பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு
![]() | |
சுருக்கம் | ILO |
---|---|
உருவாக்கம் | 11 ஏப்ரல் 1919 |
வகை | ஐக்கிய நாடுகள் அவையின் சிறப்பு நிறுவனம் |
சட்ட நிலை | செயல்படுகிறது |
தலைமையகம் | ஜெனீவா, Switzerland |
ஆட்சி மொழிகள் | |
தலைமை இயக்குநர் | Gilbert Houngbo |
தாய் அமைப்பு | ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை |
பணிக்குழாம் (2022[2]) | 3,651 |
விருது(கள்) | அமைதிக்கான நோபல் பரிசு (1969) |
வலைத்தளம் | ilo |
பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு (International Labor Organization (ILO)) என்பது சமூக, பொருளாதார நீதியை முன்னெடுக்கும் பன்னாட்டுத் தொழிலாளர் சீர்தரங்களை வகுக்கும் ஒரு ஐக்கிய நாடுகள் அவை அமைப்பாகும்.[1][3] இந்நிறுவனம் 1919ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உலக நாடுகள் சங்கத்தின் கீழ் தொடங்கப்பட்ட, ஐநாவின் முதன்மையானதும் பழமையானதுமான சிறப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். ஐ. நா. வில் உள்ள 193 நாடுகளில் குக் தீவுகள் உள்ளிட்ட 187 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைமையிடம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ளது. உலகெங்கும் உள்ள சுமார் 40 கள அலுவலகங்களில் 107 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,381 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்[4]
ILO பணியிடங்களில் சுதந்திரம், சம வாய்ப்புகள், பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவற்றைத் தம் சீர்தரங்கள் வழி உறுதிப்படுத்துவதன் மூலம் உலகெங்கும் எல்லோருக்கும் நல்ல, நீடித்த வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பாடுபடுகிறது. [5] [6] இச்சீர்தரங்கள் 189 உடன்படிக்கைகள், ஒப்பந்தங்களில் வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் எட்டு சீர்தரங்கள், 1998ஆண்டு அறிவிக்கப்பட்ட பணியிட அடிப்படைக் கொள்கைகள், உரிமைகளின் படி மிகவும் அடிப்படையானவையாகக் கருதப்படுகின்றன. இவை சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டு பேர உரிமை ஆகியவற்றைப் பாதுகாக்கின்றன. குழந்தைத் தொழிலாளர் முறை, கட்டாய உழைப்பு, பணியிடத்தில் பாகுபாடு ஆகியவற்றை ஒழிக்கப் பாடுபடுகின்றன. ILO பன்னாட்டுத் தொழிலாளர் சட்டத்திற்குக் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றுகிறது.
1969 ஆம் ஆண்டு, நாடுகளிடையே சகோதரத்துவத்தையும் அமைதியையும் மேம்படுத்தியதற்காகவும், தொழிலாளர்களுக்கு நயமான வேலையையும் நீதியையும் பெற்றுத் தர உழைப்பதற்காகவும், வளரும் நாடுகளுக்குத் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருவதற்காகவும் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கினார்கள். [7]
பன்னாட்டுத் தொழிலாளர் மாநாடு
[தொகு]பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஜெனீவாவில் பன்னாட்டுத் தொழிலாளர் மாநாட்டை (ILC) ஏற்பாடு செய்கிறது. இவ்வமைப்பிற்கான உடன்படிக்கைகள், பரிந்துரைகள் உள்ளிட்ட பரந்த அளவிலான கொள்கைகளை வரையறுப்பதற்காக நடக்கும் இம்மாநாட்டினை பன்னாட்டுத் தொழிலாளர்களின் பாராளுமன்றம் என்றும் அழைப்பர்.[8] இம்மாநாட்டில் அமைப்பின் ஆட்சிக்குழுவைத் தேர்ந்தெடுப்பதுடன், பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் பொதுவான கொள்கைகள், வேலைத் திட்டம், நிதிநிலை ஆகியவை தொடர்பான முடிவுகளும் எட்டப்படுகின்றன.
