பன்சீர் மாகாணம்
பன்சீர்
پنجشیر | |
---|---|
Map of Afghanistan with Panjshir highlighted | |
ஆள்கூறுகள்: 35°25′39″N 69°44′06″E / 35.42750°N 69.73500°E | |
நாடு | ஆப்கானித்தான் |
தலைநகரம் | Bazarak |
அரசு | |
• ஆளுநர் | Muhammad Arif Sarwari |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,771 km2 (1,456 sq mi) |
மக்கள்தொகை (2021)[1] | |
• மொத்தம் | 1,72,895 |
• அடர்த்தி | 46/km2 (120/sq mi) |
நேர வலயம் | ஒசநே+4:30 (ஆம்கானித்தான் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | AF-PAN |
முதன்மை மொழிகள் | தாரி மொழி |
பாஞ்ச்சிர் (பொருள்: ஐந்து சிங்கங்கள் பாரசீக மொழி:پنجشیر) என்பது ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில் ஒன்று. இது நாட்டின் வடகிழக்கு பகுதியில் பாஞ்ச்சிர் சமவெளியைக் கொண்டுள்ளது. இம்மாகாணம் ஏழு மாவட்டங்காள பிரிக்கபட்டு, 512 கிராமங்களை உள்ளடக்கியது. 2021 நிலவரப்படி, பஞ்ச்சீர் மாகாணத்தின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 173,000 ஆகும்.[1][2] ஜராக் மாகாண தலைநகராக விளங்குகிறது. இது தற்போது ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் 2021 தலிபான் தாக்குதலைத் தொடர்ந்து தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வராத இரண்டு மாகாணங்களில் பாக்லானும் பாஞ்ச்சிரும் ஆகும்.
பாஞ்ச்சிர் 2004 இல் அண்டை மாகாணமான பர்வான் மாகாணத்திலிருந்து தனி மாகாணமாக மாறியது. இது வடக்கில் பாக்லான் மற்றும் தாகர், கிழக்கில் படாக்சான் மற்றும் நூரிஸ்தான் மாகாணங்களும், தெற்கில் லக்மான் மற்றும் கபிசா மாகாணங்களும் மேற்கில் பர்வான் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டுள்ளது. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலோனர் தஜிக், ஹஸாரா, பாஸி, நூரிஸ்தானி, ஹில்ஸாய் பஷ்தூன் மேலும் சில சிறுபான்மையினார் உள்ளனர். டாரி பெர்சியன் என்பது முக்கிய மொழி ஆகும். அதற்குப்பின் பாரசீக மொழி முக்கியமான ஒன்றாகும். சுன்னி இன மக்கள் அதிக அளவில் இருக்கின்றனர்.
வரலாறு
[தொகு]இந்தப் பிரதேசம் 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை புகாரா கானேடால் ஆளப்பட்டது. பர்வான் பகுதி, பஞ்ஜீர் உட்பட, அஹ்மத் ஷா துராணியால் கைப்பற்றப்பட்டு, துராணிப் பேரரசின் ஒரு பகுதியானது. இது புகாராவின் முராத் பேகிடுனான, 1750 இன் நட்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பிறகு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. துராணிகளின் ஆட்சி பராக்ஸாய் வம்சத்தின் ஆட்சியைத் தொடர்ந்து வந்தது. 19 ஆம் நூற்றாண்டில், இப்பகுதி ஆப்கானித்தான் அமீரகத்தின் பகுதியாக மாறியது. ஆனால் ஆங்கிலோ-ஆப்கன் போர்கள் போன்ற பிரித்தானிய ஊடுருவல்களால் பெரிதும் பாதிக்கப்படவில்லை. ஆப்கானிஸ்தானின் மற்ற பகுதிகளைப் போலவே, பாஞ்ச்சீரும் 1926 சூனில் புதிதாக நிறுவப்பட்ட ஆப்கானித்தான் இராச்சியத்தின் ஒரு பகுதியாக மாறியது.
