உள்ளடக்கத்துக்குச் செல்

பப்பிரியன் தெய்யம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பப்பிரியன்
பப்பிரியன் தெய்யம் கண்ணூர் முச்சிரியன் காவில்
வகைஇந்து
சமயம்வடக்கு மலபார், கேரளம், இந்தியா

பப்பிரியன் தெய்யம் (Bappiriyan Theyyam) என்பது இந்தியாவின் கேரளாவில் வடக்கு மலபார் பகுதியில் நடத்தப்படும் ஒரு தெய்யம் எனும் நடனம் ஆகும். இது ஒரு வகையான மாப்பிள தெய்யம் ஆகும்.

முஸ்லீம் என்று நம்பப்படும் பப்பிரியன் மற்றும் இந்து தெய்வமான ஆரிய பூங்கனியின் புராணம் கேரளாவில் இந்து-இஸ்லாமிய மத நல்லிணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.

நம்பிக்கை

[தொகு]

ஆர்ய பூங்கனி தொடர்பான கட்டுக்கதை

[தொகு]

பப்பிரியன் துளு நாட்டில் தனக்கென ஒரு பெயரைப் பெற்ற முஸ்லிம் வணிகர் என்று நம்பப்படுகிறது.[1] புராணங்களில், இவர் ஆரிய பூங்கனி தெய்வம் பயணம் செய்த கப்பலின் தலைவராக இருந்தார்.

புராணங்களின்படி, திருமணத்திற்காக முத்துக்களைத் தேடி ஆரிய பூங்கனியும் அவருடைய சகோதரர்களும் பயணித்த கப்பல் ஒரு புயலில் சிக்கி, விபத்துக்குள்ளாகியதால் பிரிந்தனர்.[1] இவர்கள் கப்பலின் உடைந்த இடிபாடுகளைப் பிடித்துக்கொண்டு ஏழு நாட்களைக் கடலில் கழித்தனர். எட்டாவது நாளில் இவர்கள் அனைவரும் கரைக்குத் திரும்பினர். இவர்கள் கரையை அடைந்த போதும், ஒருவரையொருவர் பிரிந்திருந்தனர்.

கடலைப் பார்த்துக் கவலைப்பட்ட ஆர்ய பூங்கனி, பப்ரியான் கடலில் ஒரு சிறிய படகில் செல்வதைப் பார்க்கிறார். முதலில் அவர் ஆர்ய பூங்கன்னியின் உதவி அழைப்பைப் புறக்கணிக்கிறார். ஆனால் அவர் தனது மாயாஜாலத் திறன்களால் அவனை ஆச்சரியப்படுத்தி, பப்ரியனை தன்னுடன் தனது சகோதரர்களைப் பார்க்க அழைத்துச்செல்கிறார்.[2] இறுதியாக அவர்கள் வெண்மலதின்கராவில் அவளுடைய சகோதரர்களைக் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அவளுடன் செல்லத் தயாராக இல்லை. அங்கேயே குடியேற முடிவு செய்தனர்.[2] பின்னர் ஆரிய பூங்கன்னியும் பப்பிரியானும் பயணத்தைத் தொடர்ந்து வடக்கு மலபார் கடற்கரையில் உள்ள கூரன் மலைகளை அடைகிறார்கள்.[2] இங்கு இவர்கள் தளிப்பறம்பா கைதகேல் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படுகின்றனர்.[2]

இராமாயணம் தொடர்பான கதை

[தொகு]

மற்றொரு கதையானது, இராமாயணத்துடன் தொடர்புடையது. இதன்படி, சீதையைத் தேடிச் செல்லும் அனுமன், பப்பிரியன் எனும் தெய்யமாக சித்தரிக்கப்படுகிறார்.[3] சீதையைக் கண்டுபிடிக்க முடியாமல், பப்பிரியன் பெரிய மரங்களில் ஏறி, தொலைதூர இடங்களில் தேடுவார்.[3] இதனால்தான் தெய்யத்தின் போது தென்னை மரங்களில் ஏறுகின்றனர். சீதையைக் காணவில்லை என்ற கோபத்தில், பப்பிரியன் தென்னை மரத்தை உதைத்து, மரத்தில் உள்ள அனைத்துத் தேங்காய்களையும் கீழே தள்ளுவான்.[3]

சடங்கு

[தொகு]

தெய்யம் நிகழ்ச்சியின் ஒரு முக்கியமான சடங்கு என்னவென்றால், பப்பிரியன் தெய்யம் தென்னை மரங்களில் ஏறி, மரத்தை உதைத்து, அனைத்துத் தேங்காய்களையும் கீழே உலுக்கி ஆட்டுவது.[3] இந்த விழாவின் போது, இதனை மேற்கொள்ளும் போது, கலைஞர்கள் தென்னை மரத்திலிருந்து விழுந்து படுகாயமடைவது வழக்கமாக உள்ளது.[3][4]

கேரளாவிலுள்ள வண்ணார் சமூகத்தினரால் இந்த தெய்யம் ஆடப்படுகிறது.[2] கேரளாவில் இந்து-இஸ்லாமிய மத நல்லிணக்கத்திற்கு பப்பிரியன் தெய்யம் கதை ஒரு எடுத்துக்காட்டு.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "മലബാറിലെ 'ബപ്പിരിയൻ' തെയ്യത്തെക്കുറിച്ച്". Samayam Malayalam (in மலையாளம்). The times of India. Archived from the original on 26 February 2023. Retrieved 26 February 2023.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 സന്തോഷ്, യു പി (13 May 2019). "ബപ്പിരിയന്‍ തെയ്യം". www.janmabhumi.in. Janmabhumi. Archived from the original on 2023-02-26. Retrieved 2023-02-26.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "മനുഷ്യനും ദൈവവും തമ്മിലുള്ള ദൂരമെത്രെ;ഒരു കൈയകലമെന്ന് സുമേഷ് പെരുവണ്ണാൻ". ManoramaOnline. Archived from the original on 2023-02-26. Retrieved 2023-02-26.
  4. "തെങ്ങിൽകയറി കരിക്കിടുന്നത് ആചാരം; കളിയാട്ടത്തിനിടെ ബപ്പിരിയൻ തെയ്യം തെങ്ങിൽനിന്ന് വീണു |VIDEO". Mathrubhumi (in மலையாளம்). 23 February 2023. Archived from the original on 2023-02-25. Retrieved 2023-02-26.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பப்பிரியன்_தெய்யம்&oldid=4215821" இலிருந்து மீள்விக்கப்பட்டது