பன்னாட்டு மலை அருங்காட்சியகம்
அமைவிடம் | பொக்காரா, நேபாளம் நேபாளம் |
---|---|
ஆள்கூற்று | 28°11′24″N 83°58′58″E / 28.190065°N 83.982860°E |
வகை | வரலாற்று அருங்காட்சியகம் |
வலைத்தளம் | www |
பன்னாட்டு மலை அருங்காட்சியகம் (International Mountain Museum) நேபாள நாட்டின் பொகாரா நகரத்தில் அமைந்துள்ளது.[1]
விளக்கம்
[தொகு]பன்னாட்டு மலை அருங்காட்சியகத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் இலட்சத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். உலகெங்கிலும் உள்ள மலை மற்றும் மலையேறுதல் தொடர்பான கடந்த கால மற்றும் தற்போதைய முன்னேற்றங்கள் பதிவுசெய்யப்பட்டு இங்கு ஆவணப்படுத்துகிறது மற்றும் காட்சிப்படுத்துகிறது.[2] அருங்காட்சியகத்தில் மூன்று முக்கிய கண்காட்சி அரங்குகள் உள்ளன: இமயமலை அரங்கு, புகழ் அரங்கு, உலக மலைகள் அரங்கு என்பவை அம்மூன்று அரங்குகளாகும். அருங்காட்சியகத்தின் உள்ளே, நேபாள மக்களின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் மதிப்புகளை பிரதிபலிக்கும் முயற்சியாக, புகழ்பெற்ற சிகரங்கள், புகழ்பெற்ற மலையேறுபவர்களின் விளக்கங்கள், மலைவாழ் மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை, புவியியல் உள்ளிட்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பற்றிய கண்காட்சிகள் உள்ளன. [3]
காட்சியகம்
[தொகு]-
அருங்காட்சியகத்தில் மலையேறுபவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச்சின்னம்
-
அருங்காட்சியக மண்டபத்திற்கு செல்லும் பாதையில் உயிரிழந்த மலையேறுபவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச்சின்னம்
-
மாரிசு எர்சாக்கு ஏறும் சுவர் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ளது
-
பதனப்படுத்தப்பட்ட நேபாளச் சிறுத்தை
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ International Mountain Museum, Museum in Pokhara
- ↑ "International Mountain Museum in Pokhara.". Holiday Nepal, n.d. Web. 12 Dec. 2013.
- ↑ "International Mountain Museum, Pokhara." Explorehimalaya.com, Explore Himalaya Tourism News, Trip Reports, Travel Guide & Photos. 13 Dec. 2010. Web. 12 Dec. 2013.