பன்னாட்டு மருத்துவ இயற்பியல் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்னாட்டு மருத்துவ இயற்பியல் நாள் (International Day of Medical Physics) மருத்துவத்திற்கு இயற்பியலின் பங்களிப்பினைக் கொண்டாடும் வகையில் நவம்பர் 7 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. மருத்துவ இயற்பியலுக்கான பன்னாட்டு அமைப்பு (IOMP) கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்நாளில் அனைத்து நாடுகளிலுமுள்ள மருத்துவ இயற்பியலாளர்கள் கூடி இந்நாளை 2013 ஆம் ஆண்டு முதல் கொண்டாடுகிறார்கள்.[1] இந்நாள் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி போலந்து நாட்டில் 1867 நவம்பர் ஏழாம் நாள் பிறந்ததையும் குறிக்கும்.

மருத்துவத் துறைக்கு இயற்பியலின் பங்கு அண்மை காலங்களில் மிகவும் அதிகரித்துள்ளது. கணினியுடன் செயல்படும் தளக்கதிர் படயியல் (Computed tomography), காந்த ஒத்ததிர்வு படம் (Magnetic resonance imaging ), பாசிட்ரான் உமிழ்பு தளக்கதிர் படம் (Positron emmision tomography) முதலியன உடலின் உட்பகுதியினை காணவும் அவை செயல்படும் முறையினையும் தெளிவாகக் காட்டவல்லன. இயற்பியலும் பொறியியல் தொழில்நுட்பமும் இணைந்து கதிர்மருத்துவத்திற்கான பல நுட்பமான கருவிகளைக் கொடுத்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]