பன்னாட்டு வான் மற்றும் விண்வெளிச் சட்ட நிறுவனம்
நிறுவனத்தின் சின்னம் | |
| Founder(s) | பேராசிரியர் என்றி வாசன்பெர்க்கு |
|---|---|
| Established | 1985 |
| Mission | விமானப் போக்குவரத்து மற்றும் விண்வெளிச் சட்டத்தின் வளர்ச்சிக்கு பங்களித்தல் |
| இயக்குநர் | பேராசிரியர் முனைவர் சிடீவன் திரக்சல் |
| Staff | Five |
| Location | இலெய்டன், நெதர்லாந்து |
| Coordinates | 52°09′23″N 4°29′26″E / 52.15632°N 4.49058°E |
| Website | http://law.leiden.edu/organisation/publiclaw/iiasl/ |
பன்னாட்டு வான் மற்றும் விண்வெளிச் சட்ட நிறுவனம் (International Institute of Air and Space Law) என்பது நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு முன்னணி ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் நிறுவனமாகும். இந்நிறுவனம் 1985 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது வான்வழி மற்றும் விண்வெளிச் செயல்பாடுகள் தொடர்பான சட்ட மற்றும் கொள்கை விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.[1] இலெய்டன் பல்கலைக்கழகத்திலுள்ள இலெய்டன் சட்டப் பள்ளியின் ஒரு பகுதியாகத் திகழ்கிறது.[1]
இவ்வமைப்பு பல சகோதர நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதுடன், உலகம் முழுவதும் உள்ள தேசிய மற்றும் பன்னாட்டு அமைப்புகளுடனும் தொடர்பைப் பேணி வருகிறது.[1]
விமானம் மற்றும் விண்வெளி சார்ந்த செயல்பாடுகளின் வளர்ச்சியில் தொழில்ரீதியாக ஈடுபட்டுள்ள நபர்களைக் கொண்ட ஒரு பன்னாட்டு ஆலோசனைக் குழுவால் இது வழிநடத்தப்படுகிறது. இக்குழுவினர் ஆண்டுக்கு ஒரு முறையாவது கூடுகின்றனர்.[2]
இந்நிறுவனம் வான்வெளி மற்றும் விண்வெளிச் சட்டம் மற்றும் கொள்கையின் அனைத்து அம்சங்கள் குறித்தும் பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்கிறது.[1]
வரலாறு
[தொகு]1938-ஆம் ஆண்டில் வான்வழிச் சட்டத்தைக் கற்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட முதல் பேராசிரியர் டேனியல் கோட்கூயிசு ஆவார். 1947-ஆம் ஆண்டில் வான்வழிச் சட்டத்திற்கான ஒரு சிறப்புப் பேராசிரியர் பதவி உருவாக்கப்பட்டது. இது 1961-ஆம் ஆண்டில் விண்வெளிச் சட்டத்தையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது. பேராசிரியர் கோட்கூயிசு 1977 வரை அப்பதவியை வகித்தார். அவருக்குப் பின் அப்பதவியை ஏற்ற பேராசிரியர் என்றி வாசென்பெர்க்கு தற்போதைய நிறுவனம் உருவாக்கப்படுவதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார்.
இந்த நிறுவனம் 2011 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் தனது வெள்ளி விழாவைக் கொண்டாடியது.[3]
நோக்கங்கள்
[தொகு]வான் மற்றும் விண்வெளிச் சட்டம் தொடர்பான உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துதல், பன்னாட்டு விமானப் போக்குவரத்து மற்றும் விண்வெளி நடவடிக்கைகளுக்கான சட்டங்கள் மற்றும் கொள்கைகளை ஆய்வு செய்தல், அரசுகள், பன்னாட்டு அமைப்புகள் மற்றும் தொழில்துறையினருடன் இணைந்து சட்ட ஆலோசனைகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளுதல், வான் மற்றும் விண்வெளிச் சட்டம் தொடர்பான கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் பயிற்சிகளை நடத்துதல், பல்கலைக்கழக அளவில் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் பணிகளை மேற்கொள்வதற்கும் ஊக்குவிப்பதற்கும் ஊடாக, வான்வழி மற்றும் விண்வெளிச் சட்டம் மற்றும் அது தொடர்பான கொள்கைகளின் வளர்ச்சிக்கு பங்களித்தல் ஆகியவை இம்மையத்தின் நோக்கங்களாகும்.[1]
வசதிகள்
[தொகு]இந்த நிறுவனம் ஒரு நவீன நூலகத்தைக் கொண்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 5 6 "About International Institute of Air & Space Law". Universiteit Leiden. Retrieved 19 November 2012.
- ↑ "The International Advisory Board of the Institute". Universiteit Leiden. Retrieved 19 November 2012.
- ↑ Blount, P.J. "Leiden International Institute of Air and Space Law to Hold Silver Jubilee Celebration". Res Communis. Retrieved 19 November 2012.