பன்னாட்டு பனி ஆக்கி கூட்டமைப்பு
உருவாக்கம் | 1908 |
---|---|
வகை | விளையாட்டுக் கூட்டமைப்பு |
தலைமையகம் | சூரிச், சுவிச்சர்லாந்து |
உறுப்பினர்கள் | 74 நாடுகள் |
ஆட்சி மொழி | ஆங்கிலம் பிரெஞ்சு |
தலைவர் | ரெனே பாசெல் |
வலைத்தளம் | www.iihf.com |
பன்னாட்டு பனி ஆக்கி கூட்டமைப்பு (IIHF; பிரெஞ்சு: [Fédération internationale de hockey sur glace] error: {{lang}}: text has italic markup (உதவி)) என்பது சுவிச்சர்லாந்து நாட்டிலுள்ள சூரிச் நகரில் உள்ள பனி ஆக்கி விளையாட்டிற்கான பன்னாட்டு கூட்டமைப்பு ஆகும். இக்கூட்டமைப்பில் 74 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பு பன்னாட்டளவில் பனி ஆக்கி போட்டிகளை நிர்வகிக்கும் அதிகார அமைப்பாகும். மேலும் பனி ஆக்கிப் போட்டியில் வீரர்களின் தரவரிசைப் பட்டியலையும் இந்த அமைப்பு தயாரித்துப் பேணி வருகிறது.
இந்த அமைப்பு பன்னாட்டு அளவில் நடைபெறும் போட்டிகளை மேலாண்மை செய்தாலும் வட அமெரிக்காவில் இதன் செல்வாக்கு குறைந்த அளவே கானப்படுகிறது. தேசிய ஆக்கி சங்கம் ( National Hockey League (NHL)) அன்ற அமைப்பே இங்கு நவீன ஆக்கி விதிமுறைகளை வகுத்து அதன் படி மேற்கண்ட நாடுகளில் செல்வாக்கு செலுத்துகிறது. ஆக்கி கனடா (Hockey Canada) மற்றும் யு.எஸ்.ஏ ஆக்கி (USA Hockey) ஆகிய அமைப்புகள் தங்களுக்கென தனி சட்டவிதிமுறைகளைக் கொண்டுள்ளன. வட அமெரிக்கக் கூட்டமைப்பைச் சாராத சில நாடுகள் இந்த பன்னாட்டு பனி ஆக்கி கூட்டமைப்பின் விதிமுறைகளைப் பின்பற்றுகின்றன.
பன்னாட்டு பனி ஆக்கி கூட்டமைப்பினன் முடிவுகளை எதிர்த்து சுவிச்சர்லாந்து. நாட்டின் லோசான் நகரிலுள்ள விளையாட்டுகளுக்கான நடுவர் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்ய முடியும்.
தலைவர்கள்[தொகு]
பெயர் | ஆண்டுகள் |
---|---|
லூயிஸ் மேக்னஸ் | 1908–12 |
ஹென்றி வான் டென் பல்கி | 1912–14 |
லூயிஸ் மேக்னஸ் | 1914 |
பீட்டர் பாட்டன் | 1914 |
ஹென்றி வான் டென் பல்கி | 1914–20 |
மேக்ஸ் சில்லிக் | 1920–22 |
பால் லாய்க் | 1922–47 |
ஃபிரிட்ஸ் கிராட்ஸ் | 1947–48 |
ஜார்ஜ் ஹார்டி | 1948–51 |
ஃபிரிட்ஸ் கிராட்ஸ் | 1951–54 |
வால்டர் பழுப்பு | 1954–57 |
ஜான் எப். “ஃபன்னி” அஹர்னெ | 1957–60 |
ராபர்ட் லெபெல் | 1960–63 |
ஜான் எப். “ஃபன்னி” அஹர்னெ | 1963–66 |
வில்லியம் தயெர் தத் | 1966–69 |
ஜான் எப். “ஃபன்னி” அஹர்னெ |
1969–75 |
குந்தெர் செபெஸ்கி | 1975–94 |
ரெனெ ஃபாசல் | 1994–தற்போது |
செயல்பாடுகளை[தொகு]
இந்த அமைப்பின் முக்கிய செயல்பாடு உலகம் முழுவதும் பனி ஆக்கியை வியைாட்டை வளர்ப்பது மற்றும் ஆக்கி போட்டியை நடத்துவது ஆகும். உறுப்பினர் நாடுகளிடையே நட்பு உறவுகளை ஊக்குவிப்பது மற்றொரு பணியாகும் .[1]
வரலாறு[தொகு]
1908-1913[தொகு]
