பன்னாட்டு கணித அறிவியல் மையம்
பன்னாட்டு கணித அறிவியல் மையம் (International Centre for Mathematical Sciences) ஐக்கிய இராச்சியத்தின் எடின்பரோ நகரத்தில் அமைந்துள்ளது. இதன் வலைத்தளத் தரவுகளின் படி இந்த மையம் அறிவியல், தொழில் மற்றும் வர்த்தகத்தில் கணிதவியலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களை ஆராய்ச்சிப் பட்டறைகள் மற்றும் பிற கூட்டங்களுக்காக ஒன்றிணைக்கும் வகையில் செயல்படுகிறது.
எடின்பரோ மாவட்டக் குழு, இசுக்காட்லாந்து மேம்பாட்டு முகமை, பன்னாட்டு கோட்பாட்டு இயற்பியல் மையம் ஆகிய அமைப்புகளின் ஆரம்ப ஆதரவுடன், பேராசிரியர் எல்மர் ரீசின் மேற்பார்வையின் கீழ், எடின்பரோ பல்கலைக்கழகம் மற்றும் எரியட்-வாட் பல்கலைக்கழகம் ஆகியவற்றால் 1990 ஆம் ஆண்டில் இந்த மையம் கூட்டாக நிறுவப்பட்டது.[1]
ஏப்ரல் 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இயேம்சு கிளார்க் மேக்சுவெல்லின் பிறப்பிடமாகவும், இயேம்சு கிளார்க் மேக்சுவெல் அறக்கட்டளையின் இல்லமாகவும் உள்ள எடின்பரோவில் உள்ள 14 இந்தியா தெரு என்ற முகவரிக்கு இந்த மையம் மாற்றப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் இது பெரிய நிகழ்வுகளுக்கு இடமளிக்கும் வகையில் 15 தெற்கு கல்லூரி தெருவுக்கு மாற்றப்பட்டது. 2020 ஆம் ஆண்டு வரை, புதிதாக நிறுவப்பட்ட பேய்சு மையத்திற்குள் பன்னாட்டு கணித அறிவியல் மையம் அமைந்துள்ளது.[2][3]
தற்போதைய விஞ்ஞான இயக்குநர் (2016 இல் நியமிக்கப்பட்டார்) பேராசிரியர் பால் கிளெண்டினிங் என்பவராவார். பன்னாட்டு கணித அறிவியல் மையம் ஐரோப்பிய கணித சங்கத்தின் உறுப்பினராக உள்ளது.[4]
அமைவிடம்
[தொகு]1994 ஆம் ஆண்டு முதல், இயேம்சு கிளார்கு மேக்ஸ்வெல்லின் பிறந்த இடமான 14, இந்தியா தெருவில் உள்ள இயேம்சு கிளார்க் மேக்சுவெல் அறக்கட்டளையின் தங்குமிடத்திலிருந்து இந்த மையம் வாடகைக்கு எடுக்கப்பட்டது. அதிகரித்த செயல்பாடு காரணமாக 2010 ஆம் ஆண்டில் தெற்கு கல்லூரித் தெருவில் மாற்றப்பட்ட தேவாலயத்திற்கு அகற்றப்பட்டது. பின்னர் 2018 ஆம் ஆண்டில் எடின்பரோ பல்கலைக்கழகத்தின் அருகிலுள்ள பேய்சு மையத்தில் அதன் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது.[1][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "ICMS History". ICMS - International Centre for Mathematical Sciences (in ஆங்கிலம்). 2018-02-12. Retrieved 2023-03-12.
- ↑ "Visiting ICMS in Edinburgh".
- ↑ "Bayes centre".
- ↑ "International Centre for Mathematical Sciences (ICMS)".
- ↑ "Find Us". ICMS - International Centre for Mathematical Sciences (in ஆங்கிலம்). 2020-11-10. Retrieved 2023-03-12.