பன்னாட்டு மேம்பாட்டுக்கான அமெரிக்க முகமை
![]() USAIDன் இலச்சினை | |
![]() USAIDன் கொடி | |
![]() USAIDன் அடையாளம் | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | நவம்பர் 3, 1961 |
முன்னிருந்த அமைப்பு |
|
தலைமையகம் | ரானல்ட் ரேகன் பன்னாட்டு வணிக மையம் வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
குறிக்கோள் | "அமெரிக்க மக்களிடமிருந்து" |
பணியாட்கள் | 10,000க்கும் மேல் (நிதியாண்டு 2023)[1] |
ஆண்டு நிதி | $40 பில்லியன் (நிதியாண்டு) |
அமைப்பு தலைமை |
|
வலைத்தளம் | usaid |
அடிக்குறிப்புகள் | |
[2] |
பன்னாட்டு மேம்பாட்டுக்கான அமெரிக்க முகமை (United States Agency for International Development (சுருக்கமாக:USAID) வெளிநாட்டு பொதுமக்களுக்கான உதவி மற்றும் மேம்பாட்டு உதவிகளை நிர்வகிப்பதற்குப் பொறுப்பான ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு தன்னாட்சி நிறுவனமாகும். அமெரிக்காவின் வெளிநாட்டு உதவி அமைப்புகள் மற்றும் திட்டங்களை ஒரே நிறுவனத்தின் கீழ் ஒன்றிணைப்பதற்காக 1961 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 35வது அதிபர் ஜான் எஃப். கென்னடியால் கொண்டு வரப்பட்ட சட்டாத்தின் கீழ் USAID அமைப்பு, ஐக்கிய அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளரின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறது.
இம்முகமை உலகளாவிய சுகாதாரம், பேரிடர் நிவாரணம், சமூகப் பொருளாதார மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஜனநாயக நிர்வாகம் மற்றும் கல்வி ஆகியவற்றின் திட்டங்களை செயல்படுத்துகிறது. 2001 முதல் சராசரியாக ஆண்டுக்கு சுமார் $23 பில்லியன் செலவினங்களுடன், USAID உலகின் மிகப்பெரிய உதவி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இம்முகமை 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பணிகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா பகுதிகளுக்கு இம்முகமை நிதியுதவி வழங்கி வருகிறது.
இரண்டாவது முறையான ஐக்கிய அமெரிக்காவின் அதிபராக சனவரி 2025 ல் பதவியேற்ற டோனால்ட் டிரம்ப் இம்முகமையை கலைக்கப்படுவதாக நிர்வாக ஆணை மூலம் அறிவித்தார். மேலும் இம்முகமையின் பணியாளர்களின் எண்ணிக்கை 10,000 இருந்து 290 ஆக குறைக்க திட்டமிட்டுள்ளார்.[4][5][6] டோனால்டு டிரம்பின் இந்நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது.[7][8]ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் முகமையை கலைத்தல் மற்றும் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்தல் போன்ற அதிபரின் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.[9]டோனால்டு டிரம்ப் நிர்வாகம், முகமையை கலைத்தல் மற்றும் பணியாளர் ஆட்குறைப்பு கோரி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
தோற்றம்
[தொகு]ஐக்கிய அமெரிக்கப் பேரவை 4 செப்டம்பர் 1961 அன்று வெளிநாடுகளுக்கான உதவிச் சட்டத்தை நிறைவேற்றியது. இச்சட்டத்தின் கீழ் அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடியின் நிர்வாக ஆணையால் பன்னாட்டு மேம்பாட்டுக்கான அமெரிக்க முகமை நிறுவப்பட்டது.[10]. 1998ஆம் ஆண்டு முதல் இம்முகமை தன்னாட்சி நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. [11][12]இம்முகமை ஐக்கிய அமெரிக்காவின் அதிபர், வெளியுறவு அமைச்சர் மற்றும் பாதுகாப்புக் குழுவின் மேற்பார்வையில் இயங்குகிறது.[13]
நோக்கங்கள்
[தொகு]குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் பல்வேறு நோக்கங்களுக்காக அமெரிக்க அரசாங்க திட்டங்களை நிர்வகிக்க பன்னாட்டு மேம்பாட்டுக்கான அமெரிக்க முகமை பயன்படுத்தப்பட்டது. அவைகள் பின்வருமாறு:
- பேரிடர் நிவாரணம்
- வறுமை ஒழிப்பு
- சுகாதார மேம்பாடு
- சுற்றுச்சூழல் உட்பட உலகளாவிய பிரச்சினைகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு
- சமூகப் பொருளாதார மேம்பாடு