திட்டங்கள்
[தொகு]தொழிலாளர் புள்ளிவிவரங்கள்
[தொகு]தொழிலாளர் புள்ளிவிவரங்களை வழங்கும் ஒரு முக்கிய நிறுவனமாகப் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு திகழ்கிறது. இப்புள்ளிவிவரங்கள் உறுப்பு நாடுகள் தம் தொழிலாளர் நிலையை மேம்படுத்துவதில் எட்டும் முன்னேற்றத்தைக் கண்காணிக்க உதவுகின்றன. அவர்களின் புள்ளிவிவரப் பணியின் ஒரு பகுதியாக, ILO பல தரவுத்தளங்களைப் பராமரிக்கிறது. [9] இந்தத் தரவுத்தளம் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான 11 முக்கிய தரவுத் தொடர்களைக் கொண்டுள்ளது. மேலும், ILO தொழிலாளர் புள்ளிவிவரங்கள் தொடர்பாகப் பல தொகுப்பிதழ்களை வெளியிடுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தொழிலாளர் சந்தைகளின் முக்கிய சுட்டிகள் [10] (Key Indicators of Labour Markets - KILM) என்னும் அறிக்கையைக் குறிப்பிடலாம். KLIM தொகுப்பிதழில் தொழிலாளர் பங்கேற்பு விகிதங்கள், வேலைவாய்ப்பு, வேலையின்மை, கல்வி நிலை, தொழிலாளர் செலவு, பொருளாதார செயல்திறன் முதலிய 20 முக்கிய சுட்டிகளைக் காணலாம்.
கல்வி, பயிற்சி நிறுவனங்கள்
[தொகு]பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் பன்னாட்டுப் பயிற்சி மையம் (ITCILO) இத்தாலியின் துரின் நகரில் அமைந்துள்ளது. [11] இங்கு அவர்கள் அதிகாரிகளுக்கும் செயலக உறுப்பினர்களுக்கும் பயிற்சியும், கற்றல் வாய்ப்புகளையும் வழங்குகிறார்கள். உலகெங்கிலும் உள்ள சுமார் 11,000 பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் 450க்கும் மேற்பட்ட பயிற்சிகளை வழங்குகிறார்கள்.
குழந்தைத் தொழிலாளர்
[தொகு]
குழந்தைத் தொழிலாளர் என்னும் சொல் பெரும்பாலும் குழந்தைகளின் குழந்தைப் பருவம், ஆற்றல், கண்ணியம் ஆகியவற்றைப் பறித்து அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிக்கும் வேலை என்று வரையறுக்கப்படுகிறது.
குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான ILOவின் எதிர்வினை
[தொகு]
குழந்தைத் தொழிலாளர் முறையைப் படிப்படியாக ஒழிப்பதையே ஒட்டுமொத்தக் குறிக்கோளாகக் கொண்டு 1992 ஆம் ஆண்டு பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் திட்டம் (IPEC) உருவாக்கப்பட்டது. IPEC தற்போது 88 நாடுகளில் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இது உலகளவில் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு முன்னெடுத்துள்ள தனிப்பெரும் செயல்பாட்டுத் திட்டமாகும்.
பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு உலகளவில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உடனடி நடவடிக்கை எடுக்கவும், 2002 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதியைக் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாளாகக் கடைப்பிடித்து வருகிறது. இந்த நிகழ்வு, 2025 ஆம் ஆண்டுக்குள் அடிமைத்தனம், குழந்தைப் போராளி முறையை ஒழிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. அதேவேளை, குழந்தைகளின் வளர்ச்சி, கல்வியைத் தடுக்கும் தீங்கு விளைவிக்கும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கும், அவர்களின் வளர்ச்சி, கற்றலை ஆதரிக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேலைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைப் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு புரிந்துகொள்கிறது.
