உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னாட்டு பூஞ்சையியல் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னாட்டு பூஞ்சையியல் சங்கம்
International Mycological Association
சுருக்கம்IMA
உருவாக்கம்1971
வகைஇலாப நோக்கற்ற நிறுவனம்
சட்ட நிலைதொழில்முறை நிறுவனம்
நோக்கம்பூஞ்சையியல்
தலைமையகம்எக்செட்டர், ஐக்கிய இராச்சியம்
சேவை பகுதி
உலகம் முழுவதும்
உறுப்பினர்கள்
உலகப் பூஞ்சையியல் ஆய்வாளர்கள்.
வலைத்தளம்www.ima-mycology.org

பன்னாட்டு பூஞ்சையியல் சங்கம் (International Mycological Association) என்பது பூஞ்சைகள் பற்றிய ஆய்வுகளை ஊக்குவிக்கும் உலகளாவிய அறிவியல் அமைப்பாகும். உலகம் முழுவதும் உள்ள பூஞ்சை ஆய்வாளர்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இச்சங்கம் நிறுவப்பட்டது. 1971-ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தின் எக்செட்டர் நகரில் நடைபெற்ற முதலாவது பன்னாட்டு பூஞ்சையியல் மாநாட்டின் போது பன்னாட்டு பூஞ்சையியல் சங்கம் நிறுவப்பட்டது.[1][2]

பன்னாட்டு பூஞ்சையியல் சங்க நிறுவனம் பன்னாட்டு பூஞ்சையியல் சங்க பூஞ்சைகள் என்ற திறந்த அணுகல் கொண்ட அறிவியல் இதழை வெளியிடுகிறது.

உலகம் முழுவதிலும் உள்ள 30,000-எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பூஞ்சையியல் நிபுணர்களின் நலன்களைப் இச்சங்கம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.[3]

முக்கிய நோக்கங்கள்

[தொகு]
  • பூஞ்சைகள் குறித்த அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவித்தல்.
  • உலக நாடுகளின் பூஞ்சையியல் சங்கங்களுக்கு இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துதல்.
  • பூஞ்சைகளின் வகைப்பாடு, பெயரிடல் மற்றும் உயிரியல் தொடர்பான ஆய்வுகளை ஆதரித்தல்.
  • இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு வாய்ப்புகள் மற்றும் ஆதரவு வழங்குதல்.

செயல்பாடுகள்

[தொகு]
  • பன்னாட்டு பூஞ்சையியல் காங்கிரசு எனப்படும் உலக பூஞ்சையியல் மாநாட்டை காலம்தோறும் நடத்துகிறது.
  • சிறந்த பூஞ்சை ஆய்வாளர்களுக்கு விருதுகள் மற்றும் கௌரவங்களை வழங்குகிறது.
  • பூஞ்சை உயிரியல், சூழலியல், மருத்துவ பூஞ்சையியல் மற்றும் வேளாண் பூஞ்சையியல் போன்ற துறைகளில் அறிவியல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது.

விருதுகள்

[தொகு]

பூஞ்சையியலுக்கான பங்களிப்புகளுக்காக இந்த சங்கம் பல விருதுகளை வழங்குகிறது:[4]

  • நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் பூஞ்சையியலாளர்களின் தொழில்முறை சாதனைகளின் அடிப்படையில் வழங்கப்படும் டி பேரி பதக்கம்
  • பூஞ்சையியல் உலகிற்கு ஆற்றிய சேவைகளுக்காக வழங்கப்படும் ஐன்சுவொர்த்து பதக்கம்
  • உலகெங்கிலும் உள்ள பல்வேறு பிராந்தியங்களில் பணிபுரியும் இளம் பூஞ்சையியலாளர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் தொடர் பதக்கங்கள் மூலம் இளம் பூஞ்சையியலாளர்களுக்கான விருதுகள்: எத்தேல் மேரி டோய்ட்ச்சு பதக்கம் (ஆப்பிரிக்கா); கெய்சுகே துபாக்கி பதக்கம் (ஆசியா); கார்லோசு லூயிசு சுபெகாசினி பதக்கம் (இலத்தீன் அமெரிக்கா); எலியாசு மேக்னசு பிரைசு பதக்கம் (ஐரோப்பா); ஆர்தர் என்றி ரெச்சினால்ட்டு புல்லர் பதக்கம் (வட அமெரிக்கா); டேனியல் மெக்கல்பைன் பதக்கம் (ஆஸ்திரேலியா)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Simmons EG. (2011). "The International Mycological Association: its history in brief with summaries of its International Mycological Congresses and diverse international relationships". IMA Fungus 1 (1): 18–100. doi:10.5598/imafungus.2010.01.01.01. பப்மெட்:22679567. open access publication - free to read
  2. Hubertus Antonius van der Aa (1993). "International Mycological Association". Coolia 36 (1): 23–25. https://archive.org/details/coolia_1993_36_1/page/23.
  3. "The International Mycological Association". International Mycological Association. Archived from the original on 12 February 2015. Retrieved 22 November 2014.
  4. "Awards". International Mycological Association. Retrieved 8 October 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]