உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்
International Translation Day
நாள்30 செப்டம்பர்
நிகழ்வுஆண்டு தோறும்
புனித ஜெரோம் தனது படிப்பறையில். டொமெனிக்கோ கிர்லாந்தையோ வரைந்தது.

பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் (International Translation Day) ஆண்டுதோறும் விவிலிய மொழிபெயர்ப்பாளர் புனித ஜெரோமின் (கிபி 347-420) நினைவு நாளான செப்டம்பர் 30ஆம் நாள் கொண்டாடப்படும் ஒர் சிறப்பு நாளாகும்.[1] ஜெரோம் மொழிபெயர்ப்புகளின் பாதுகாவலர் என அழைக்கப்படுகிறார்.

1953ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 'பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பினால்' இந்த சிறப்புத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1991 ஆம் ஆண்டில் இவ்வமைப்பு பல்வேறு நாடுகளிலும் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளோர் தம் ஒருமைப்பாட்டைக் காட்டும் முகமாக இந்நாளைப் பன்னாட்டு ரீதியில் கொண்டாட அழைப்பு விடுத்தது.

தமிழகத்தின் பங்கு

[தொகு]

தமிழகத்தில் எவ்வாறு எங்கெங்கே, யார்யாரால் பன்னாட்டு மொழிபெயர்ப்பு தினம் கொண்டாடப்பட்டது என்ற மூலங்கள் இல்லை. தமிழ்நாட்டில் மொழிபெயர்ப்புக்கென்று அரசு சார்பில் சில தனிப்பட்ட துறைகள் இயங்குவது அறியப்படுகிறது. பல்கலைக்கழங்களில், குறிப்பாக தமிழ் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புக்கென்று தனித்துறை உள்ளது. 1980களில் தமிழ்நாடு பாடநூல் கழகம் பல நூல்களை தமிழ் வழி பாடதிட்டத்திற்கேன்று மொழிபெயர்த்து வெளியிட்டன, அவற்றுள் பல நேரடி மொழிபெயர்ப்பு நூல்களாகும்.

பல மொழிபெயர்ப்பு நூல்கள் வழக்கமான, வறட்சியான பாடத்திட்ட நூல்கள்களாக இருப்பினும், சில நூல்கள் அபூர்வமாகவும், அருமையாகவும் இடம்பெற்றிருந்ததன. இருப்பினும் அந்த நூல்கள் பயன்பாடற்று குப்பைகளாயின. அனைத்து பொது நூலகங்களுக்கும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் அவைகள் இலவசமாக அளிக்கப்பட்டு கேட்பாரற்று கிடந்ததன.[சான்று தேவை]

1990களில் சில இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்களை தமிழக அரசு வெளியிட்டது. அதில் கலீல் கிப்ரான்[2] எழுதிய தீர்க்கதரிசி, ஆலிவர் கோல்ட்ஸ்மித் எழுதிய வேக்பீல்டு பாதிரியார்[3] போன்ற சில ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் குறிப்பிடத்தக்கது.

உசாத்துணையும் வெளி இணைப்புகளும்

[தொகு]
  1. "The history of International Translation Day|வலை காணல்:23/12/2015" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-12-23.
  2. தீர்க்கதரிசி
  3. வேக்பீல்டு|பாதிரியார்