1980 2,82,310+33.9%
1990 4,07,643+44.4%
2000 5,34,050+31.0%
2010 7,18,782+34.6%
2020 10,08,086+40.2%
2024 10,60,550+5.2%
Source: (Statistics Indonesia)

அதன் பின்னர், சூலை 2022-இல், இதே பப்புவா மாநிலத்தில் இருந்து மத்திய பப்புவா, மேல்நில பப்புவா, தெற்கு பப்புவா என்று மேலும் 3 மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அந்த வகையில் தற்போது இந்த மாநிலம் ஓரளவிற்கு சுருக்கப்பட்டு உள்ளது. 2024-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், மாநிலத்தின் மக்கள்தொகையின் அதிகாரப்பூர்வ மதிப்பீடு 1,060,550 ஆகும். அதில் 554,800 ஆண்கள் மற்றும் 505,800 பெண்கள் ஆவார்கள்.[12]

பப்புவா மாநிலம் 4 தனித்தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜெயபுரா நகரம் மட்டும் மாநிலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நிர்வாகப் பிரிவாக உள்ளது. 2024-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மொத்தம் 420,580 பேர் ஜெயபுராவில் வசித்தனர்.

மாநிலத்தின் பெரும்பான்மை மக்கள் கடலோரப் பகுதிகளில், குறிப்பாக ஜெயபுரா நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மிகையாக உள்ளனர்.[12]

காட்சியகம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "PERDA Provinsi Papua No 6 Tahun 2016" (PDF). peraturan.bpk.go.id. Retrieved 22 April 2021.
  2. "Penetapan Presiden RI No 1 Tahun 1963" (PDF). bphn.go.id. Retrieved 2 August 2022.
  3. Faisal, M. (2022-08-08). "5 Provinsi di Pulau Papua". Kompas.com (in இந்தோனேஷியன்). Retrieved 2022-09-11.
  4. Badan Pusat Statistik, Jakarta, 28 February 2024, Provinsi Sulawesi Barat Dalam Angka 2024 (Katalog-BPS 1102001.76)
  5. Ananta, Aris; Arifin, Evi Nurvidya; Hasbullah, M Sairi; Handayani, Nur Budi; Pramono, Agus (2015). Demography of Indonesia's Ethnicity. Institute of Southeast Asian Studies. ISBN 978-981-4519-87-8. P. 102.
  6. Sulawesi Barat Dalam Angka 2016, BPS
  7. "Indeks Pembangunan Manusia (Umur Harapan Hidup Hasil Long Form SP2020), 2023-2024". www.bps.go.id. Badan Pusat Statistik. (15 November 2024). Retrieved 16 November 2024. {{cite web}}: Check date values in: |date= (help)
  8. Badan Pembangunan Nasional (2023). "Capaian Indikator Utama Pembangunan". Jakarta: Badan Pembangunan Nasional.
  9. "Wilayah Adat Tabi Saireri Sepakati 11 Poin Evaluasi Otsus". 29 August 2020.
  10. "Pertemuan Forum Kepala Daerah Tabi Saireri, ini sejumlah Agenda yang dibahas". Yapen Islands Regency Official Website. 30 July 2020. Retrieved 5 July 2022.[தொடர்பிழந்த இணைப்பு]
  11. "Perubahan Kedua atas Undang-Undang Nomor 21 Tahun 2001 tentang Otonomi Khusus bagi Provinsi Papua". peraturan.bpk.go.id. Retrieved 5 January 2023.
  12. 12.0 12.1 Badan Pusat Statistik, Jakarta, 28 February 2025, Provinsi Papua Dalam Angka 2025 (Katalog-BPS 1102001.91)

சான்றுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பப்புவா_மாநிலம்&oldid=4256792" இலிருந்து மீள்விக்கப்பட்டது