கட்டாய உழைப்புச் சுரண்டலை எதிர்த்துப் போரிடுவதற்கான சிறப்புச் செயல் திட்டம்
[தொகு]கட்டாய உழைப்புச் சுரண்டலை எதிர்த்துப் போரிடுவதற்கான சிறப்புச் செயல் திட்டம் (SAP-FL) ஒன்று நவம்பர் 2001 இல் உருவாக்கப்பட்டது. [12] SAP-FL கட்டாய உழைப்புச் சுரண்டல் முறைகளைப் பற்றிய சுட்டிகளை வகுத்துள்ளது. [13] மேலும், இம்முறைகளைப் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறது. [14]
சிக்கல்கள்
[தொகு]கட்டாய உழைப்பு
[தொகு]
பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு கட்டாய உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தை அதன் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகக் கருதுகிறது. இரண்டு உலகப்போர்களுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில், இச்சிக்கல் ஒரு குடியேற்றவியக் கால நிகழ்வாகவே கருதப்பட்டது. அக்காலகட்டத்தில், குடியேற்றப் பகுதிகளில் வாழ்ந்த மக்களை மிகவும் மோசமான கட்டாய உழைப்புச் சுரண்டலிலிருந்து காக்கும் பொருட்டு குறைந்தபட்ச சீர்தரங்களையாவது உருவாக்குவதே பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் கவனமாக இருந்தது. [15] 1945 க்குப் பிறகு, பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்புக்கு இரண்டாம் உலகப் போரின் போது அரசியல், பொருளாதார காரணங்களுக்காக நிகழ்ந்த கட்டாய உழைப்புச் சுரண்டல் முறைகளைப் பற்றிய மேம்பட்ட விழிப்புணர்வு கிடைத்தது. இதன் அடிப்படையில், உலகெங்கும் ஒரு சீரான நெறிமுறையைக் கொண்டு வருவதைத் தன் இலக்காகக் கொண்டது. ஆயினும், பனிப்போரின் காரணமாகவும் குடியேற்றவியச் சக்திகள் கோரிய விதிவிலக்குகள் காரணமாகவும் இப்பணி தடைப்பட்டது. 1960களுக்குப் பிறகு, மனித உரிமைகளின் ஒரு கூறாகத் தொழிலாளர் சீர்தரங்களும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இருந்தாலும், குடியேற்றவிய காலத்திற்குப் பிந்தைய நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை விரைந்து முன்னேற்ற வேண்டிய நெருக்கடி நிலையைச் சுட்டிக் காட்டி தொழிலாளர்கள் மீது அளவுக்குமீறிய அதிகாரங்களைக் கோரின. இதன் காரணமாக, பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் முன்னெடுப்புகளை எதிர்பார்த்த அளவு நடைமுறைப்படுத்த இயலவில்லை. [16] [17]

நவம்பர் 2001 இல், பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் நிர்வாகக் குழு, கட்டாய உழைப்பை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சிறப்புச் செயல் திட்டத்தை (SAP-FL) உருவாக்கியது. [18]

SAP-FL தொடங்கியது முதல், அது பல்வேறு வடிவங்களில் நிகழும் கட்டாய உழைப்புச் சுரண்டல் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒன்று குவிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது. கட்டாய உழைப்பு, மனித கடத்தல், கட்டாய வீட்டு வேலை, கிராமப்புற அடிமைத்தனம், சிறைக்கைதிகளைக் வலுக்கட்டாயமாக உழைப்பில் ஈடுபடுத்துதல் போன்ற வெவ்வேறு வகையிலான கட்டாய உழைப்புச் சுரண்டல் முறைகள் குறித்து நாடுவாரியாகவும் துறைவாரியாகவும் ஆய்வுகளையும் கருத்தெடுப்புகளையும் மேற்கொண்டு வருகிறது.
2014 ஆம் ஆண்டு நடந்த பன்னாட்டுத் தொழிலாளர் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ILO கட்டாய உழைப்பு நெறிமுறை கட்டாய உழைப்பை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு முக்கியக் கருவியாகத் திகழ்கிறது. [19]
குறைந்தபட்ச ஊதியச் சட்டம்
[தொகு]குறைந்தபட்ச ஊதியத்தை வரையறுப்பதற்கான தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாப்பதற்காக, பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு 1930 முதல் 1970 வரை பல உடன்படிக்கைகளை இறுதி செய்துள்ளது.