- அமெரிக்க இருதரப்பு நலன்கள்
அதிபர் டோனால்டு டிரம்பின் இரண்டாம் முறை நிர்வாகத்தில்
[தொகு]டோனால்டு டிரம்பு இரண்டாவது முறையாக ஐக்கிய அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்ற உடன் 24 சனவரி 2025 அன்று இம்முகமை மூலம் அளிக்கப்படும் நிதியுதவிகளை நிறுத்த நிர்வாக ஆணை பிறப்பித்தார்.[5][6] இதனை ஒட்டி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இம்முகமை மூலம் அளிக்கப்படும் மனிதாபிமான நிதியுதவிகளுக்கு மட்டும் விலக்கு அளித்தார்.[14][15]விலக்கு அளிக்கப்பட்ட போதிலும், முகமை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நிறைய குழப்பங்கள் உள்ளது.[16]இரண்டாவது டிரம்ப் நிர்வாகம் நடைமுறைப்படுத்திய அமெரிக்காவின் உலகளாவிய உதவி கிட்டத்தட்ட முற்றிலுமாக முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1,000க்கும் மேற்பட்ட முகமை ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.[17]27 சனவரி 2025 அன்று பன்னாட்டு மேம்பாட்டுக்கான அமெரிக்க முகமை இணையதளம் முடக்கப்பட்டது.[18]அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ 3 பிப்ரவரி 2025 அன்று இம்முகமையின் தற்காலிக நிர்வாகியாக ஒருவரை நியமித்தார்.[19]அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகள் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட பன்னாட்டு மேம்பாட்டுக்கான அமெரிக்க முகமையை கலைத்தல் மற்றும் பணியாளர்களை பணி நீக்கம் செய்தல் போன்ற அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகள் கேள்விக்குறியாகியுள்ளது.[20][21][22]

முக்கியமான செயல்பாடுகள் மற்றும் சிறப்பாக நியமிக்கப்பட்ட திட்டங்களுக்கு பொறுப்பாக் நியமிக்கப்பட்ட பணியாளர்களைத் தவிர, பிற அனைத்துப் பணியாளர்கள் பிப்ரவரி 6, 2025 அன்று உலகளவில் நிர்வாக விடுப்பில் வைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. [23]பிப்ரவரி 6, 2025 அன்று 10,000 ஊழியர்களில் 294 பேர் மட்டுமே பணியில் தக்க வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[24][25]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ U.S. Agency for International Development: An Overview (Report). Congressional Research Service. January 6, 2025. Retrieved February 11, 2025.
- ↑ "USAID History". USAID. Archived from the original on 2012-05-15. Retrieved 2014-08-07.
- ↑ Luscombe, Richard (February 3, 2025). "Marco Rubio appoints himself head of USAid as workers locked out of office". The Guardian. Retrieved February 3, 2025.
- ↑ Demirjian, Karoun (February 6, 2025). "Nearly All Jobs Are Said to Be Cut at Aid Agency". The New York Times. https://www.nytimes.com/live/2025/02/06/us/president-trump-news/usaid-job-cuts.
- ↑ 5.0 5.1 Escritt, Thomas; McPherson, Poppy; Rigby, Jennifer (January 29, 2025). "Trump's freeze on US aid rings alarm bells from Thailand to Ukraine". MSN. https://www.msn.com/en-gb/news/world/trumps-freeze-on-us-aid-rings-alarm-bells-from-thailand-to-ukraine/ar-AA1y0Ukp.
- ↑ 6.0 6.1 Knickmeyer, Ellen; Amiri, Farnoush (January 24, 2025). "State Department freezes new funding for nearly all US aid programs worldwide". Associated Press News இம் மூலத்தில் இருந்து 2025-01-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250124191950/https://apnews.com/article/state-department-trump-foreign-aid-bf047e17ef64cb42a1a1b7fdf05caffa.
- ↑ Bond, Shannon; McLaughlin, Jenna; Tanis, Fatma (February 6, 2025). "USAID unions sue Trump administration to halt 'unconstitutional and illegal' cuts". NPR. https://www.npr.org/2025/02/06/g-s1-46885/usaid-cuts-state-department-trump-rubio.