1973 சூலையில், தளபதி சர்தார் முகமது தாவூத் கான் தலைமையிலான துருப்புக்கள் ஆப்கானிய முடியாட்சியை அகற்றி ஆப்கானித்தான் குடியரசை நிறுவினர். இந்த இராணுவப் புரட்சியின் முடிவில், தளபதி தாவூத் அதிகாரத்தைக் கைப்பற்றினார். ஆப்கானித்தானின் முதல் ஜனாதிபதியாக தன்னை அறிவித்துக்கொண்டார். இவர் பாகித்தானில் பஷ்தூன் ஆதிக்கம் நிறைந்த பிரதேசத்தின் மீது உரிமை கோரத் தொடங்கினார். இது பாகித்தான் அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. 1975 வாக்கில், இளம் அகமது ஷா மசூத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாஞ்ச்சிரில் கிளர்ச்சியைத் தொடங்கினர். ஆனால் பின்னர் பாகித்தானில் உள்ள பெஷாவருக்கு தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அங்கு அவர்கள் பாகித்தான் பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோவின் ஆதரவைப் பெற்றனர். காஃபூலில் ஏப்ரல் 1978 சௌர் புரட்சிக்கு பூட்டோ வழி வகுத்ததாகக் கூறப்படுகிறது.[3]
அகமது ஷா மசூத் மற்றும் அவரது படைகளுக்கு எதிராக, சோவியத்-ஆப்கானிஸ்தான் போரின் போது பாஞ்ச்சிர் பல முறை தாக்கப்பட்டது. பிராந்தியத்தின் எழுச்சிக்குப் பிறகு 1979 ஆகத்து 17 முதல் பாஞ்ச்சிர் பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.[4] ஆப்கானித்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி அரசு மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான 1980 களில் சோவியத் -ஆப்கானிஸ்தான் போரின்போது இதன் மலைப்பகுதிகளின் பாதுகாப்புடன்,[5] இப்பகுதி முஜாகிதீன் தளபதிகளால் நன்கு பாதுகாக்கப்பட்டது.
1992 இல் ஆப்கானித்தான் ஜனநாயகக் குடியரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, இப்பகுதி ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய அரசின் பகுதியாக மாறியது. 1990 களின் பிற்பகுதியில், பாஞ்ச்சிர் மற்றும் அண்டை மாகாணமான படாக்சான் மாகாணம் தலிபான்களுக்கு எதிரான வடக்குக் கூட்டணியின் ஆதரவு தளமாக செயல்பட்டது. 2001 செப்டம்பர் 9 அன்று, பாதுகாப்பு அமைச்சர் மசூத் இரண்டு அல் காயிதா இயக்கத்தினரால் படுகொலை செய்யப்பட்டார்.[6] இரண்டு நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் தாக்குதல்கள் அமெரிக்காவில் நிகழ்ந்தன. இது ஆப்கானித்தானில் ஒரு பெரிய அமெரிக்க தலைமையிலான போரின் தொடக்கத்திற்கு வழிவகுத்தது.
பர்வான் மாகாணத்துக்கு உட்பட்ட பாஞ்ச்சிர் சமவெளியைக் கொண்ட பாஞ்ச்சிர் மாவட்டமானது கர்சாய் நிர்வாகத்தினினால் 2004 ஏப்ரலில் ஒரு தனி மாகாணமாக மாற்றப்பட்டது. ஆப்கானித்தான் தேசிய பாதுகாப்புப் படை மாகாணத்தில் பல தளங்களை நிறுவியது. மேலும், சர்வதேச பாதுகாப்பு உதவிப் படை (ஐஎஸ்ஏஎஃப்) கூட தளங்களை நிறுவியது, அமெரிக்க தலைமையிலான மாகாண மறுசீரமைப்பு குழு (பிஆர்டி) 2000 களின் பிற்பகுதியில் பஞ்ச்சிரில் செயல்படத் தொடங்கியது.