வணிகமயமாக்கப்பட்ட பாலுறவு
[தொகு]1919 ஆம் ஆண்டு வெர்சாய்ஸ் ஒப்பந்தத்தையடுத்து, ILO உருவானதில் இருந்து, அது வணிக நோக்கிலான பாலுறவுப் பிரச்சினையில் அக்கறை காட்டிவருகிறது. ILOவும் உலக நாடுகள் சங்கமும் உருவாகும்வரை, பாலுறவு வேலை என்பது அரசுகளின் வரம்பிற்குள் மட்டுமே இருந்தது. ஆனால், இவ்விரு அமைப்புகளும் இந்தப் பிரச்சினை நாட்டின் எல்லைகளைக் கடந்து நெறிப்படுத்தக்கூடிய வரம்பிற்குள் இருப்பதாகக் கருதத்தொடங்கின. [20] பெண்கள் தொழில்துறை வேலைகளில் ஈடுபட்டால், அது அவர்கள் நெறிதவறிய வாழ்க்கை வாழ்வதைத் தடுக்கும் என்று ILO நம்பியது. இந்தத் தொழில்துறை வேலைகளை மேலும் பயன்மிக்கதாக மாற்றுவதற்காக, ILO நல்ல ஊதியங்களையும் பணியிடப் பாதுகாப்பையும் ஊக்குவித்தது. இவ்விரண்டும் பெண்கள் பாலுறவு வர்த்தகங்களின் பிடியில் சிக்கிக்கொள்வதைத் தடுக்கும் என்கிற நோக்கில் முன்னெடுக்கப்பட்டது. [21]
1976 ஆம் ஆண்டு தொடங்கி, ILOவும் பிற அமைப்புகளும் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த ஊர்ப்புறப் பெண்களின் பணிகளையும் வாழ்க்கைத் தரத்தையும் ஆராயத் தொடங்கின. [22] 1970களின் பிற்பகுதியில், ILO ஊர்ப்புறங்களில் இருந்து பாங்காங்குக்கு வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள இளம் பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டது. [22] புலம்பெயர்ந்த பிறகு பெண்களின் அனுபவங்களையும், ஊர்ப்புறங்களை விட்டு வெளியேறிய பிறகு பெண்களின் குடும்பங்களில் ஏற்படும் தாக்கத்தையும் ஆராய்ந்தது. [22] இந்த ஆய்வின் முடிவாக வெளியான அறிக்கை ஊர்ப்புற, நகர்ப்புற குடும்பங்களுக்கு இடையிலான பரந்த வருமான இடைவெளியை அம்பலப்படுத்தியதுடன் இத்தொழிலில் ஈடுபடுவதற்கான பொருளாதார நோக்கங்களையும் வெளிப்படுத்தியது. [22] இது ஒரு குறிப்பிடத்தக்க ஆய்வாகும். ஏனெனில், ILOவும் சரி அதன் கிளை அமைப்புகளும் சரி, பாலுறவுத் தொழிலை ஒரு உழைப்பின் வடிவமாகக் கருதியது இதுவே முதல்முறையாகும். [22] இதைத் தொடர்ந்து வந்த அடுத்தடுத்த பத்தாண்டுகளில், பாலுறவுச் சுற்றுலாவின் மீதான நாட்டம் கூடியதும் எய்ட்ஸ் தொற்றுநோய் கட்டுக்கடங்காமல் பரவத் தொடங்கியதும் வணிகப் பாலுறவு வர்த்தகத்தில் ILOவின் கவனத்தைக் கூர்மைப்படுத்தியது. [23]மேற்கண்ட ஆய்வினால் உந்தப்பட்டு, ஆசிய, பசிப்பிக் பகுதி பெண் தொழிலாளர்கள் தொடர்பான ILOவின் மூத்த வல்லுநர் லின் லிம், மற்றொரு ஆய்வை வெளியிட்டார். லிம்மின் ஆய்வு இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்தில் பாலுறவுத் தொழிலின் வளர்ச்சிக்கு நேரடியாக