பன்னாட்டு நீராய்வியல் அமைப்பு
International Hydrographic Organization Organisation hydrographique internationale | |
![]() | |
சுருக்கம் | IHO |
---|---|
உருவாக்கம் | 21 சூன் 1921 |
தலைமையகம் | |
உறுப்பினர்கள் | 101 உறுப்பு நாடுகள்; இடைநீக்கம் செய்யப்பட்டவை: (செர்பியா; சிரியா) |
ஆட்சி மொழிகள் | ஆங்கிலம், பிரான்சிய மொழி |
பொதுச் செயலாளர் | டாக்டர் மத்தியாஸ் ஜோனாஸ் |
வலைத்தளம் | iho |
பன்னாட்டு நீராய்வியல் அமைப்பு (ஆங்கிலம்: International Hydrographic Organization; பிரான்சியம்: Organisation hydrographique internationale) என்பது பன்னாட்டு அரசுகளுக்கு இடையில் நீராய்வியல் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாகும்.[1] பிப்ரவரி 2025 நிலவரப்படி, பன்னாட்டு நீராய்வியல் அமைப்பில் 101 நாடுகள் உறுப்பியம் பெற்றுள்ளன.
உலகில் உள்ள கடல்கள், பெருங்கடல்கள் மற்றும் நீர்நிலைகள் போன்றவை முறையாக ஆய்வு செய்யப்பட்டு வரைபடமாக்கப்படுவதை உறுதி செய்வதே பன்னாட்டு நீராய்வியல் அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.[2]
நீராய்வியல் கணக்கெடுப்புகளுக்கான பன்னாட்டுத் தரங்களை அமைப்பது; உலக நாடுகளின் நீராய்வியல் அலுவலகங்களின் முயற்சிகளை ஒருங்கிணைப்பது போன்ற கூறுகள்; இந்த நீராய்வியல் அமைப்பின் முதன்மைச் செயல்பாடுகள் ஆகும். அத்துடன் அவற்றைத் திறன்மிகு மேம்பாட்டுத் திட்டத்தின் வழியாகச் செயல்படுத்துவதும் அதன் திட்டங்களில் ஒன்றாகும்.[3]
பொது
[தொகு]பன்னாட்டு நீராய்வியல் அமைப்பு, ஐக்கிய நாடுகள் அவையில் பார்வையாளர் தகுதியைப் பெற்றுள்ளது. அங்கு இது நீரியல் வரைவு கருத்தாய்வு; மற்றும் கடல்சார் வழிகாணல் வரைபடம் தயாரித்தல் போன்ற செயல்பாடுகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகவும் செயல்படுகிறது.[4]
உறுப்பு நாடுகளின் பட்டியல்
[தொகு]பல்கேரியா
கேப் வர்டி
கமரூன்
கனடா
சிலி
சீனா
கொலம்பியா
குரோவாசியா
கியூபா
சைப்பிரசு
காங்கோ மக்களாட்சிக் குடியரசு
வட கொரியா
டென்மார்க்
டொமினிக்கன் குடியரசு
எக்குவடோர்
எகிப்து
எசுத்தோனியா
பிஜி
பின்லாந்து
பிரான்சு
கம்பியா
சியார்சியா
செருமனி
கானா
கிரேக்க நாடு
குவாத்தமாலா
கயானா
ஐசுலாந்து
இந்தியா
இந்தோனேசியா
ஈரான்
ஈராக்
அயர்லாந்து
இத்தாலி
ஜமேக்கா
சப்பான்
கென்யா
கிரிபட்டி
குவைத்
லாத்வியா
லெபனான்
மலேசியா
மால்ட்டா
மொரிசியசு
மெக்சிக்கோ
மொனாகோ
மொண்டெனேகுரோ
மொரோக்கோ
மொசாம்பிக்
மியான்மர்
நெதர்லாந்து
நியூசிலாந்து
நைஜீரியா
நோர்வே
ஓமான்
பாக்கித்தான்
பப்புவா நியூ கினி
பெரு
பிலிப்பீன்சு
போலந்து
போர்த்துகல்
கத்தார்
உருமேனியா
உருசியா
சமோவா
சவூதி அரேபியா
சீசெல்சு
சிங்கப்பூர்
சுலோவீனியா
சொலமன் தீவுகள்
தென்னாப்பிரிக்கா
தென் கொரியா
எசுப்பானியா
இலங்கை
சுரிநாம்
சுவீடன்
தாய்லாந்து
தொங்கா –
டிரினிடாட் மற்றும் டொபாகோ
தூனிசியா
துருக்கி
உக்ரைன்
ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய இராச்சியம்
ஐக்கிய அமெரிக்கா
உருகுவை
வனுவாட்டு
வெனிசுவேலா
வியட்நாம்
இடைநீக்கம் செய்யப்பட்ட நாடுகள்
[தொகு]மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "First Assembly of the International Hydrographic Organization (IHO)". hydro-international.com (in ஆங்கிலம்). Retrieved 2019-04-17.
- ↑ "International Hydrographic Organization | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). Retrieved 12 March 2025.
- ↑ "International Hydrographic Organization (IHO) | Department of Economic and Social Affairs". sdgs.un.org. Retrieved 12 March 2025.
- ↑ (The International Hydrographic Organization), wpe (July 26, 2018). "International Hydrographic Organization Brochure" (PDF). International Hydrographic Organization. Archived (PDF) from the original on 30 November 2018. Retrieved May 14, 2022.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் பன்னாட்டு நீராய்வியல் அமைப்பு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- அதிகாரப்பூர்வ இணையதளம்