பன்பாரி பள்ளிவாசல்

ஆள்கூறுகள்: 26°09′18″N 90°03′17″E / 26.15500°N 90.05472°E / 26.15500; 90.05472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்பாரி பள்ளிவாசல்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இந்தியா துப்ரி மாவட்டம், அசாம் , இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்26°09′18″N 90°03′17″E / 26.15500°N 90.05472°E / 26.15500; 90.05472
சமயம்இசுலாம்
மாநிலம்அசாம்
மாவட்டம்துப்ரி
நிலைபள்ளிவாசல்
பன்பாரி பள்ளிவாசலலின் உட்புறம்

பன்பாரி பள்ளிவாசல் ( Panbari Mosque ) அல்லது இரங்கமதி மசூதி என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு பிரபலமான வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிவாசலாகும். இது இந்திய மாநிலமான அசாமில் உள்ள மிகப் பழமையான பள்ளிவாசலாகக் கருதப்படுகிறது.[1] [2] [3] துப்ரி நகரத்திலிருந்து கிழக்கே 25 கி.மீ தொலைவில் உள்ள பன்பாரி மற்றும் இரங்கமதி அருகே தேசிய நெடுஞ்சாலை 17இல் இந்த பள்ளிவாசல் அமைந்துள்ளது. 15/16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மூன்று குவிமாடங்களைக் கொண்ட இது வங்காள சுல்தானகத்தின் சிறந்த கட்டடக்கலை சாதனைகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

கட்டுமானம்[தொகு]

பன்பாரி பள்ளிவாசல், அசாம்

அப்போது வங்காளத்தின் சுல்தானாக இருந்த அலாவுதீன் உசேன் ஷா என்பவரால் பொ.ச. 1493 - 1519 க்கும் இடையில் இது கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.[4] [5] ஆனால் இதன் சரியான வரலாறு அறியப்படவில்லை. காமதாபூர் இராச்சியத்தை கைப்பற்றிய பின்னர், வெற்றியைக் கொண்டாடுவதற்கும் பிரார்த்தனை செய்வதற்கும் பன்பாரியில் ஒரு பள்ளிவாசலை சுல்தான் கட்டினார்.[1] மற்றொரு கதை, முகலாய பேரரசர் ஔவுரங்கசீப்பின், கீழ் வங்காளத்தை ஆட்சி செய்து வந்த துணைத் தலைவரான மிர் ஜும்லா என்பவர் அசாம் மீது படையெடுத்தபோது 1662 ஆம் ஆண்டில் இது கட்டப்பட்டது.[1] பள்ளிவாசலுக்கு அருகில் ஒரு பொதுத் தொழுகைக்கான இடமும், ஒரு ஆழமான கிணறும் உள்ளது. அவை அதே காலகட்டத்தில் கட்டப்பட்டிருக்கலாம். இந்த பள்ளிவாசலில் ஒரு பரந்த நடைபாதை முற்றமும் ஒரு மினாரும் உள்ளன.[6] அவை பின்னர் கட்டப்பட்டன. பள்ளிவாசலுக்குள் ஒரே நேரத்தில் சுமார் 150 பேர் பிரார்த்தனை செய்யலாம்.

பின்னணி[தொகு]

கோச் ஆட்சியாளர்களின் ஆட்சிக் காலத்தில் இரங்கமதி பகுதி மிகவும் வளமான இடமாக இருந்தது. இது கோச் ஆட்சியாளர்களின் எல்லையாகும். வங்காள சுல்தான்களும், முகலாயர்களும் தங்களது படையெடுப்புக்கு இரங்கமதி கோட்டையைப் பயன்படுத்தினர். சிலர் நம்புகிறபடி, அலாவுதீன் உசேன் ஷாவின் தலைமையகமாகவும் இருந்தது. இந்த பள்ளிவாசலை முஸ்லிம் படையினர் பிரார்த்தனை மண்டபமாக பயன்படுத்தினர்.[7]

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த இடத்தின் உள்ளூர் மக்கள் பன்பாரி "பகார்" என்ற இடத்தில் இந்த மசூதியை அடர்த்தியான பசுமையாகக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் இந்த இடத்தை சுத்தம் செய்து அங்கு தொழுகையை மேற்கொள்ளத் தொடங்கினர். இன்று, பன்பாரி "பகார்" புனித இருக்கையாகவும், பள்ளிவாசல் மேற்கு அசாம் மக்களுக்கு புனித ஆலயமாகவும் திகழ்கிறது. மலைகளின் அழகு, இதன் தனித்துவமான அமைப்பு, மேலும், தொல்லியல் முக்கியத்துவத்தும் காரணமாக, இந்தியாவில் ஒரு முக்கியமான சுற்றுலா இடமாக மாறி வருகிறது. தற்போது, பள்ளிவாசலுக்கு அருகே செங்கல் அடித்தளங்கள்,சுடுமண் பாண்டங்கள், பழங்கால நாணயங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு நகரியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை முகலாய ஆட்சிக்கு சான்றாகக் கூறப்படுகின்றன.

போக்குவரத்து[தொகு]

இந்த பள்ளிவாசல் தேசிய நெடுஞ்சாலை 17 இல் அமைந்துள்ளது. குவகாத்தி, துப்ரி, கூச் பெகாரிலிருந்து வழக்கமான பேருந்து சேவைகள் கிடைக்கின்றன. பக்கிராகிராம் தொடர்வண்டி நிலையம் (30 கிலோமீட்டர்) அருகிலுள்ளது. லோக்பிரியா கோபிநாத் பர்தலை சர்வதேச விமான நிலையம் அருகிலுள்ளது (200 கிலோமீட்டர்). பிரம்மபுத்திராவிலிருந்து (8 கிலோமீட்டர்) தொலைவில் அமைந்துள்ளது.

அரசாங்க நடவடிக்கைகள்[தொகு]

இந்திய இந்தியத் தொல்லியல் ஆய்வகம், கலாச்சார அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்த பகுதியின் நினைவுச்சின்னங்களை பாதுகாக்க சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.[5] இருப்பினும், உள்ளூர் மக்கள் அரசாங்கத்தின் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளில் மகிழ்ச்சியடையவில்லை. மேலும் அதிகமானவற்றைக் கோருகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Rupkamal (2011-06-03). "A forgotten chapter of history – Panbari mosque". Its my northeast. Archived from the original on 4 April 2016. பார்க்கப்பட்ட நாள் 2012-12-26.
  2. "Panbari Tourism, Assam India, Mosque of Assam, Panbari Mosque, East India Tours, Alamganj in Panbari, Mughal City of Assam, Assam Tours". Indiainfoweb.com. Archived from the original on 2012-02-08. பார்க்கப்பட்ட நாள் 2012-12-26.
  3. "Dhubri - District in Assam, Indi". Gloriousindia.com. பார்க்கப்பட்ட நாள் 2012-12-26.
  4. "Historic Panbari Masjid losing its glory, The Assam Tribune, Guwahat, 11 July 2011". Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 ஜனவரி 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  5. 5.0 5.1 "ASI slammed over mosque neglect, The Telegraph, Kolkata, 18 January 2012". Archived from the original on 20 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 21 ஜூலை 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  6. TwoCircles.net Two Circles+ Add Contact. "Panbari Masjid in Dhubri, the oldest masjid in N-E India Photo by wap.indyarocks.com | Flickr - Photo Sharing!". Flickr. பார்க்கப்பட்ட நாள் 2012-12-26.
  7. Rangamati Mosque, INDIA the pristine beauty

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்பாரி_பள்ளிவாசல்&oldid=3776287" இலிருந்து மீள்விக்கப்பட்டது