பங்களித்த பல்வேறு சமூக, பொருளாதாரக் காரணிகளை விரிவாகக் கூறியது. [23] இந்த ஆய்வுகள் வணிகப் பாலுறவுத் தொழிலில் ஈடுபடுவதன் மூலம் பெண்களுக்குக் கூடுதலாக ஊதியம், வீட்டு வேலை - பணியிட வேலைக்கு இடையில் நெகிழ்வுத் தன்மை, புலம்பெயரும் வாய்ப்புகள் போன்றவை கிடைப்பதாகவும் இத்தகைய பொருளாதாரக் காரணங்கள், நன்மை காரணமாகவே அவர்கள் இத்தொழிலில் ஈடுபடுவதாகவும் கூறியது. [23] இந்த ஆய்வறிக்கையை வழங்கிய வல்லுநர்கள் பாலுறவுத் தொழிலை ஒரு சட்டப்பாதுகாப்பு உள்ள தொழில்துறையாக ஏற்பு அளிக்க வேண்டும் என்று வாதிட்டனர். [23]
எச்.ஐ.வி/எய்ட்ஸ்
[தொகு]பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு எச்.ஐ.வி தொடர்பான பணியிடக் கொள்கைகள், திட்டங்கள், தனியார் துறை அணிதிரட்டல் ஆகியவற்றில் ஈடுபட்டுவரும் ஐக்கிய நாடுகள் அவையின் முன்னணி நிறுவனமாகும். ILOAIDS [24] என்பது இந்தப் பிரச்சினையைத் தனிக்கவனம் எடுத்துச் செயற்பட்டுவரும் ILOவின் கிளை அமைப்பாகும்.
புலம்பெயர் தொழிலாளர்கள்
[தொகு]புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் வேலைக்காக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்பவர்கள். அவர்களின் சமத்துவத்தையும் ஒருங்கிணைப்பையும் உறுதி செய்யும் வகையிலான பரிந்துரை ஒன்றை முதலாவது தொழிலாளர் உடன்படிக்கை ஏற்றுக்கொண்டது. மேலும், 1975ஆம் ஆண்டு நடந்த புலம்பெயர் தொழிலாளர் உடன்படிக்கை மாநாடு, 1990ல் நடந்த புலம்பெயர் தொழிலாளர்கள், குடும்பத்தினர்கள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் அவை உடன்படிக்கை ஆகியவை அவர்கள் உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டது. [25]
வீட்டு வேலையாட்கள்
[தொகு]வீட்டு வேலையாட்கள் என்போர், பிறருக்காக அவர்களின் வீடுகளுக்கே சென்று சமையல், சுத்தம் செய்தல், குழந்தைகளைக் கவனித்தல் போன்ற பல்வேறு பணிகளைச் செய்வோர் ஆவர். பெண்கள் காலம் காலமாக ஊதியம் ஏதுமின்றி வீட்டுப் பணிகளைச் செய்து வருவதன் காரணமாக, அவர்கள் பெரும்பாலும் சமூகம், தொழிலாளர்கள் பெறும் வழமையான பாதுகாப்பினைப் பெற இயலாதவர்களாகவே உள்ளனர். [26] புலம்பெயர்ந்தோர் உள்ளிட்ட வீட்டுப் பணியாளர்களுக்கான நயமான பணி உரிமைகள் தொடர்பாக, ILP 16 சூன் 2011 அன்று, வீட்டு வேலையாட்களுக்கான உடன்படிக்கை ஒன்றை நடைமுறைப்படுத்தியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Staff writer (2024). "International Labour Organization (ILO)". uia.org. Brussels, Belgium: Union of International Associations. Retrieved 24 December 2024.
