பன்னாட்டு பனி வளைதடியாட்ட கூட்டமைப்பு
சுருக்கம் | IIHF |
---|---|
உருவாக்கம் | 15 மே 1908 |
நிறுவப்பட்ட இடம் | பாரிஸ், பிரான்சு |
வகை | விளையாட்டு கூட்டமைப்பு |
சட்ட நிலை | பனி வளைதடியாட்ட ஆட்சி மன்றக் குழு |
நோக்கம் | விளையாட்டு நிர்வாகம் |
தலைமையகம் | சூரிக்கு, சுவிட்சர்லாந்து |
சேவை பகுதி | உலகம் முழுவதும் |
உறுப்பினர்கள் | உறுப்பினர்கள் |
ஆட்சி மொழிகள் | ஆங்கிலம், பிரான்சிய மொழி, இடாய்ச்சு மொழி |
தலைவர் | லுக் தார்திப் |
வலைத்தளம் | IIHF.com |
பன்னாட்டு பனி வளைதடியாட்ட கூட்டமைப்பு (International Ice Hockey Federation) என்பது சுவிச்சர்லாந்து நாட்டிலுள்ள சூரிக்கு நகரில் உள்ள பனி வளைதடியாட்ட விளையாட்டிற்கான பன்னாட்டு கூட்டமைப்பு ஆகும். இக்கூட்டமைப்பில் 74 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பு பன்னாட்டளவில் பனி வளைதடியாட்டப் போட்டிகளை நிர்வகிக்கும் அதிகார அமைப்பாகும். மேலும் பனி வளைதடியாட்டப் போட்டியில் வீரர்களின் தரவரிசைப் பட்டியலையும் இந்த அமைப்பு தயாரித்துப் பேணி வருகிறது.
இந்த அமைப்பு பன்னாட்டு அளவில் நடைபெறும் போட்டிகளை மேலாண்மை செய்தாலும் வட அமெரிக்காவில் இதன் செல்வாக்கு குறைந்த அளவே கானப்படுகிறது. தேசிய வளைதடியாட்ட சங்கம் என்ற அமைப்பே இங்கு நவீன பனி வளைதடியாட்ட விதிமுறைகளை வகுத்து அதன் படி மேற்கண்ட நாடுகளில் செல்வாக்கு செலுத்துகிறது. பனி வளைதடியாட்டம் கனடா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வளைதடியாட்ட அமைப்புகள் தங்களுக்கென தனி சட்டவிதிமுறைகளைக் கொண்டுள்ளன. வட அமெரிக்கக் கூட்டமைப்பைச் சாராத சில நாடுகள் இந்த பன்னாட்டு பனி வளைதடியாட்ட கூட்டமைப்பின் விதிமுறைகளைப் பின்பற்றுகின்றன.
பன்னாட்டு பனி வளைதடியாட்ட கூட்டமைப்பினன் முடிவுகளை எதிர்த்து சுவிட்சர்லாந்து. நாட்டின் லோசான் நகரிலுள்ள விளையாட்டுகளுக்கான நடுவர் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்ய முடியும்.
