உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள்
International Anti-Corruption Day
பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள்
பிற பெயர்(கள்)ப.ஊ.எ.நா.
கடைபிடிப்போர்ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள்
கொண்டாட்டங்கள்ஐக்கிய நாடுகள்
நாள்9 திசம்பர்
நிகழ்வுஆண்டுதோறும்
ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் (2003) அத்தியாயம் 5, ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் சொத்து மீட்பு என்பது சர்வதேச முன்னுரிமை என்பதை தெளிவுபடுத்துகிறது.

பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள் (International Anti-Corruption Day) ஊழலுக்கு எதிரான பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் திசம்பர் 9 அன்று பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் ஊழலுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டதிலிருந்து இந்நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.[1][2] ஊழலற்ற களங்கமற்ற மனிதர்களாக வாழ உரிய வாழும் வழிமுறைகளை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே இந்நாளின் நோக்கமாகும்.

ஊழல் மிகுந்த 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 85-ஆவது இடத்தில் உள்ளதாக பன்னாட்டு அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஊழல் நிறைந்த மாநிலங்களின் பட்டியலில் மகாராட்டிரம் முதல் இடத்தில் உள்ளது.[3] [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Anti-Corruption Day
  2. "International Anti-Corruption Day". UN. Archived from the original on 2005-12-14.
  3. "டிச. 09: இன்று என்ன? - சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாள்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/vetrikodi/news/912279-international-anti-corruption-day.html. பார்த்த நாள்: 10 December 2022. 
  4. "டிசம்பர் 9-சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்". தினமணி. https://www.dinamani.com/specials/indha-naalil/2016/dec/09/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-9----%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2611682.html. பார்த்த நாள்: 10 December 2022. 

புற இணைப்புகள்

[தொகு]