உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னாட்டு உயிரிப் பல்வகைமை ஆண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னாட்டு உயிரிப் பல்வகைமை ஆண்டுக்கான சின்னம்

பன்னாட்டு உயிரிப் பல்வகைமை ஆண்டு (International Year of Biodiversity) என்பது உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் அதன் முக்கியத்துவத்தை அனைவரும் அறிவதை நோக்கமாகக் கொண்டு ஓர் ஆண்டு முழுவதும் கடைபிடிக்கும் ஒரு கொண்டாட்டமாகும். 2010 ஆம் ஆண்டில் இக்கொண்டாட்டம் பன்னாட்டு அளவில் நடைபெற்றது. 2010 ஆம் ஆண்டுக்கான உயிரிப் பல்வகைமை இலக்குத் தேதியுடன் இணைந்து, 2006 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 61 ஆவது அமர்வில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள் மூலம் பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்கள் இதன் முக்கியத்துவத்தை உணரவும், மேலும் உயிரியல் பன்முகத்தன்மையை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அருகில் உயர்த்தவும் இக்கொண்டாட்டம் உதவும்.[1] உயிரிப்பல்வகைமை புவியில் வாழ்க்கைக்கு அவசியமானது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2010 ஆம் ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

பின்னணி

[தொகு]

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 2010 ஆம் ஆண்டை பன்னாட்டு உயிரிப்பல்வகைமை ஆண்டாக அறிவித்தது (தீர்மானம் 61/203[2]). 2002 ஆம் ஆண்டில் யோகானசுபர்க்கில் நடைபெற்ற நிலையான வளர்ச்சிக்கான உலக உச்சி மாநாட்டில் உயிரியல் பன்முகத்தன்மை பற்றிய மாநாட்டுக் குழுக்கள், மாநிலத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 2010 ஆம் ஆண்டுக்கான பல்லுயிர் இலக்கு தநாளுடன் இந்த ஆண்டு ஒத்துப்போனது.[3]

கனடாவின் மாண்ட்ரியலில் உள்ள உயிரியல் பன்முகத்தன்மைக்கான மாநாட்டின் செயலகம் பன்னாட்டு உயிரிப்பல்வகைமை ஆண்டுக்கான நிகழ்வுகளையும் செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்தது.

உயிரியல் பன்முகத்தன்மை பற்றிய மாநாடு என்பது பல்லுயிர்களின் பாதுகாப்பும் நிலையான பயன்பாடும் மற்றும் பல்லுயிர்களின் நன்மைகளை சமமாகப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு பன்னாட்டு ஒப்பந்தமாகும் என 1992 ஆம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோவில் நடந்த புவி உச்சி மாநாட்டில் நிறுவப்பட்டது. இம்மாநாடு 193 குழுக்களுடன் கிட்டத்தட்ட உலகளாவிய பங்கேற்பைக் கொண்டிருந்தது.

ஐ.நா.சபையின் பார்வையில் நோக்கங்கள்

[தொகு]

பன்னாட்டு உயிரிப் பல்வகைமை ஆண்டின் நோக்கங்கள்:

  • பல்லுயிர் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கான அடிப்படை அச்சுறுத்தல்கள் பற்றிய பொது விழிப்புணர்வை மேம்படுத்துதல்,
  • சமூகங்கள் மற்றும் அரசாங்கங்களால் உணரப்பட்ட பல்லுயிரியலைக் காப்பாற்றுவதற்கான சாதனைகள் பற்றிய விழிப்புணர்வைக் எடுத்துரைத்தல்,
  • பல்லுயிர் பெருக்கத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை குறைக்க புதுமையான தீர்வுகளை முன்னெடுத்தல்,
  • பல்லுயிர் இழப்பைத் தடுக்க தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களை உடனடியாகச் செயல்பட ஊக்குவித்தல்,
  • 2010 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய காலகட்டத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கான உரையாடலை உறுப்பினர்களிடையே தொடங்குதல்.

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Johns, David (2009). The International Year of Biodiversity–From Talk to Action. Conservation Biology 24 (1): 338–340.
  2. United Nations (2007). "Resolution adopted by the General Assembly on 20 December 2006. 61/203. International Year of Biodiversity, 2010". United Nations. பார்க்கப்பட்ட நாள் January 5, 2020.
  3. Marton-Lefèvre, Julia (2010). Biodiversity is our life. Science 313: 1179. abstract

புற இணைப்புகள்

[தொகு]