பன்னாட்டு யோகா நாள் கொண்டாட்டப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பலில் பன்னாட்டு யோகா நாள்

பன்னாட்டு யோகா நாள் கொண்டாட்டப் பட்டியல் (List of International Days of Yoga) என்பது, 2015ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு பன்னாட்டு யோகா நாளை பதிவு செய்யும் பட்டியலாகும்.

2015[தொகு]

சீஷெல்ஸில் 1வது பன்னாடு யோகா நாள், 2015

முதல் சர்வதேச யோகா நாள் 21 சூன் 2015 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்தியாவில் தேவையான ஏற்பாடுகளை ஆயுஷ் அமைச்சகம் செய்தது. நரேந்திர மோதி மற்றும் 84 நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் உட்பட 35,985 பேர் புது தில்லி ராஜ்பாத்தில் 35 நிமிடங்களுக்கு 21 ஆசனங்களை (யோகா நிலைகள்) செய்தனர். உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் இந்த நாளை அனுசரித்தனர்.[1] தேசிய மாணவர் படை வீரர்கள் பல இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி "ஒரே சீருடை அணிந்த இளைஞர் அமைப்பால் ஒரே நேரத்தில் மிகப்பெரிய யோகா நிகழ்ச்சி"க்காக லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றனர்.

ராஜபாதையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆயுஷ் அமைச்சகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு கின்னஸ் உலக சாதனைகளை அமைச்சர் ஸ்ரீபாத் யெசோ நாயக் பெற்றுக்கொண்டார். இவர்கள் 35,985 பேர் பங்கேற்ற மிகப்பெரிய யோகா வகுப்பிற்காகவும்,[2] அதிக எண்ணிக்கையிலான நாட்டினர் பங்கேற்றதற்காகவும் (84 நாடுகள்) இச்சாதனை சான்றிதல் வழங்கப்பட்டது. சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மெரினா பசுமை பூங்காவில் 5,000 பேர் யோகா பயிற்சி செய்யக் கூடினர்.[3]

2016[தொகு]

போலந்தின் வார்சாவில் 2வது பன்னாட்டு யோகா நாள், 2016

மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "பன்னாட்டு யோகா நாள், 2015 போல் அதே உற்சாகத்துடன் 2016ஆம் ஆண்டும் இளைஞர்களின் அதிக மற்றும் சுறுசுறுப்பான பங்கேற்புடன் முன்னெடுத்துச் செல்ல இந்திய அரசு முடிவு செய்தது."[4] இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளவிருந்த சண்டிகரில் "தேசிய பெருந்திரள் யோகா பங்கேற்பு" என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை அமைச்சகம் ஏற்பாடு செய்தது.[5]

ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் நிரந்தர தூதுக்குழு 2016 சூன் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்தது. "யோகா அறிஞர்களுடன் உரையாடல் - வளங்குன்றா வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்கான யோகா" என்ற தலைப்பில் ஒரு சிறப்பு நிகழ்வினை மையமாக ஏற்பாடு செய்தது.[6] இந்நிகழ்ச்சிக்கு ஆன்மீக குரு சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமை வகித்தார்.[7]

2017[தொகு]

இந்தியாவின் லக்னோவில் 3வதுபன்னாட்டு யோகா நாள், 2017

2017ஆம் ஆண்டு பன்னாட்டு யோகா நாள் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சி, இலக்னோவில் நடைபெற்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்று 51,000 பங்கேற்பாளர்களுடன் யோகா பயிற்சி செய்தார்.[8][9] இந்தியாவில் உள்ள பல தொழில் அதிபர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.[10][11] நியூயார்க்கு நகரம், டைம்ஸ் சதுக்கத்தில் யோகா பயிற்சி செய்ய ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் கூடினர். ஏப்ரலில்[12] யோகாவை மேம்படுத்துவதற்கு ஜப்பான் நாடாளுமன்ற குழுவினை உருவாக்கியது. சீனாவில், வுக்ஸி நகரில் 10,000 பேர் கலந்துகொண்டது மிகப்பெரிய கூட்டம் நடைபெற்றது.[13] ஏதென்சில், கிரேக்க ஓபன் யோகா தினத்தின் ஒரு பகுதியாக சூன் 25 அன்று சிறப்பு நிகழ்வு நடந்தது.[14] கிவீல், சூன் 18 அன்று சில நூறு பங்கேற்பாளர்களுடன் இந்நாள் கொண்டாடப்பட்டது.[15] அயர்லாந்தில், பங்கேற்பாளர்கள் டப்ளினில் உள்ள சிட்டி கூட்ட அரங்கின் சுற்று அறையில் சந்தித்தனர்.[16] 2017ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் "ஆரோக்கியத்திற்கு யோகா" என்பதாகும்.

2018[தொகு]

இந்தியாவின் டேராடூனில் 4வது பன்னாட்டு யோகா நாள், , 2018

2018ஆம் ஆண்டு யோகா நாள் சிறப்பு நிகழ்வு தேராதூனில் வன ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. பன்னாட்டு யோகா நாளின் நான்காவது ஆண்டு நிறைவைக் கொண்டாடப் பிரதமர் மோதி தலைமையில் 50,000 தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். 2018ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் "அமைதிக்கான யோகா" என்பதாகும். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் 100,000க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி யோகாசனம் செய்து கின்னஸ் சாதனை படைத்தனர்.[17]

2019[தொகு]

5வது பன்னாட்டு யோகா நாள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.[18] முக்கிய நிகழ்ச்சி ராஞ்சியில் நடைபெற்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் 40,000க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.[19] இந்த ஆண்டு நிகழ்வின் கருப்பொருள் "இதயத்திற்கான யோகா" என்பதாகும். இந்நிகழ்ச்சியில், இந்திய மக்களிடம் பிரதமர் உரையாற்றினார். உடல், மனம், சமூகம் மற்றும் நமது காலநிலையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, "எங்கள் குறிக்கோளாக இருக்கட்டும் - அமைதி, நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கான யோகா" எனக் கொண்டாடப்பட்டது. யோகா, 'தடுப்பு சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம்' அமைப்பின் தூணாக மாற்ற அரசாங்கம் செயல்படும் என்றும் அவர் கூறினார்.[20][21]

2020[தொகு]

2020 ஆம் ஆண்டின் கருப்பொருள் பெருந்தொற்றினை அடிப்படையாகக் கொண்டு, "வீட்டில் யோகா மற்றும் குடும்பத்துடன் யோகா" என அமைந்தது.[22][23] பன்னாட்டு யோகா நாளை முன்னிட்டு பல்காரியா பிரதமர் பாய்கோ போரிசோவ், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு காணொலி காட்சிச் செய்தி ஒன்றைப் பதிவு செய்து அனுப்பினார்.[24]

2021[தொகு]

2021ஆம் ஆண்டின் கருப்பொருள் "நல்வாழ்வுக்கான யோகா". கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியtஹ் தூதரகம், நேருக்கு நேர் யோகா நிகழ்வுகளுக்குப் பதிலாக, ஐக்கிய நாடுகளின் வலைத் தொலைக்காட்சி மூலம் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Massive turnout for Yoga day". 21 June 2015.
  2. "Largest yoga class". Guinness world record. 21 June 2015. பார்க்கப்பட்ட நாள் 22 June 2015.
  3. "San Francisco, Silicon Valley Yogis Join International Yoga Day". Siliconvalleyoneworld.com. 19 June 2015. பார்க்கப்பட்ட நாள் 13 April 2018.
  4. "Experts Training Government Staff For Upcoming International Yoga Day". என்டிடிவி. 5 June 2016. பார்க்கப்பட்ட நாள் 13 June 2016.
  5. "PM Modi To Attend International Yoga Day At Chandigarh". என்டிடிவி. 22 May 2016. பார்க்கப்பட்ட நாள் 13 June 2016.
  6. "Sadhguru to lead yoga session at UN on 2nd International Yoga Day". இந்தியன் எக்சுபிரசு. 28 May 2016. பார்க்கப்பட்ட நாள் 13 June 2016.
  7. "Everything you need to know about International Yoga Day" பரணிடப்பட்டது 2017-01-19 at the வந்தவழி இயந்திரம், Dainik Bhaskar 20 June 2016.
  8. Shylaja Varma (21 June 2017). "International Yoga Day 2017: Rainy Start To Yoga Day, PM Narendra Modi Leads Asanas In Lucknow – Highlights". Ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 12 April 2018.
  9. "Thousands join India's Modi, hit the mat for International Yoga Day". Reuters.com. 21 June 2017. பார்க்கப்பட்ட நாள் 12 April 2018.
  10. Ramarko Sengupta (21 June 2017). "International Yoga Day: CEOs who're into the ancient science". Indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 12 April 2018.
  11. "We asked nine of India's CEOs and entrepreneurs to tell us their favourite yoga pose". Qz.com. 21 June 2017. பார்க்கப்பட்ட நாள் 12 April 2018.
  12. "International Yoga Day 2017: A Look at the Celebrations Around the World". Zenyogastrap.com. 7 June 2016. Archived from the original on 20 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 12 April 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  13. "International Yoga Day: Record 10,000 people participate in event in China's largest ever congregation". Firstpost.com. 25 June 2017. பார்க்கப்பட்ட நாள் 12 April 2018.
  14. "Celebration of the 3rd International Day of Yoga in Greece". Elinepa.org. Archived from the original on 14 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 13 April 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  15. Oleg Petrasiuk; Denys Krasnikov (18 June 2017). "Namaste: Hundreds gather in Kyiv to celebrate International Yoga Day (PHOTOS)". Kyivpost.com. பார்க்கப்பட்ட நாள் 13 April 2018.
  16. "International Yoga Day 2017". Yogatherapyireland.com. 1 August 2017. பார்க்கப்பட்ட நாள் 13 April 2018.
  17. "International Yoga Day | Rajasthan records biggest yoga gathering" (in en-IN). The Hindu. 2018-06-21. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/live-updates-international-yoga-day-observed-across-the-world/article24215787.ece. 
  18. "Yoga Day Live updates: World celebrates International Yoga Day 2019".
  19. "Yoga Day 2019: PM Modi Yoga address-10 Key Points". 21 June 2019.
  20. ""Yoga for All, All for Yoga," Says PM at Mega Event in Ranchi: 10 Points".
  21. "International Yoga Day 2019: 5th International Yoga Day Celebrations in Chandigarh". NewsGraph (in ஆங்கிலம்). Archived from the original on 21 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 21 June 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  22. "International Yoga Day 2020 India: Theme,Importance,History,Quotes". S A NEWS (in அமெரிக்க ஆங்கிலம்). 19 June 2020. பார்க்கப்பட்ட நாள் 20 June 2020.
  23. "International Yoga Day 2020: Video Contest, Yoga at Home, Yoga with Family Theme Campaign Launched Get Details". Jagranjosh.com. 18 June 2020. பார்க்கப்பட்ட நாள் 20 June 2020.
  24. "Бербатов се подготвя за Индия с посещение в посолството (СНИМКИ)" [Borissov congratulates Indian Prime Minister on Yoga Day (VIDEO)]. bTV Новините (in பல்கேரியன்). 21 June 2020. பார்க்கப்பட்ட நாள் 21 October 2021.