பன்னாட்டு நட்பு நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பன்னாட்டு நட்பு நாள் (International Friendship Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து மாத முதல் ஞாயிறு அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கள் நண்பர்களுடன் நேரத்தைச் செலவழிப்பதுடன் தங்கள் அன்பைத் தெரிவிக்கும் விதமாக பூக்கள், வாழ்த்தட்டைகள், கங்கணக் கயிறுகளை பரிமாறிக் கொள்கின்றனர்.[1][2]

வரலாறு[தொகு]

1935ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் நாடாளுமன்றம், காங்கிரசு, ஆகத்தின் முதல் ஞாயிறை தேசிய நண்பர்கள் தினமாக அறிவித்தது.[3] அன்று முதல், தேசிய நண்பர்கள் தினத்தைக் கொண்டாடுவது ஓர் வருடாந்திர நிகழ்வாக மாறியது.[3]

இதனைப் பின்பற்றி உலகின் பல நாடுகளும் நண்பர்களுக்காக ஒருநாளை ஒதுக்கி கொண்டாடி வருகின்றன. 1997ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் வின்னி த பூ என்ற பொம்மை கரடியை உலகின் நட்பு தூதராக அறிவித்தது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "A band for ties of friendship". New Delhi: The Times of India. 2009-06-30. http://timesofindia.indiatimes.com/NEWS/City/Kanpur/A-band-for-ties-of-friendship/articleshow/4838509.cms. பார்த்த நாள்: 2009-08-01. 
  2. Bose, Antara (2009-08-01). "Flavours of friendship". Calcutta: The Telegraph. http://www.telegraphindia.com/1090801/jsp/jharkhand/story_11305493.jsp. பார்த்த நாள்: 2009-08-01. 
  3. 3.0 3.1 "Friendship Day" (English). Noida, India: Society for the Confluence of Festivals in India (2009).
  4. Topher (2001-2010). "Winnie-the-Pooh FAQ". Melbourne, Australia: Topher's Castle. "To commemorate the 1997 event at the United Nations Headquarters in New York City, Mrs. Nane Annan, wife of Secretary-General Kofi Annan, presented Winnie-the-Pooh with the honorary title, "Ambassador of Friendship.""

வெளியிணைப்புகள்[தொகு]

  • "Friendship Day" (English). Noida, India: Society for the Confluence of Festivals in India (2009).
  • Cooke, Kelly; Hoffman-Hussain, Saj (1996-2010). "International Friendship Day". Friendship: Peace on Earth. Camberwell, Australia: Global Friendship.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னாட்டு_நட்பு_நாள்&oldid=2396454" இருந்து மீள்விக்கப்பட்டது