பன்னாட்டு வெப்பமண்டல வேளாண்மை நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னாட்டு வெப்பமண்டல வேளாண்மை நிறுவனம்
International Institute of Tropical Agriculture
சுருக்கம்IITA
உருவாக்கம்1967
வகைஅரசுசார் நிறுவனம்
நோக்கம்வேளாண் ஆய்வும் மேம்பாடும்
தலைமையகம்இபதான், ஓயோ மாநிலம், நைஜீரியா
சேவை பகுதி
ஆப்பிரிக்கா
சேவைகள்கிராமப்புற விவாசகளுக்கு மேம்பட்ட வாழ்வு
உறுப்பினர்கள்
CGIAR
ஆட்சி மொழி
அனைத்தும்
தலைமை இயக்குநர்
என்தரண்யா சங்கிங்கா[1]
மைய அமைப்பு
செயல் நிர்வாகிகள்
சார்புகள்பன்னாட்டு விவசாய ஆராய்ச்சிக்கான ஆலோசனைக் குழு
வலைத்தளம்http://www.iita.org

பன்னாட்டு வெப்பமண்டல வேளாண்மை நிறுவனம் (International Institute of Tropical Agriculture) என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது பயிர்களின் தரம் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும், உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் பாதிப்புகளைக் குறைப்பதற்கும், விவசாயத்திலிருந்து வருவாயினை உருவாக்குவதற்கும், பசி, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் வறுமை ஆகியவற்றைக் குறைக்கும் முக்கிய இலக்குகளுடன் பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படுகிறது.[2] இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கான ஆராய்ச்சி வெப்பமண்டல நாடுகளின் வளர்ச்சித் தேவைகளை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது.[3] இந்த நிறுவனம் 1967-ல் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் நைஜீரியாவின் இபாதானில் அமைந்துள்ளது. பல ஆராய்ச்சி நிலையங்கள் ஆப்பிரிக்கா முழுவதும் பரவியுள்ளன.[3] பல நாடுகள் மற்றும் பன்னாட்டு விவசாய ஆராய்ச்சிக்கான ஆலோசனைக் குழு ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் அறங்காவலர் குழுவால் இந்த அமைப்பு நிர்வகிக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

பன்னாட்டு வெப்பமண்டல வேளாண்மை நிறுவனம் 1967-ல் இபாதானில் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் போர்டு மற்றும் மற்றும் இராக்பெல்லர் அறக்கட்டளைகளின் வெப்பமண்டல உணவுகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான மையத்தை நிறுவுவதற்கான விருப்பத்தின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டது.[4] 1967ஆம் ஆண்டின் 32. ஆணை இயற்றப்பட்டதன் மூலம் இந்த நிறுவனம் நடைமுறைக்கு வந்தது. இந்நிறுவனத்தின் ஆரம்ப இலக்குகளின் ஒரு பகுதியானது, சிறந்த உற்பத்தித் திறன் கொண்ட விவசாய முறையை உருவாக்குதல், நோய்கள் மற்றும் பூச்சிகளை எதிர்க்கும் அதிக மகசூல் தரும் பயிர் வகைகளைத் தேர்ந்தெடுத்து இனப்பெருக்கம் செய்தல் மற்றும் ஈரப்பதம் மற்றும் வெப்பமண்டலப் பகுதிகளில் விவசாய ஆராய்ச்சியை வலுப்படுத்துதல் ஆகும். இந்த நிறுவனம் ஆரம்பத்தில் 1000 ஹெக்டேர் நிலத்தில் அமைந்திருந்தது. இந்த நிறுவனம் தானிய மேம்பாட்டுத் திட்டம், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் மேம்பாட்டுத் திட்டம், விவசாய முறைகள் மற்றும் வேர் மற்றும் கிழங்கு மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை மேம்படுத்தும் முறையானது சோயா அவரை, காராமணி, சேனைக்கிழங்கு மற்றும் மரவள்ளி ஆகியவற்றைக் கொண்டது.[5] இந்நிறுவனம் 1971-ல் பன்னாட்டு விவசாய ஆராய்ச்சிக்கான ஆலோசனைக் குழுவுடன் சேர்ந்தது. இதன் பின்னர் வாழை மற்றும் வாழை போன்ற மர தயாரிப்புகளையும் இதன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் சேர்த்தது.

நிலையங்கள்[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • ஆப்பிரிக்க விவசாய சங்கம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Saginga Nteranya, Director General". IITA. 2019-07-11. பார்க்கப்பட்ட நாள் 2021-12-09.
  2. "International Institute of Tropical Agriculture (IITA)". IFPRI : International Food Policy Research Institute. பார்க்கப்பட்ட நாள் 2020-12-27.
  3. 3.0 3.1 "International Institute of Tropical Agriculture - IITA". ProMusa is a project to improve the understanding of banana and to inform discussions on this atypical crop. (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-27.
  4. Mohan, R. D. R., International Institute of Tropical Agriculture, Symposium on Sustainable Food Production in Sub-Saharian Africa, & Symposium on "Sustainable Food Production in Sub-Saharian Africa". (1992).
  5. Coker Onita. (1987).

வெளி இணைப்புகள்[தொகு]