- ↑ https://unsceb.org/hr-organization
- ↑ "Mission and impact of the ILO". International Labour Organization. 28 January 2024. Archived from the original on Mar 1, 2024.
- ↑ "Departments and offices". International Labour Organization (in ஆங்கிலம்). Archived from the original on Aug 12, 2021. Retrieved 2021-07-15.
- ↑ "Labour standards". International Labour Organization (in ஆங்கிலம்). Archived from the original on May 1, 2020. Retrieved 2020-04-27.
- ↑ "Introduction to International Labour Standards". International Labour Organization. Archived from the original on Dec 31, 2023.
- ↑ "The Nobel Peace Prize 1969 - Facts". Nobelprize.org. Retrieved 5 July 2006.
- ↑ "International Labour Conference". International Labour Organization. Retrieved 24 May 2012.
- ↑ "ILO statistics overview". International Labour Organization. 16 April 2024.
- ↑ "Key Indicators of the Labour Market (KILM)". International Labour Organization. 11 December 2013.
- ↑ BIZZOTTO. "ITCILO – International Training Center". Archived from the original on 10 July 2015. Retrieved 21 May 2008.
- ↑ Plant, Roger; O'Reilly, Caroline (March 2003). "The ILO's Special Action Programme to Combat Forced Labour". International Labour Review 142 (1): 73. doi:10.1111/j.1564-913X.2003.tb00253.x.
- ↑ Chantavanich, Supang; Laodumrongchai, Samarn; Stringer, Christina (2016). "Under the shadow: Forced labour among sea fishers in Thailand" (in en). Marine Policy 68: 6. doi:10.1016/j.marpol.2015.12.015. பன்னாட்டுத் தர தொடர் எண்:0308-597X. Bibcode: 2016MarPo..68....1C.
- ↑ Lerche, Jens (October 2007). "A Global Alliance against Forced Labour? Unfree Labour, Neo-Liberal Globalization and the International Labour Organization". Journal of Agrarian Change 7 (4): 427. doi:10.1111/j.1471-0366.2007.00152.x. Bibcode: 2007JAgrC...7..425L.
- ↑ Burbank, Jane; Cooper, Frederick (2010). Empires in World History: Power and the Politics of Difference (in ஆங்கிலம்). Princeton University Press. p. 386. ISBN 978-0-691-12708-8.
- ↑ Daniel Roger Maul (2007). "The International Labour Organization and the Struggle against Forced Labour from 1919 to the Present". Labor History 48 (4): 477–500. doi:10.1080/00236560701580275. https://archive.org/details/sim_labor-history_2007-11_48_4/page/n78.
- ↑ Solzhenitsyn, Aleksandr.(1973) The Gulag Archipelago: An Experiment in Literary Investigation. Parisian publisher YMCA-Press.
- ↑ "Forced labour, human trafficking and slavery". International Labour Organization.
- ↑ "ILO Recommendation 203".
- ↑ Boris, Eileen; Rodriguez Garcia, Magaly (Winter 2021). "(In)Decent Work: Sex and the ILO". Journal of Women's History 33 (4): 197. doi:10.1353/jowh.2021.0050. https://lirias.kuleuven.be/handle/123456789/685091.
- ↑ Boris, Eileen; Garcia, Magaly Rodriguez (Winter 2021). "(In)Decent Work: Sex and the ILO". Journal of Women's History 33 (4): 201. doi:10.1353/jowh.2021.0050. https://lirias.kuleuven.be/handle/123456789/685091.
- ↑ 22.0 22.1 22.2 22.3 22.4 Garcia, Magaly Rodriguez (2018). Bosma, Ulbe; Hofmeester, Karin (eds.). The ILO and the Oldest Non-Profession in The Lifework of a Labor Historian: Essays in Honor of Marcel van der Linden. Brill. p. 105.
- ↑ 23.0 23.1 23.2 23.3 Garcia, Magaly Rodriguez (2018). Bosma, Ulbe; Hofmeester, Karin (eds.). The ILO and the Oldest Non-Profession in The Lifework of a Labor Historian: Essays in Honor of Marcel van der Linden. Brill. p. 106.
- ↑ "HIV/AIDS and the World of Work Branch (ILOAIDS)". International Labour Organization.
- ↑ Kumaraveloo, K Sakthiaseelan; Lunner Kolstrup, Christina (2018-07-03). "Agriculture and musculoskeletal disorders in low- and middle-income countries" (in en). Journal of Agromedicine 23 (3): 227–248. doi:10.1080/1059924x.2018.1458671. பன்னாட்டுத் தர தொடர் எண்:1059-924X. பப்மெட்:30047854.
- ↑ "Domestic workers". International Labour Organization. Retrieved 24 May 2012.
மேலும் படிக்க
[தொகு]- Alcock, A. History of the International Labour Organization (London, 1971)
"International Labour Organization". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (12வது). (1922). [[Category:விக்கிமூலத்திலிருந்து 1922 பிரிட்டானிக்கா என்சைக்ளோபீடியா மேற்குறிப்பைக் கொண்ட விக்கிப்பீடியா கட்டுரைகள்]]
- Chisholm, A. Labour's Magna Charta: A Critical Study of the Labour Clauses of the Peace Treaty and of the Draft Conventions and Recommendations of the Washington International Labour Conference (London, 1925)
- Dufty, N.F. "Organizational Growth and Goal Structure: The Case of the ILO," International Organization 1972 Vol. 26, pp 479–498 in JSTOR
- Endres, A.; Fleming, G. International Organizations and the Analysis of Economic Policy, 1919–1950 (Cambridge, 2002)
- Evans, A.A. My Life as an International Civil Servant in the International Labour Organization (Geneva, 1995)
- Ewing, K. Britain and the ILO (London, 1994)
- Fried, John H. E. "Relations Between the United Nations and the International Labor Organization," American Political Science Review, Vol. 41, No. 5 (October 1947), pp. 963–977 in JSTOR
- Galenson, Walter. The International Labor Organization: An American View (Madison, 1981)
- Ghebali, Victor-Yves. "The International Labour Organisation : A Case Study on the Evolution of U.N. Specialised Agencies" Dordrecht, Martinus Nijhoff Publishers, (1989)
- Guthrie, Jason. "The international labor organization and the social politics of development, 1938–1969." (PhD Dissertation, University of Maryland, 2015).
- Haas, Ernst B. "Beyond the nation-state: functionalism and international organization" Colchester, ECPR Press, (2008)
- Heldal, H. "Norway in the International Labour Organization, 1919–1939" Scandinavian Journal of History 1996 Vol. 21, pp 255–283,
- Imber, M.F. The USA, ILO, UNESCO and IAEA: politicization and withdrawal in the Specialized Agencies (1989)
- Johnston, G.A. The International Labour Organization: Its Work for Social and Economic Progress (London, 1970)
- Ahmady, Kameel 2021:Traces of Exploitation in the World of Childhood (A Comprehensive Research on Forms, Causes and Consequences of Child Labour in Iran). Avaye Buf Publisher, Denmark
- McGaughey, E. 'The International Labour Organization's Next Century: Economic Democracy, and the Undemocratic Third' (2021) 32(2) King's Law Journal 287, and on SSRN
- Manwaring, J. International Labour Organization: A Canadian View (Ottawa, 1986)
- Morse, David. The Origin and Evolution of the ILO and its Role in the World Community (Ithaca, 1969)
- Morse, David. "International Labour Organization – Nobel Lecture: ILO and the Social Infrastructure of Peace"
- Ostrower, Gary B. "The American decision to join the international labor organization", Labor History, Volume 16, Issue 4 Autumn 1975, pp 495–504 The U.S. joined in 1934
- Silva, Vicente. "The ILO and the future of work: The politics of global labour policy". Global Social Policy. March 2021. https://journals.sagepub.com/doi/full/10.1177/14680181211004853
- VanDaele, Jasmien. "The International Labour Organization (ILO) In Past and Present Research," International Review of Social History 2008 53(3): 485–511, historiography