பன்சாகர் அணை
| பன்சாகர் அணை Bansagar Dam | |
|---|---|
மேல் நீரோட்டத்திலிருந்து பன்சாகர் அணையின் காட்சி | |
| அமைவிடம் | தியோலண்ட், ஷாஹ்டோல், மத்தியப் பிரதேசம் |
| புவியியல் ஆள்கூற்று | 24°11′30″N 81°17′15″E / 24.19167°N 81.28750°E |
| கட்டத் தொடங்கியது | 14 மே 1978 |
| திறந்தது | 25 செப்டம்மர் 2006 |
| இயக்குனர்(கள்) | நீர் வளத்துறை, மத்தியப் பிரதேசம் |
| அணையும் வழிகாலும் | |
| தடுக்கப்படும் ஆறு | சோன் ஆறு |
| உயரம் | 67 மீ (220 அடி) |
| நீளம் | 1,020 மீ (3,350 அடி) |
| நீர்த்தேக்கம் | |
| உருவாக்கும் நீர்த்தேக்கம் | பன்சாகர் அணை கொள்ளளவு = 5.43 கியுபிக்.கி.மீ OR 191.78 tmc அடி |
பன்சாகர் அணை (Bansagar Dam) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கங்கைப் படுகையில் அமைந்துள்ள சோன் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரு பல்நோக்கு ஆற்று பள்ளத்தாக்கு திட்டமாகும், இதன் மூலம் விவசாய நிலங்கள் நீர்ப்பாசன வசதியும் மற்றும் 435 மெகாவாட் திறன் கொண்ட நீர்மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகின்றன. [1]
சோன் நதியின் குறுக்கே உள்ள பன்சாகர் அணை, சாதோல் மாவட்டத்தில் உள்ள தியோலோண்ட் கிராமத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது . இது மைகார், கட்னி மற்றும் ரேவா ஆகிய மூன்று மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்தவராக நம்பப்படும் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற சமசுகிருத அறிஞரான பனா பட்டின் நினைவாக இந்த திட்டம் "பன்சாகர்" என்று அழைக்கப்பட்டது. பன்சாகர் அணை அட்சரேகை 24-11-30 வ மற்றும் தீர்க்கரேகை 81-17-15 கி இல் அமைந்துள்ளது.
இந்த திட்டம் ஆரம்பத்தில் 1956 ஆம் ஆண்டு புது தில்லி மத்திய நீர் வள ஆணையத்தால் "டிம்பா திட்டம்" என்று அழைக்கப்பட்டது, பின்னர் இது சோன் நதியில் சோன் மற்றும் பனாசு நதிகள் சங்கமிக்கும் இடத்தில், தற்போதைய இடத்திலிருந்து 30 கி.மீ கீழே ஆற்றில் கட்டப்பட்டது. பின்னர் அது தியோலண்டில் உள்ள தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது. அணை கட்டுவதற்காக மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநில அரசுகளுக்கு இடையே 1973 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது, அதில் மாநிலங்கள் 2:1:1 என்ற விகிதத்தில் செலவினங்களைப் பகிர்ந்து கொண்டன. 4 மில்லியன் ஏக்கர் அடி நீரையும் அதே விகிதத்தில் மாநிலங்கள் பகிர்ந்து கொள்கின்றன. கட்டுமானப் பணிகள் 1978 ஆம் ஆண்டு ரூ. 91.31 கோடி அசல் அங்கீகரிக்கப்பட்ட செலவில் தொடங்கப்பட்டன. 1998 ஆம் ஆண்டு இறுதி மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 1054.96 கோடிகள்.[1]
தேசத்திற்கு அர்ப்பணிப்பு
[தொகு]பன்சாகர் திட்டத்திற்கான அடிக்கல்லை மறைந்த பிரதமர் மொரார்ஜி தேசாய் 1978 மே 14 அன்று நாட்டினார். [2] மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் நிதியமைச்சர் பண்டிட் ராம் கிசோர் சுக்லாவின் தொடர் முயற்சிகளால் இந்த திட்டம் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்திலும் ஆய்வு செய்யப்பட்டு போதுமான நிதி ஒதுக்கப்பட்டது. பன்சாகர் அணை செப்டம்பர் 25, 2006 அன்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் அவர்களால் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது .
