உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னாட்டு நில அறிவியல்களின் ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னாட்டு நில அறிவியல்களின் ஒன்றியம்
சுருக்கம்IUGS
உருவாக்கம்1961; 65 ஆண்டுகளுக்கு முன்னர் (1961)
வகைபன்னாட்டு அரசு சாரா அமைப்பு,
தரக்கட்டுப்பாடு அமைப்பு
தலைமையகம்பாரிசில் நிறுவப்பட்டது, பிரான்சு, தலைமைச் செயலகம், பெய்சிங், சீனா
சேவை பகுதி
பன்னாடுகளிலும்
தலைவர் (2024-2028):
பேரா. அசினார மௌரி
தாய் அமைப்பு
பன்னாட்டு அறிவியல் மன்றம் (ISC)
வலைத்தளம்www.iugs.org

பன்னாட்டு நில அறிவியல்களின் ஒன்றியம் (International Union of Geological Sciences - IUGS) என்ற பன்னாட்டு அரசு சாரா அமைப்பு, நிலவியல் துறைகளில், பன்னாடுகளின் ஒத்துழைப்புக்காக தோற்றுவிக்கப்பட்டதாகும்.[1]2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, இது உலகெங்கிலும் 1 மில்லியனுக்கும் அதிகமான நிலவியலாளர்களின் கருத்துக்களை வலுப்படுத்துகிறது.[2]1961 இல் நிறுவப்பட்ட, பன்னாட்டு புவியியல் கூட்டமைப்புகளுக்கு (IUGS) இடையிலான ஒத்துழைப்பைப் பேணுவதற்காக நிறுவப்பட்டதாகும். இது 1875 முதல், ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் நடைபெறுகிறது. இது பன்னாட்டு அறிவியல் அமைப்பின் (ISC) உள்ளது.[3] முன்பு இவ்வமைப்பு, அறிவியலுக்கான பன்னாட்டு அமைப்பு (International Council for Science - ICSU), இது பன்னாட்டு அறிவியல் அமைப்பின் ஒருங்கிணைப்பு அமைப்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, 121 நாடுகளைச் சேர்ந்த (மற்றும் மண்டலங்கள்) புவியியலாளர்கள், இதில் இடம் பெற்று செயற்படும் உரிமையைப் பெற்று இருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் செயற்படுத்தும் பன்னாட்டு புவிஅறிவியல் மற்றும் புவிப்பூங்காக்கள் திட்டம் (IGCP) என்பதிலும், பன்னாட்டு நிலப்பூங்காக்களின் வலையகம் (Global Geoparks Network - GGN) இணைந்து, இவ்வமைப்பினர் ஈடுபட்டு செயற்படுகின்றனர்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. International Union of Geological Sciences, International Union of Geological Sciences, retrieved 4 சனவரி 2026
  2. Hunt, Katie (11 July 2023). "Scientists say they've found a site that marks a new chapter in Earth's history". சிஎன்என் (CNN). https://edition.cnn.com/2023/07/11/world/anthropocene-epoch-geological-time-unit-scn/index.html. 
  3. International Union of Geological Sciences (IUGS), International Science Council, retrieved 4 சனவரி 2026
  4. "IUGS | Activities". IUGS (in இத்தாலியன்). Retrieved 2026-01-04.

இவற்றையும் காணவும்

[தொகு]