பன்னாட்டு அடுக்குப்படிவவியல் ஆணையம்
| சுருக்கம் | ICS |
|---|---|
| உருவாக்கம் | 1974 |
| வகை | INGO |
சேவை பகுதி | பன்னாடுகளிலும் |
ஆட்சி மொழி | ஆங்கிலம், பிரெஞ்சு |
தாய் அமைப்பு | பன்னாட்டு நில அறிவியல்களின் ஒன்றியம் (IUGS) |
| வலைத்தளம் | stratigraphy |
பன்னாட்டு அடுக்குப்படிவவியல் ஆணையம் (International Commission on Stratigraphy - ICS) என்பது அடிப்படையில், பன்னாட்டு நில அறிவியல்களின் ஒன்றியத்தின் (International Union of Geological Sciences - IUGS) கீழ் அமைந்து இருக்கும் பல செயற்குழுக்களில் பெரியதாகவும், நிரந்தரமாகவும் இருக்கும் ஒரு செயற்குழுவாகும். இந்த அமைப்பின் குழு உறுப்பினர்கள் திட்டமிட்டபடி, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறையும், அவ்வப்போது நடைபெறும் கூட்டங்களாலும் செயற்படுகிறது.
இலக்குகள்
[தொகு]1974-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, புதைபடிவப் பதிவேட்டிற்குள் உள்ள, உலகளாவிய எல்லை அடுக்கு வகைப் பகுதியும், புள்ளியும் (Global Boundary Stratotype Section and Point - GSSP) என்ற துல்லியமான அடுக்குத் தட்டு அளவுகோல்களைக் கொண்ட வரையறைகளை[1] உருவாக்குவதாகும். பின்பு, அவ்வரையறைகள் மூலம், பிராந்தியத்திற்குப் பிராந்தியம், தொல்லுயிரியல், புவி உயிரியல் ஆகிய ஒப்பீடுகளை எளிதாக்கும் ஒரு பல்துறை சார்ந்த தரப்படுத்தப்பட்ட, உலகளாவிய புவியியல் கால அளவைகளை உருவாக்குவதாகும். அதாவது, பாறைப் பதிவேட்டின் ஒரு பகுதி, நடு மாதிரிப் பகுதியாகவோ, அணுகக்கூடிய வெளிப்பட்ட பாறை அடுக்குகளாகவோ இருக்கலாம்; இந்நடுவ மாதிரிகள், பொதுவாக ஒரு மீட்டர் நீளமுள்ள நீண்ட துண்டுகளாக 'தட்டுகளில்' அடுக்கப்பட்டிருக்கும், இவையே 'பகுதிகள்' என்றும் அழைக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "International Chronostratigraphic Chart" (PDF). International Commission on Stratigraphy. December 2024. Retrieved October 23, 2025.