உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னாட்டுக் கணித்தமிழ்24 மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநாட்டு முகப்பு

பன்னாட்டுக் கணித்தமிழ்24 மாநாடு (International KaniTamil24 Conference) என்பது தமிழ்நாடு அரசின், தமிழ் இணையக் கல்விக்கழகத்தால், 2024இல் பிப்ரவரி 8 முதல் 10 வரை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த ஒரு மாநாடாகும்.[1]

அறிவிப்பு

[தொகு]

தமிழ்நாடு அரசு வெளியிட்ட 2023 - 2024 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்க் கணினிப் பன்னாட்டு மாநாடு நடத்தப்படும் என அறிவித்தது, இம்மாநாட்டிற்காக www.kanitamil.in என்ற வலைத்தளம் தொடங்கப்பட்டது.[2]


மாநாட்டு நிகழ்வுகள்

[தொகு]

இந்த மாநாட்டில் குழு விவாதங்கள் கட்டுரை வாசித்தல் கண்காட்சி நிரல்கள போட்டி (Hackathon) போன்றவை நடைபெற்றன.[2] [3]

மாநாட்டு வெளியீடுகள்

[தொகு]

இந்த மாநாட்டில் தமிழ்நெட் 99 முதல் கணித்தமிழ் 24 வரை நடந்த கணித்தமிழின் பயணம் குறித்த அறிஞர்களின் கட்டுரைகள் அடங்கிய கணித்தொகை என்ற சிறப்பு மலரும்[4] கணிக்கோவை என்ற மாநாட்டு மலரும் வெளியிடப்பட்டது.[1] இம்மாநாட்டில் கலைஞர் இலக்கணப் பகுப்பி என்ற மென்பொருள் வெளியிடப்பட்டது [5]

தமிழ் விக்கிப்பீடியா அரங்கு

[தொகு]
தமிழ் விக்கிப்பீடியா அரங்கம்

கணித்தமிழ்24 மாநாட்டில் தமிழ் விக்கிபீடியா சார்பில் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த அரங்கில் தமிழ் விக்கிப்பீடியாவில் தொகுப்பது குறித்து பாரவையாளர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாகிகளால் எடுத்துரைக்கப்பட்டது. அரங்கில் தமிழ் விக்கிப்பீடியா கடந்து வந்த பாதை சாதனைகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டது. தமிழ் விக்கிப்பீடியாவில் தொகுப்பது குறித்து தனையாக உரையரங்கில் பயிற்சி வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "சென்னையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தரமான சம்பவம்... இது கணித்தமிழ் 24 மாநாடு ஸ்பெஷல்!". சமயம் தமிழ் (www.tamil.samyam.com). 8 February 2024. https://tamil.samayam.com/photogallery/news/minister-ptr-palanivel-thiagarajan-special-speech-at-international-tamil-computing-conference-kanitamil24/photoshow/107532918.cms. பார்த்த நாள்: 7 May 2025. 
  2. 2.0 2.1 "சென்னையில் பிப். 8,9,10-ல் தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு". இந்து தமிழ் திசை. 11 October 2023. https://www.hindutamil.in/news/tamilnadu/1137159-kanini-tamil-international-conference-on-february-2024-cm-mk-stalin.html. பார்த்த நாள்: 23 April 2025. 
  3. "தமிழ் இணைய கல்வி கழகத்தின் கணித்தமிழ் மாநாட்டில் 'ஹேக்கத்தான்' போட்டி". இந்து தமிழ் திசை. 23 November 2023. https://www.hindutamil.in/news/tamilnadu/1157725-hackathon-competition.html. பார்த்த நாள்: 24 April 2025. 
  4. "கணித்தமிழ் மாநாடு நிறைவு விழா: மாநாட்டு மலரை வெளியிட்டார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்". தினத்தந்தி. 10 February 2024. https://www.dailythanthi.com/News/State/mathematical-conference-closing-ceremony-minister-palanivel-thiagarajan-unveils-the-mathematics-conference-flower-1093394. பார்த்த நாள்: 23 April 2025. 
  5. "ஐடி துறையில் அடுத்த பாய்ச்சல்.. ஏழு கணித்தமிழ் மென்பொருள்கள் வெளியீடு - பிடிஆர் அசத்தல்!". சமயம் தமிழ் (www.tamil.samayam.com). 27 August 2024. https://tamil.samayam.com/latest-news/state-news/it-minister-ptr-palanivel-thiagarajan-launch-seven-kanithamizh-softwares/articleshow/112843832.cms. பார்த்த நாள்: 7 May 2025. 

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கணித்தமிழ்24
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மாநாட்டு இணையத்தளம் at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது 2023-10-19)

(PDF வடிவிலும் உள்ளது)