- ↑ Mackey, Robert (February 6, 2025). "Government workers sue Trump and Rubio over 'catastrophic' USAid cuts". The Guardian. https://www.theguardian.com/us-news/2025/feb/06/trump-rubio-sued-usaid-cuts.
- ↑ Knappenberger, Ryan (February 13, 2025). "Federal judge extends pause protecting thousands of USAID employees from being placed on leave". Courthouse News Service.
The order is now in place until Feb. 21, by which time U.S. District Judge Carl Nichols will decide whether he can block wider dismantling of the agency.
- ↑ "Celebrating Sixty Years of Progress". USAID History. USAID. Archived from the original on 2023-01-28.
- ↑ Bridgeman, Tess (1 February 2025). "Can the President Dissolve USAID by Executive Order?". Just Security. Retrieved 19 March 2025.
- ↑ McCabe, Emily M. (February 3, 2025). USAID under the Trump Administration (Report). Congressional Research Service. Retrieved February 10, 2025.
- ↑ "101.2 Primary Responsibilities". ADS 101 – Agency Programs and Functions (PDF). p. 3. Archived from the original (PDF) on November 18, 2003. Retrieved 22 December 2011.
- ↑ DeYong, Karen; Hudson, John; Ryan, Missy; Horton, Alex (2025-01-28). "Rubio backtracks on near total foreign aid freeze, issues humanitarian waiver". Washington Post. https://www.washingtonpost.com/national-security/2025/01/28/state-department-foreign-aid-trump-waiver.
- ↑ Hansler, Jennifer (2025-01-29). "As humanitarian officials warn people could die as a result of Trump's foreign aid halt, Rubio issues new waiver". CNN Politics (in ஆங்கிலம்). Retrieved 2025-01-29.
- ↑ Rigby, Jennifer; Kumwenda-Mtambo, Olivia; Fick, Maggie (January 29, 2025). "Despite waiver from U.S. on aid freeze, health and humanitarian groups uncertain if they can proceed". Reuters. https://www.reuters.com/world/despite-waiver-us-aid-freeze-health-humanitarian-groups-uncertain-if-they-can-2025-01-29/.
- ↑ Williams, Abigail; Hillyard, Vaughn; Alcindor, Yamiche (February 2, 2025). "USAID security leaders removed after refusing Elon Musk's DOGE employees access to secure systems". NBC News. https://www.nbcnews.com/politics/national-security/usaid-security-leaders-removed-refusing-elon-musks-doge-employees-acce-rcna190357.
- ↑ Schreiber, Melody (February 3, 2025). "Why does Musk want USAID 'to die'? And why did its website disappear?". NPR (in ஆங்கிலம்). Retrieved February 3, 2025.
- ↑ Cook, Sara; Jacobs, Jennifer (February 3, 2025). "USAID to be merged into State Department, 3 U.S. officials say". CBS News.
- ↑ Landay, Jonathan; Holland, Steve; Psaledakis, Daphne (January 31, 2025). "Trump administration explores bringing USAID under state department". Reuters. https://www.reuters.com/world/us/trump-administration-explores-bringing-usaid-under-state-department-sources-say-2025-01-31/.
- ↑ Novak, Matt (February 1, 2025). "USAID Website Goes Offline as Trump Continues to Dismantle Government". Gizmodo. https://gizmodo.com/usaid-website-goes-offline-as-trump-continues-to-dismantle-government-2000557890.
- ↑ Murray, Conor (February 1, 2025). "USAID Website Appears To Be Offline As Trump Administration Reportedly Moves To Put It Under State Department Control". Forbes. https://www.forbes.com/sites/conormurray/2025/02/01/usaid-website-appears-to-be-offline-as-trump-administration-reportedly-moves-to-put-it-under-state-department-control/.
- ↑ "USAID Announcement". USAID. Archived from the original on February 5, 2025. Retrieved 2025-02-04.
- ↑ Matza, Max; FitzGerald, James (February 7, 2025). "USAID could slash staff to hundreds after placing most on leave". BBC. Retrieved February 7, 2025.
- ↑ Landay, Jonathan; Zengerle, Patricia; Banco, Erin (February 6, 2025). "Trump administration to keep only 294 USAID staff out of over 10,000 globally, sources say". Reuters. Retrieved February 7, 2025.