2021 ஆகத்து 15 இல் காபூல் வீழ்ச்சியைத் தொடர்ந்து, ஆப்கானித்தானின் இஸ்லாமிய குடியரசிற்கு விசுவாசமான தலிபான் எதிர்ப்புப் படைகள் பஞ்ச்சிர் மாகாணத்திற்கு தப்பிச் சென்றன.[7] அவர்கள் ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணியை உருவாக்கி, பஞ்ச்சிர் மோதலில் புதிய ஆப்கானித்தானின் இஸ்லாமிய அமீரகத்துடன் தொடர்ந்து போராடினர். புதிய எதிர்ப்பு படைகள் வடக்குக் கூட்டணியின் பழைய கொடியை பறக்கவிட்டன.[8] இந்த எதிர்ப்பு படைகள் பாஞ்ச்சிர் சமவெளியைப் பிடித்து அண்டை மாகாணங்களில் உள்ள மாவட்டங்களையும் கைப்பற்றியது.[9] 2021 செப்டம்பர் துவக்கத்தில், தலிபான் படைகள் பஞ்ச்சிரில் நுழைந்து ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணியிலிருந்து பல மாவட்டங்களைக் கைப்பற்றினர்.[10] எஞ்சியுள்ள எதிர்ப்புப் போராளிகள் மலைகளுக்கு பின்வாங்க செப்டம்பர் 6 ஆம் தேதி பஜாராக் நகரை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.[11][12][13]
அரசியலும், ஆட்சியும்
[தொகு]மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் கமாலுதீன் நெசாமி உள்ளார். அவருக்கு முன்பு முஹம்மது ஆரிஃப் சர்வாரி மற்றும் கெராமுதீன் கெராம் (காபூலில் ஆப்கானிஸ்தான் தேசிய பெண்கள் கால்பந்து அணியின் இரண்டு உறுப்பினர்களை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் பன்சீர் மாகாணத்திற்கு தப்பிச் சென்றார்).[14] பஜராக் நகரமானது பன்சீர் மாகாணத்தின் தலைநகராக உள்ளது. மாகாணத்தில் உள்ள அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் ஆப்கான் தேசிய காவல்துறையால் (ஏஎன்பி) கையாளப்படுகின்றன. காவல்துறையை வழிநடத்த ஒரு மாகாண காவல்துறைத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறைத் தலைவர் காபூலில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக உள்ளார். ஏஎன்பி நேட்டோ தலைமையிலான படைகள் உட்பட இராணுவத்தால் ஆதரிக்கப்படுகிறது.
2005 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது, சலே முகமது ரெஜிஸ்தானி, பன்சீர் மாகாணத்தின் ஒரே ஆண் பிரதிநிதியாக ஆப்கானிஸ்தானின் பிரதிநிதிகள் சபை அல்லது வோலேசி ஜிர்காவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2021 செப்டம்பர் 6 அன்று, தலிபான்கள் பன்சீர் தற்போது ஆப்கானித்தானின் இஸ்லாமிய அமீரகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அறிவித்தனர். இருப்பினும், தேசிய எதிர்ப்பு முன்னணி தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை, எதிர்ப்பு தலைவர் அஹ்மத் மசூத் ட்விட்டரில், "நாங்கள் பஞ்ச்ஷீரில் இருக்கிறோம், எங்கள் எதிர்ப்பு தொடரும்." என்று கூறியுள்ளார்.[15][16]
நலவாழ்வு
[தொகு]பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் குடும்பங்களின் விகிதம் 2005 இல் 16% ஆக இருந்தது, 2011 இல் 17% ஆக அதிகரித்தது.[17]
2011 இல் 23% பிறப்புகளில் திறமையான தாதியின் உதவியில் நடந்தது.[17]
கல்வி
[தொகு]மாகாணத்தின் ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம் (6+ வயது) 2005 இல் 33% இலிருந்து 2011 இல் 32% ஆக குறைந்தது. [17] அஹ்மத் ஷா மசூத் டிவிஇடி உட்பட நான்கு தொழில்நுட்ப, தொழிற்கல்வி நிலையங்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பன்சீர் மாகாணத்தில் இயங்கிவருகின்றன. பள்ளி ஹிலிப் பர்டிபன் மற்றும் ஜெர்மன் வெளியுறவு அலுவலகத்தின் உதவியுடன் நிறுவப்பட்டது. 2014 ஆம் ஆண்டு வரை சுமார் 250 மாணவர்கள் மற்றும் 22 ஊழியர்கள் இங்கு இருந்தனர்.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2021 நிலவரப்படி, மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 173,000 ஆகும்.[1]
இன்ஸ்டிடியூட் ஃபார் தி ஸ்டடி ஆஃப் வாரின் படி, மாகாணத்தில் தஜிக் மக்கள் பெரும்பான்மையானவர்கள்.[2]
தாரி மொழி (ஆப்கான் பாரசீகம்) மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தும் மொழியாகும். இங்கு அனைத்து மக்களும் இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள். மற்றும் குறிப்பாக சுன்னிகள். ஆப்கானிஸ்தானின் மற்ற பகுதிகளின் ஹசாராக்கள் பெரும்பாலும் ஷியாக்கள்.
மாவட்டங்கள்
[தொகு]- அனாப (Anaba)
- பாஸாராக் பாராக் (Bazarak Bazarak)
- டாரா(Dara)
- கென்ஞ் (Khenj)
- பார்யான் (Paryan)
- ரோக்கா (Rokha)
- ஷொதுல் (Shotul)
முக்கிய இடங்கள்
[தொகு]புகழ் பெற்றவர்கள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Estimated Population of Afghanistan 2021-22" (PDF). National Statistic and Information Authority (NSIA). April 2021. Archived from the original (PDF) on June 29, 2021. பார்க்கப்பட்ட நாள் June 21, 2021.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help) - ↑ 2.0 2.1 "Panjshir Province". Understanding War. Archived from the original on 2013-09-25. பார்க்கப்பட்ட நாள் 2013-08-17.
