பன்னாட்டு கூட்டுறவுதினம்
பன்னாட்டு கூட்டுறவுதினம் (Inernational Co-operative Day) ஒவ்வொரு ஆண்டும் சூலை மாதத்தின் முதலாவது சனிக்கிழமை 1923 முதல் பன்னாட்டு கூட்டுறவு ஒன்றியத்தினால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுத்துறை நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் முக்கிய இடம் வகிக்கின்றது. இருந்தபோதிலும் முதலாளித்துவ சமூக வளர்ச்சியுடன் கூட்டுறவு பலதுறைகளிலும் தனது முக்கியத்துவத்தை படிப்படியாக இழந்தே வந்துள்ளது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பகாலகட்டங்களில் கூட்டுறவுத்துறையில் ஏற்பட்ட எழுச்சியுடன் ஒப்புநோக்கும்போது தற்போதைய நிலையில் மேற்குறிப்பிட்ட கருத்து பொருந்தும். நவீன காலத்தில் ‘உலகமயமாக்கல்” சிந்தனையுன் மேலும் இதன் வளர்ச்சிப்போக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. எவ்வாறாயினும், கூட்டுறவு என்பது இன்றியமையாத ஒன்று என்று கூறுவதில் தவறாகாது. எவ்வாறாயினும் இன்றைய உலகம் சமூக, பொருளாதார மாற்றங்களுடன் கூட்டுறவின் தேவை உணர்ந்தே உள்ளது. நாடுகளிடையே கூட்டுறவு, மக்களிடையே கூட்டுறவு, கூட்டுணர்வு போன்ற எண்ணக்கருக்கள் சர்வதேச மட்டத்தில் கூட்டுறவு தினத்தை நினைவுகூர வாய்ப்பளித்துள்ளன.
வரலாறு
[தொகு]கூட்டுறவு அமைப்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவாகி வளர்ந்து வந்துள்ளது. பிரான்சின் சோசலிஸவாதி சார்ள்ஸ் பூரியர், இங்கிலாந்தைச் சேர்ந்த றொபர்ட் ஓவன் (1771-1858), டாக்டர் வில்லியம்கிங் போன்ற இலட்சியவாதிகளின் சிந்தனையில் உதித்த இத்தத்துவம், 1844 இல் றொக்டேல் நகர தொழிலாளர்களால் செயல்வடிவம் பெற்றது.
வரைவிலக்கணம்
[தொகு]கூட்டுறவு என்பது சனநாயக அடிப்படையில் கட்டுப்படுத்தப்படும் சுயேச்சையான தொழில்முயற்சி ஒழுங்கமைப்பொன்றாகும்.
குறிக்கோள்
[தொகு]தன்னிச்சையாக ஒன்றுகூடும் தனியாட்களின் பொதுவான பொருளாதார, சமூக, கலாசார தேவைகளை எய்துவதாகும். இத்தனியாட்கள் கூட்டாக சொத்துவத்தை அனுபவிக்கின்றனர். ‘மனிதன் ஒரு சமூகப்பிராணி. சமூகத்தோடு எந்தவித உறவுமின்றி அவன் பிரபஞ்சத்துடன் ஐக்கியத்தை உணர முடியாது. ‘நான்’ எனும் அகம்பாவத்தை அகற்றிவிட இயலாது. அவனுடைய சமுதாயச் சார்பு அவனுடைய நம்பிக்கையை சோதனை செய்து கொள்வதற்கும் உண்மை உரைக்கல்லால் தன்னையே அளந்து கொள்வதற்கும் உதவுகிறது’
பொது இயல்புகள்
[தொகு]- சேர்ந்து செயலாற்றுதல் (Associated Action)
- சகலருக்கும் பொவுதான தன்மை (Universality)
- தனிநபர் சுதந்திர விருப்பு (Free Will of the individual)
- சமத்துவம் (Equality)
- சனநாயகம் (Democracy)
- சேவை நோக்கு (Service)
- தனிநபர் சுதந்திரம் (Individual Freedom)
- நடுநிலையும் சமூக நீதியும் (Equity and Social Justice)
- கூட்டுணர்வு (Spirit of Solidarity)
- புதிய சமூக ஒழுங்கு (New Social Order)
- மனிதரின் அந்தஸ்தினை மதித்தல் (Rocognition of dignity of men)
- உயர் ஒழுக்க நிலை (High moral standard)
ஏழு வர்ணங்கள்
[தொகு]சர்வதேச கூட்டுறவு அமைப்புகள் எல்லாம் வானவில்லின் ஏழு வர்ணங்களை உள்ளடக்கிய கொடியின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
ஐந்து அம்ச கூட்டுறவுக் கொள்கை
[தொகு]1966 இல் அனைத்துலக கூட்டுறவு மகாநாட்டில் பின்வரும் ஐந்து அம்சங்களும் கூட்டுறவுக் கொள்கைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டன. அவை,
- தன் விருப்புடனான தடையற்ற அங்கத்தவர்
- ஜனநாயக முறைக் கட்டுப்பாடும், நிர்வாகமும்
- முதலுக்கு ஏற்ப வட்டி வீதம்
- இலாபம் அங்கத்தவரிடையே சமமாகப் பங்கிடப்படல்
- கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையே பரஸ்பர ஒத்துழைப்பு
கருப்பொருள்
[தொகு]சர்வதேச கூட்டுறவுதினம் மிலேனியத்திலிருந்து பின்வரும் கருப்பொருட்களுக்கமைய கொண்டாடப்படுகிறது.
- 2000: “Co-operatives and Employment Promotion”
- 2001: “The Co-operative Advantage in the Third Millennium”
- 2002: “Society and Co-operatives: Concern for Community”
- 2003: “Co-operatives Make Development Happen!: The contribution of co-operatives to the United Nations Millennium Development Goals”
- 2004: “Co-operatives for Fair Globalisation: Creating Opportunities for All”
- 2005: “Microfinance is OUR business! Cooperating out of poverty”
- 2006 “Peace-building through Co-operatives.”
- 2007 “Co-operative Values and Principles for Corporate Social responsibility.”
- 2008: “Confronting Climate Change through Co-operative Enterprise”
- 2009: “Driving global recovery through co-operatives”
- 2010: 'Cooperative enterprise empowers women'
வெளி இணைப்புகள்
[தொகு]- ஜுலை மாதத்தின் முதலாவது சனிக்கிழமை – சர்வதேச கூட்டுறவுதினம் (Inernational Co-operative Day) – புன்னியாமீன்
- சர்வதேச கூட்டுறவு தினம்[தொடர்பிழந்த இணைப்பு] - தட்ஸ் தமிழ்
- 89th ICA International Co-operative Day 17th UN International Day of Cooperatives (2 July 2011) பரணிடப்பட்டது 2011-08-11 at the வந்தவழி இயந்திரம்
- International Day of Cooperatives (IDC) பரணிடப்பட்டது 2010-06-20 at the வந்தவழி இயந்திரம்
- International Day of Cooperatives
- Cooperative Day is July 2, 2011[தொடர்பிழந்த இணைப்பு]