பன்னாட்டு பௌத்த அருங்காட்சியகம்

ஆள்கூறுகள்: 7°17′41″N 80°38′27″E / 7.29472°N 80.64083°E / 7.29472; 80.64083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்வதேச பௌத்த நூதனசாலை
International Buddhist Museum (Temple of the Tooth , Kandy).jpg
சர்வதேச பௌத்த நூதனசாலை
Map
நிறுவப்பட்டது2011
அமைவிடம்கண்டி, இலங்கை
ஆள்கூற்று7°17′41″N 80°38′27″E / 7.29472°N 80.64083°E / 7.29472; 80.64083
வகைமதம்
வலைத்தளம்International Buddhist Museum website

பன்னாட்டு பௌத்த அருங்காட்சியகம் அல்லது பன்னாட்டு பௌத்த நூதனசாலை (International Buddhist Museum) என்பது இலங்கையில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இதுவே உலகிலிலேயே முதலாவதாகக் கட்டப்பட்ட பௌத்த அருங்காட்சியகம் ஆகும்.[1] இது கண்டியில் தலதா மாளிகைக்கும் கண்டி தேசிய அருங்காட்சியகத்துக்கும் அடுத்ததாக அமைந்துள்ளது. இது கண்டியில் மன்னாகவிருந்த முதலாம் விமலதர்மசூரியனின் மாளிகை அமைந்துள்ள இடத்திலேயே தற்போது இயங்குகின்றது.[2] அவ்விடத்தில் பின்னர் பிரித்தானியரால் விக்டோரியா அரசியின் காலத்தில் கட்டடம் கட்டப்பட்டு கச்சேரியாகப் பயன்படுத்தப்பட்டது.

இவ்வருங்காட்சியகத்தை அமைப்பதற்கு இலங்கை, இந்தியா, சீனா, ஜப்பான், வங்காளதேசம், மியான்மார், தாய்லாந்து, இந்தோனேசியா, நேபாளம், பாக்கித்தான், கொரியா, லாவோசு, வியட்நாம், கம்போடியா, மலேசியா, பூட்டான், ஆப்கானித்தான் ஆகிய 17 நாடுகள் தமது பங்களிப்பையும் ஆற்றியுள்ளன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Lanka President declares open the International Buddhist Museum". 29 மே 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 May 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "World's Buddhist countries to be showcased at museum in Kandy". 29 May 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Contributions". 29 May 2015 அன்று பார்க்கப்பட்டது.