பன்னாட்டு காபி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலட்சினை
World map indicating the member states of the International Coffee Organization.
  ICO ஏற்றுமதி உறுப்பினர்கள்
  ICO இறக்குமதி உறுப்பினர்கள்
தலைமையகம்இலண்டன், WC1
இங்கிலாந்து
ஆட்சி மொழி(கள்)
Type Trade bloc
உறுப்பினர்கள்
Leaders
 •  செயல் இயக்குநர் பிரேசில்ஜோசு செட்டி
உருவாக்கம் 1963; 58 ஆண்டுகளுக்கு முன்னர் (1963)
நாணயம் Indexed as USD-per-lb
Website
www.ico.org

காபியின் பொருளாதார முக்கியத்துவம் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) அனுசரணையில் பன்னாட்டு காபி நிறுவனம் (International Coffee Organization (ICO)) 1963 ஆம் ஆண்டு இலண்டனில் அமைக்கப்பட்டது. இது காபி வர்த்தக மேம்பாட்டிற்காக சர்வதேச காபி ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.

இது 1962 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் கையெழுத்திடப்பட்ட ஐந்தாண்டு சர்வதேச காபி ஒப்பந்தத்தின் விளைவாக, 1968, 1976, 1983, 1994 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் லண்டனில் உள்ள ஐ.சி.ஓவில் மறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. [1]

பன்னாட்டு காபி குழுமமானது மிக உயர்ந்த அதிகாரம் உடைய ஒவ்வொரு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கியது. இது குழுமம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கூடி காபி வர்த்தகம் குறித்த விடயங்கள் குறித்து விவாதிக்கவும், செயல்முறைகள் குறித்த ஆவணங்களை அங்கீகரிக்கவும் மற்றும் ஆலோசனைக் குழுக்களின் பரிந்துரைகள் குறித்து முடிவெடுக்க கூடுகிறது.

ஐ.சி.ஓவின் தலைமையகம் லண்டனில் 222 கிரேஸ் இன் சாலையில் அமைந்துள்ளது. இதன் தற்போதைய நிர்வாக இயக்குனராக இந்தோனேசியாவினைச் சார்ந்த இமான் பாம்பகயோ உள்ளார்.  ஜூன் 2018 இல் சர்வதேச காபி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிய பின்னர், [2] ஐ.சி.ஓ உறுப்பினர் அரசாங்கங்கள் உலக காபி உற்பத்தியில் 98% மற்றும் உலக நுகர்வுவில் 67% பங்கு வகிக்கின்றனர். [3] [4]

உறுப்பினர்கள்[தொகு]

பிப்ரவரி 2020 வரை, இதன் உறுப்பினர் எண்ணிக்கை 49 ஆகும். இதில் 43 உறுப்பினர்கள் உற்பத்தியாளர் நாட்டினைச் சார்ந்தவர்களாகவும் 6 பேர் இறக்குமதி உறுப்பினர்களாகவும் உள்ளனர். [4]

ஏற்றுமதி நாடு உறுப்பினர்கள்
இறக்குமதி நாட்டு உறுப்பினர்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "History". International Coffee Organization.
  2. "Press Release" (3 April 2018).
  3. Gallo, Kathy (22 August 2018). "How Important is the Coffee Industry to the World’s Economy?".
  4. 4.0 4.1 "Members of the International Coffee Organization". International Coffee Organization.

வெளி இணைப்புகள்[தொகு]