- ↑ Bowersox, Gary W. (2004). The Gem Hunter: The Adventures of an American in Afghanistan. United States: GeoVision, Inc. p. 100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9747-3231-1. Archived from the original on 2021-08-08. பார்க்கப்பட்ட நாள் 2010-08-22.
To launch this plan, Bhutto recruited and trained a group of Afghans in the Bala-Hesar of பெசாவர், in Pakistan's North-west Frontier Province. Among these young men were Massoud, Gulbuddin Hekmatyar, and other members of Jawanan-e Musulman. It served Massoud's interests, which were apparently opposition to the Soviets. Later, after Massoud and Hekmatyar had a terrible falling-out over Massoud's opposition to terrorist tactics and methods, Massoud overthrew from Jawanan-e Musulman. He joined Rabani's newly created Afghan political party, Jamiat-i-Islami, in exile in Pakistan.
- ↑ Halim Tanwir, Dr. M. (February 2013). AFGHANISTAN: History, Diplomacy and Journalism Volume 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781479760909. Archived from the original on 2021-08-24. பார்க்கப்பட்ட நாள் 2020-06-06.
- ↑ "Operations". Northern Alliance: Fighting for a Free Afghanistan (in அமெரிக்க ஆங்கிலம்). Friends of the Northern Alliance. Archived from the original on 24 August 2021. பார்க்கப்பட்ட நாள் 20 August 2021.
- ↑ "The Spy Who Quit". பொது ஒளிபரப்புச் சேவை - Frontline. January 17, 2011. Archived from the original on 2015-11-04. பார்க்கப்பட்ட நாள் 2014-10-18.
- ↑ "The Panjshir Valley: what is the main bastion of resistance against the Taliban advance in Afghanistan". marketresearchtelecast.com. 16 August 2021. Archived from the original on 19 August 2021. பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
- ↑ "'Northern Alliance' flag hoisted in Panjshir in first resistance against Taliban". www.hindustantimes.com. 17 August 2021. Archived from the original on 17 August 2021. பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
- ↑ "Anti-Taliban fighters take back three districts as resistance builds up in Panjshir Valley, but experts cast doubts". www.firstpost.com. 21 August 2021. Archived from the original on 21 August 2021. பார்க்கப்பட்ட நாள் 21 August 2021.
- ↑ "Taliban on verge of crushing last stronghold of resistance in Panjshir Valley".
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Robertson, Nic; Kohzad, Nilly; Lister, Tim; Regan, Helen (6 September 2021). "Taliban claims victory in Panjshir, but resistance forces say they still control strategic position in the valley". CNN. https://www.cnn.com/2021/09/06/asia/afghanistan-monday-intl-hnk/index.html.
- ↑ Pannett, Rachel (6 September 2021). "Panjshir Valley, last resistance holdout in Afghanistan, falls to the Taliban". தி வாசிங்டன் போஸ்ட். https://www.washingtonpost.com/world/2021/09/06/afghanistan-kabul-taliban-updates/.
- ↑ Kazmin, Amy; Findlay, Stephanie; Bokhari, Farhan (September 6, 2021). "Taliban says it has captured last Afghan region of resistance". பைனான்சியல் டைம்ஸ். https://www.ft.com/content/5b4b7b58-1edf-4510-ad15-813487f3c80e.
- ↑ Gibbons-Neff, Thomas; Abed, Fahim (24 August 2020). "Database". The New York Times இம் மூலத்தில் இருந்து 25 August 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200825195435/https://www.nytimes.com/2020/08/24/world/asia/afghanistan-soccer-sex-abuse.html.
- ↑ AhmadMasoodShah (6 September 2021). "We are in Panjshir and our Resistance will continue,"💪🇦🇫 t.co/KkPIpCQVXX" (Tweet) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 September 2021.
- ↑ Latifi, Ali M. "Growing concerns for Panjshir residents as Taliban claims victory". www.aljazeera.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-07.
- ↑ 17.0 17.1 Archive, Civil Military Fusion Centre, "PANJSHIR PROVINCE". Archived from the original on 2014-05-30. பார்க்கப்பட்ட நாள் 2014-05-30.