தலைவர்கள்
[தொகு]பெயர் | ஆண்டுகள் |
---|---|
லூயிஸ் மேக்னஸ் | 1908–12 |
ஹென்றி வான் டென் பல்கி | 1912–14 |
லூயிஸ் மேக்னஸ் | 1914 |
பீட்டர் பாட்டன் | 1914 |
ஹென்றி வான் டென் பல்கி | 1914–20 |
மேக்ஸ் சில்லிக் | 1920–22 |
பால் லாய்க் | 1922–47 |
ஃபிரிட்ஸ் கிராட்ஸ் | 1947–48 |
ஜார்ஜ் ஹார்டி | 1948–51 |
ஃபிரிட்ஸ் கிராட்ஸ் | 1951–54 |
வால்டர் பழுப்பு | 1954–57 |
ஜான் எப். “ஃபன்னி” அஹர்னெ | 1957–60 |
ராபர்ட் லெபெல் | 1960–63 |
ஜான் எப். “ஃபன்னி” அஹர்னெ | 1963–66 |
வில்லியம் தயெர் தத் | 1966–69 |
ஜான் எப். “ஃபன்னி” அஹர்னெ |
1969–75 |
குந்தெர் செபெஸ்கி | 1975–94 |
ரெனெ ஃபாசல் | 1994–தற்போது |
செயல்பாடுகளை
[தொகு]இந்த அமைப்பின் முக்கிய செயல்பாடு உலகம் முழுவதும் பன்னாட்டு பனி வளைதடியாட்ட வியைாட்டை வளர்ப்பது மற்றும் பன்னாட்டு பனி வளைதடியாட்ட போட்டியை நடத்துவதும் ஆகும். உறுப்பினர் நாடுகளிடையே நட்பு உறவுகளை ஊக்குவிப்பது மற்றொரு பணியாகும் .[1]
வரலாறு
[தொகு]1908-1913
[தொகு]பன்னாட்டு பன்னாட்டு பனி வளைதடியாட்ட கூட்டமைப்பு பாரிசு நாட்டின் பிரான்சு நகரில் 34 ரூ டி புரோவின்சு என்ற இடத்தில் 1908 ஆம் ஆண்டு மே மாதம் 15 நாள் நிறுவப்பட்டது.[2] பெல்ஜியம், பிரான்ஸ், பெரிய பிரிட்டன், சுவிச்சர்லாந்து மற்றும் பொகிமியா (இப்போது செக் குடியரசு). ஆகிய நாடுகள் சேர்ந்து உருவாக்கிய இந்த அமைப்பில் தொடக்க ஆவணத்தில் நான்காவதாக கையெழுத்திட்ட பிரெஞ்சு பிரதிநிதி லூயிஸ் மேக்னஸ், பன்னாட்டு பனி வளைதடியாட்ட கூட்டமைப்பின் முதல் தலைவரானார்.
போட்டிகள்
[தொகு]தற்போதைய பட்டம் வைத்திருப்பவர்கள்
[தொகு]போட்டிகள் | உலக வாகையாளர் | வருடம் |
---|---|---|
ஆண்கள் | சுவீடன் | 2017 |
20 வயதுக்குட்பட்ட ஆண் | ஐக்கிய அமெரிக்கா | 2017 |
18 வயதுக்குட்பட்ட ஆண் | ஐக்கிய அமெரிக்கா | 2017 |
பெண்கள் | ஐக்கிய அமெரிக்கா | 2017 |
18 வயதுக்குட்பட்ட ஆண் |
ஐக்கிய அமெரிக்கா | 2017 |
உள்ளரங்கு ஆக்கி | ஐக்கிய அமெரிக்கா | 2017 |
உறுப்பினர்கள்
[தொகு]பன்னாட்டு பன்னாட்டு பனி வளைதடியாட்ட கூட்டமைப்பு 54 முழு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது அவை : ஆத்திரேலியா, ஆஸ்திரியா, அசர்பைஜான், பெலருஸ், பெல்ஜியம், பொசுனியா எர்செகோவினா, பல்காரியா, கனடா, சீனா, சீன தைபே, குரோவாசியா, செக் குடியரசு, டென்மார்க், எசுத்தோனியா, பின்லாந்து, பிரான்சு, சியார்சியா, ஜெர்மனி, பெரிய பிரித்தானியா, ஆங்காங், அங்கேரி, ஐசுலாந்து, இந்தியா, அயர்லாந்து, இசுரேல், இத்தாலி, யப்பான், கசக்கஸ்தான், வடகொரியா, தென் கொரியா, லாத்வியா, லிதுவேனியா, லக்சம்பர்க், மெக்சிக்கோ, மங்கோலியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, போலந்து, கத்தார், உருமேனியா, உருசியா, செர்பியா, சிலோவாக்கியா, சுலோவீனியா, தென்னாப்பிரிக்கா, எசுப்பானியா, சுவீடன், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, உக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா போன்றவை. முழு உறுப்பினர்கள் மட்டுமே ஆண்டு தோறும் சர்வதேச அளவில் நடத்தப்படும் பன்னாட்டு பனி வளைதடியாட்ட போட்டியில் கலந்து கொள்ள முடியும் மேலும் இந்த நாடுகளுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- Podnieks, Andrew; Szemberg, Szymon (2007). World of hockey : celebrating a century of the IIHF. Fenn Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781551683072.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் பன்னாட்டு பனி வளைதடியாட்ட கூட்டமைப்பு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- ↑ International Ice Hockey Federation.
- ↑ IIHF and Paris பரணிடப்பட்டது 2018-07-23 at the வந்தவழி இயந்திரம் International Ice Hockey Federation.