பன்னாட்டு பனி ஹாக்கி கூட்டமைப்பு பாரிசு நாட்டின் பிரான்சு நகரில் 34 ரூ டி புரோவின்சு என்ற இடத்தில் 1908 ஆம் ஆண்டு மே மாதம் 15 நாள் நிறுவப்பட்டது .[2] பெல்ஜியம், பிரான்ஸ், கிரேட் பிரிட்டன், சுவிச்சர்லாந்து மற்றும் பொகிமியா (இப்போது செக் குடியரசு). ஆகிய நாடுகள் சேர்ந்து உருவாக்கிய இந்த அமைப்பில் தொடக்க ஆவணத்தில் நான்காவதாக கையெழுத்திட்ட பிரெஞ்சு பிரதிநிதி லூயிஸ் மேக்னஸ், பன்னாட்டு பனி ஹாக்கி கூட்டமைப்பின் ( LIHG) முதல் தலைவரானார்.
போட்டிகள்[தொகு]
தற்போதைய பட்டம் வைத்திருப்பவர்கள்[தொகு]
போட்டிகள் | உலக வாகையாளர் | வருடம் |
---|---|---|
ஆண்கள் | ![]() |
2017 |
20 வயதுக்குட்பட்ட ஆண் | ![]() |
2017 |
18 வயதுக்குட்பட்ட ஆண் | ![]() |
2017 |
பெண்கள் | ![]() |
2017 |
18 வயதுக்குட்பட்ட ஆண் |
![]() |
2017 |
உள்ளரங்கு ஆக்கி | ![]() |
2017 |
உறுப்பினர்கள்[தொகு]
பன்னாட்டு பனி ஆக்கி கூட்டமைப்பு 54 முழு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது அவை : ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, அஜர்பைஜான், பெலாரஸ், பெல்ஜியம், போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா, பல்கேரியா, கனடா, சீனா, சீன தைபே, குரோஷியா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜியார்ஜியா, ஜெர்மனி, கிரேட் பிரிட்டன், ஹாங்காங், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இந்தியா, அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், கஜகஸ்தான், வட கொரியா, தென் கொரியா, லாட்வியா, லிதுவேனியா, லக்சம்பர்க், மெக்ஸிக்கோ, மங்கோலியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, போலந்து, கத்தார், ருமேனியா, ரஷ்யா, செர்பியா, ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, தென் ஆப்ரிக்கா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, உக்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மற்றும் அமெரிக்கா. முழு உறுப்பினர்கள் மட்டுமே ஆண்டு தோறும் சர்வதேச அளவில் நடத்தப்படும் பனிஆக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியும் மேலும் இந்த நாடுகளுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை உள்ளது.
மேலும் பார்க்க[தொகு]
- ஐஸ் ஹாக்கி உலக சாம்பியன்ஷிப்
- IIHF ஹால் ஆஃப் ஃபேம்
- IIHF நூற்றாண்டு அனைத்து நட்சத்திர அணி
- சாம்பியன்ஸ் ஹாக்கி லீக்
- தேசிய ஹாக்கி லீக்
- தேசிய ஹாக்கி லீக் விதிகள்
மேற்கோள்கள்[தொகு]
- Podnieks, Andrew; Szemberg, Szymon (2007). World of hockey : celebrating a century of the IIHF. Fenn Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781551683072.
- ↑ International Ice Hockey Federation.
- ↑ IIHF and Paris பரணிடப்பட்டது 2018-07-23 at the வந்தவழி இயந்திரம் International Ice Hockey Federation.