பனௌலி வித்யாபதி திக்
| பனௌலி வித்யாபதி திக் बनौली विद्यापति डीह | |
|---|---|
பிரம்ம பாபா தளம், பனௌலி வித்யாபதி திக் | |
| மாற்றுப் பெயர் | வித்தியாபதி திக் |
| இருப்பிடம் | பனௌலி கிராமம், மகோத்தரி மாவட்டம், நேபாளம் |
| பகுதி | மிதிலைப் பிரதேசம் |
| ஆயத்தொலைகள் | 26°40′41″N 85°52′46″E / 26.6780129°N 85.8793243°E |
| பகுதி | பண்டைய மிதிலை பல்கலைக்கழகம் |
| வரலாறு | |
| கலாச்சாரம் | இந்து சமயம் |
| பகுதிக் குறிப்புகள் | |
| உரிமையாளர் | வித்யாபதி |



பனௌலி வித்யாபதி திக் (Banauli Vidyapati Dih) என்பது மைதிலி மொழி மற்றும் சமசுகிருத மொழிக் கவிஞரும், எழுத்தாளருமான வித்யாபதி தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். இது நேபாளத்தின் மிதிலை பிரதேசத்தின் மாதேஷ் மாநிலத்திலுள்ள மகோத்தரி மாவட்டத்தின் பனௌலி கிராமத்தில் அமைந்துள்ளது. “மைதிலி கவிக் குயில்” எனும் புனைப் பெயரால் மைதிலி மொழியில் நன்கு அறியப்பட்டவர். கணபதி தாக்கூரின் மகனாகப் பிறந்த வித்யாபதி, சமசுகிருதம், மைதிலி மொழி மற்றும் வங்காள மொழிகளில் பெரும் புலமை பெற்றவர். மேலும், நேபாள மொழியிலும் சில கவிதைகளைப் புனைந்துள்ளார்.
வரலாறு
[தொகு]இது நேபாளத்தின் வரலாற்று, கலாச்சார மற்றும் மத நகரமான ஜனக்பூர் நகரிலிருந்து தென்மேற்கே 3.8 மைல்கள் அல்லது 6.116 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. முகலாயப் பேரரசர் மிதிலையின் மன்னர் சிவ சிம்ம சின்கை கைது செய்தபோது, பின்னர் மன்னர் தனது நண்பரும் அரசவைக் கவிஞருமான வித்யாபதியிடம் தனது மனைவி இலக்கிமா தேவியை அண்டை நாடான பனௌலி இராச்சியத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார். துரோன்வாரா புராதித்யர் பனௌலி இராச்சியத்தின் மன்னராக இருந்தார். இவர்கள் இருவரும் துரோன்வாரா புராதித்யாவின் அரசவையில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் இங்கு பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. வித்யாபதி அங்கு பல புத்தகங்களை எழுதினார்.[1][2] மாதேஷ் மாநில அரசு இதை ஒரு சுற்றுலா மையமாக அறிவித்தது.[3][4][5] இங்கு இவரது பெயரில் ஒரு நூலகம் உள்ளது.
இந்த இடம் பண்டைய மிதிலாவில் துரோன்வாரா வம்ச இராச்சியத்தின் மன்னர் புராதித்யனின் தலைநகராகவும் அறியப்பட்டுள்ளது. துரோணாரா புராதித்யன், மிதிலாவைச் சேர்ந்த ஆயின்வார் வம்சத்தைச் சேர்ந்த மற்றொரு சிறந்த பேரரசர் மன்னர் சிவ சிம்ம சிங்கின் நண்பராக இருந்தார். "திரிசித்" கவிதையின் படி வித்யாபதி தனது பாகவதம், துர்கா பக்தி மற்றும் தரங்கிணி ஆகிய நூல்களை இங்கு எழுதினார்.[6] வித்யாபதி தனது புகழ்பெற்ற புத்தகமான இலிக்கானாவலியை பனௌலியில் உள்ள மன்னர் துரோன்வாரா புராதித்யனின் அரசவையில் இலட்சுமண சம்வத் 299 (கி.பி. 1418) இல் எழுதினார். 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மிதிலையில் நிர்வாக, கலாச்சார மற்றும் சமூக-பொருளாதார வாழ்க்கையைப் பற்றிய ஆய்வுக்காக வித்யாபதியின் முக்கியமான படைப்பாக இலிக்கானாவலி உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Collegenp. "Madhesh Pradesh Govt Policies and Programs for the Fiscal Year 2079/80". Collegenp (in ஆங்கிலம்). Retrieved 2022-08-01.
- ↑ "King Shiv Singh – a fearless warrior who sacrificed himself for Mithila's freedom » MithilaConnect Local". MithilaConnect Local (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-03-31. Archived from the original on 2022-09-11. Retrieved 2022-08-01.
- ↑ मधेश प्रदेश,नेपाल. पिपरा गाउँपालिका. Retrieved 2022-08-01.
- ↑ टुडे, जनकपुर (2020-12-05). (in en-US)Janakpur Today இம் மூலத்தில் இருந்து 2022-09-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220911100343/https://ejanakpurtoday.com/22315/.
- ↑ मधेश प्रदेशको बजेट : पुरानै कार्यक्रमलाई निरन्तरता. राजधानी राष्ट्रिय दैनिक (in நேபாளி). 2022-06-15. Retrieved 2022-08-01.
- ↑ Digital Library of India. Sahitiyakar Sahitiyamala. p. 9.