ஆதாரங்கள்
[தொகு]- Andrews, Stanley (1970). "Oral History Interview with Stanley Andrews". Harry S. Truman Library. Retrieved 15 June 2017.
- Bollen, Kenneth; Paxton, Pamela; Morishima, Rumi (June 2005). "Assessing International Evaluations: An Example From USAID's Democracy and Governance Program". American Journal of Evaluation 26 (2): 189–203. doi:10.1177/1098214005275640. https://archive.org/details/sim_american-journal-of-evaluation_2005-06_26_2/page/n50.
- Center for American Progress (August 14, 2008). "U.S. Aid to Afghanistan by the Numbers". Retrieved 13 June 2017.
- Center for American Progress (August 21, 2008). "U.S. Aid to Pakistan by the Numbers". Retrieved 13 June 2017.
- Dwight D. Eisenhower Library (August 2001). "Documents relating to foreign aid, 1948–90: Deposited by Albert H. Huntington Jr" (PDF). Archived from the original (PDF) on April 12, 2019. Retrieved 13 June 2017.
- Hessmiller, Rose (Jan 10, 2013). "White Paper: U.S. Foreign Aid Meeting the Challenges of the Twenty-first Century". Natural Resources Management and Development Portal. USAID. Archived from the original on 2020-03-06. Retrieved 2019-02-25.
- Johnston, Jake; Main, Alexander (April 2013). "Breaking Open the Black Box: Increasing Aid Transparency and Accountability in Haiti" (PDF). cepr.net. Center for Economic and Policy Research. Retrieved 13 June 2017.
- Millikan, M. F.; Rostow, W. W. (1957). A proposal : key to an effective foreign policy. New York: Harper & Bros.
- Moseley, William G. (August 8, 2006). "America's lost vision: The demise of development". The New York Times. https://www.nytimes.com/2006/08/08/opinion/08iht-edmoseley.2420617.html.
- National Research Council (2008). Improving Democracy Assistance: Building Knowledge Through Evaluations and Research. Washington, D.C.: The National Academies Press. ISBN 978-0-309-11736-4.
- Shah, Arup (September 28, 2014). "Foreign Aid for Development Assistance". Global Issues. Retrieved 13 June 2017.
- Tarnoff, Curt (21 July 2015). U.S. Agency for International Development (USAID): Background, Operations, and Issues (Report).
- USAID (April 1995). "Historical Bibliography of the United States Agency for International Development" (PDF). PN-ABU-368. Archived from the original (PDF) on October 4, 2006. Retrieved 13 June 2017.
- USAID (2011-08-04). "Policy Framework for Bilateral Foreign Aid – Mandatory Reference for ADS Chapter 101 and 201" (PDF). Archived from the original (PDF) on 2019-04-12. Retrieved 25 February 2019.
- USAID. "The Automated Directives System (ADS)". Operational Policy (ADS). Archived from the original on June 11, 2012. Retrieved 21 June 2017.
- USAID (January 2006). "USAID Primer: What We Do and How We Do It" (PDF). PD-ACG-100. Archived from the original (PDF) on September 23, 2006. Retrieved 13 June 2017.
- USAID (2016). U.S. Overseas Loans and Grants: Obligations and Loan Authorizations, July 1, 1945 – September 30, 2015 (Report). PB-AAF-100. Archived from the original on June 27, 2017. Retrieved 13 June 2017.
- U.S. Department of State (June 1961). Highlights of President Kennedy's New Act for International Development (PDF). PC-AAB-618. Archived from the original (PDF) on September 26, 2007. Retrieved 13 June 2017.
மேலும் படிக்க
[தொகு]- Bingham, Jonathan Brewster (1953). Shirt-Sleeve Diplomacy: Point 4 in Action. John Day & Co.
- Fiscal Year 2024 Agency Financial Report (PDF) (Report). Washington, D.C.: U.S. Agency for International Development. Archived from the original (PDF) on 2025-01-01.
வெளி இணைப்புகள்
[தொகு]- United States Agency for International Development at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது சனவரி 29, 2025)
- Official website
- Office of Inspector General, U.S. Agency for International Development
- Agency for International Development in the Federal Register
- Agency for International Development on USAspending.gov
- Records of the Agency for International Development (1935–89) in the National Archives