பன்னீர் தோசை
பன்னீர் மசாலா தோசை அல்லது பன்னீர் தோசை தென் இந்திய உணவுகளில் மசாலா தோசை வகைகளில் ஒன்று. புழுங்கல் அரிசி, உடைத்த உளுந்து மற்றும் பன்னீர் சேர்த்து தயாரிக்கப் பயன்படுகிறது , சூடான சாம்பார் மற்றும் சட்னியுடன் சேர்த்து இதை பரிமாறலாம். தோசை, தென் இந்திய உணவு என்றாலும், இதை நாடு முழுவதும் காணலாம் . இதன் தயாரிப்பு முறைகள் நகரத்திற்கு நகரம் மாறுபடும்.
தயாரிப்பு[தொகு]
மசாலா தோசை வகைகளில் பன்னீர் தோசையும் ஒன்று. இதன்செயல்முறை அரிசி மற்றும் பருப்பு 4:1 அல்லது 5:1 என்ற விகிதத்தில் கலந்து, ஊறவைத்து அரைத்து ஓர் இரவுபுளிக்க செய்ய வேண்டும். கடுகு மஞ்சள் கறிவேப்பிலை, உப்பு மற்றும் எலுமிச்சை துருவிய தேங்காய் மற்றும் நறுக்கப்பட்ட கொத்தமல்லி இலைகளுடன் பன்னீர் சேர்த்தால் பன்னீர் மசாலா தயார் . அதை தோசை மீது தடவ வேண்டும்
தேவையான பொருட்கள்[தொகு]
புழுங்கல் அரிசி, உடைத்த உளுந்து, கடுகு, வெந்தயம், உப்பு, கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய், பன்னீர், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள்.