உள்ளடக்கத்துக்குச் செல்

பபுவா

ஆள்கூறுகள்: 25°03′N 83°37′E / 25.05°N 83.62°E / 25.05; 83.62
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பபுவா
நகரம்
பபுவா is located in பீகார்
பபுவா
பபுவா
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பபுவா நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°03′N 83°37′E / 25.05°N 83.62°E / 25.05; 83.62
நாடு இந்தியா
மாநிலம்பீகார்
கோட்டம்பட்னா கோட்டம்
மாவட்டம்கைமுர் மாவட்டம்
வார்டுகள்25
பரப்பளவு
 • மொத்தம்12 km2 (5 sq mi)
ஏற்றம்
76 m (249 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்50,179
 • அடர்த்தி4,200/km2 (11,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
821101
தொலைபேசி குறியீடு06189
வாகனப் பதிவுBR-45
இணையதளம்https://kaimur.nic.in/

பபுவா (Bhabhua), வட இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள கைமுர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம் மாநிலத் தலைநகரான பட்னாவிற்கு தென்மேற்கே 188.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.இந்நகரத்தில் முந்தேசுசுவரி கோயில் உள்ளது. மேலும் கைமூர் மலைத்தொடர் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 25 வார்டுகளும், 7,855 குடியிருப்புகளும் கொண்ட பபுவா நகரத்தின் மக்கள் தொகை 50,179 ஆகும். அதில் 26,681 ஆண்கள் மற்றும் 23,498 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 918 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 82.66 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 10.23 % மற்றும் 3.21 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 79.53%, இசுலாமியர் 20.10%, சமணர்கள் , கிறித்தவர்கள் 0.15% மற்றும் பிற சமயத்தினர் 0.22 % வீதம் உள்ளனர்.[1]இந்நகரத்தில் இந்தி மொழியுடன், போஜ்புரி மொழி வட்டார மொழியாக பேசப்படுகிறது.

போக்குவரத்து

[தொகு]

தொடருந்து நிலையம்

[தொகு]

ஹவுரா-பாட்னா-தில்லி செல்லும் இருப்புப்பாதையில் பபுவா நகரத்திலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் பபுவா ரோடு இரயில் நிலையம் உள்ளது. [2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பபுவா&oldid=4233171" இலிருந்து மீள்விக்கப்பட்டது