உள்ளடக்கத்துக்குச் செல்

பனையடிகுப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனையடிக்குப்பம்
Panayadikkuppam
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
மாவட்டம்பாண்டிச்சேரி
வட்டம் (தாலுகா)பாகூர்
ஒன்றியம்பாகூர்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்3,698
மொழிகள்
 • அலுவல் பூர்வம்தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அ.கு.எண் -->
605 106
தொலைபேசிக் குறியீடு0413
வாகனப் பதிவுPY-01
பாலின விகிதம்50% /

பனையடிகுப்பம் (பனையடிக்குப்பம், Panayadikuppam) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் உள்ள பாகூர் வட்டத்தில் (Bahour commune) இருக்கும் ஒரு சிற்றூர் ஆகும்[1]. புதுச்சேரியின் அயலகச் சிற்றூரான கரையாம்புத்தூரின் ஒரு பகுதியாகவும், கிராமப் பஞ்சாயத்து ஆகவும் இந்த ஊர் அமைந்துள்ளது. பாகூரிலிருந்து நெட்டப்பாக்கம் செல்வதற்குரிய நுழைவாயிலாகவும் இந்த ஊர் உள்ளது.

 இடப்பெயரியல்

[தொகு]

பனைமரங்கள் நிறைந்த பகுதியில் தோன்றிய குப்பம் என்பதால், பனையடிக்குப்பம் என வந்திருக்கலாம் என ஊர் மக்கள் கூறுகின்றனர். பனை(palmyra palm) + அடி(under) + குப்பம்(settlement) என்பது பனையடிக்குப்பம் என்பதின் விளக்கமாக இருக்கலாம். ஐம்பது ஆண்டுகட்கு முன்பு பனைமரங்கள் பல இருந்ததை ஊர் மக்கள் அறிவர்.

 புவியியல்

[தொகு]

ஒன்றியத் தலைமையிடமான பாகூருடன் எல்லைபுற சாலை வழியாகப் பனையடிக்குப்பம் இணைக்கப்பட்டுள்ளது. கிழக்கு வடக்குத் திசைகளில் வீராணம்(தமிழ் நாடு) என்ற ஊரும், மேற்குத் திசையில் சொரப்பூர் (தமிழ் நாடு) என்ற ஊரும் பனையடிக்குப்பத்துடன் ஒட்டி அமைந்து உள்ளன.

நீர் நிலைகள்

[தொகு]
  • ஏரி: இது ஏறத்தாழ 150 காணிகள் (200 acres) கொண்ட நிலப் பரப்பு. பிற்காலச் சோழர் அல்லது நாயக்கர் காலத்தில் தோண்டப்பட்டதாக இருக்கலாம்.
  • குளம்: 10 காணிகள் கொண்ட நிலப் பரப்பு. தண்ணீர் எப்போதும் தேங்கி நிற்கும்; வற்றியதே கிடையாது என்பர்.
  • சித்தாங்குட்டை : ஏரியோடு சேர்ந்த வாஞ்சல்
  • மற்றவை: கரையாம்புத்தூர் ஏரி, வீராணம் ஏரி, சொரப்பூர் ஏரி, பாக்கத்து ஏரி, பாக்காதான் வாய்க்கால், மலட்டாறு, பெண்ணையாறு.

 அரசியல்

[தொகு]

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்குட்பட்டும்,நெட்டப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் பனையடிக்குப்பம் இருக்கிறது.

மக்கள் தொகை புள்ளி விவரங்கள்(2011) [2]

[தொகு]
உருப்படி மொத்தம் ஆண்கள் பெண்கள்
வீடுகள் 316 - -
மக்கள் தொகை 1,316 646 670
குழந்தைகள்(0-6) 157 78 79
தாழ்த்தப் பட்டவர்கள்(S/C) 960 481 479
மலைச் சாதியினர் (S/T) 0 0 0
படித்தவர்கள் 76.62 % 87.32 % 66.33 %
உழைப்பவர்கள் (மொத்தம்) 692 387 305
உழைப்பவர்கள் (முதன்மை) 687 - -
உழைப்பவர்கள்(துணை) 5 0 5

மக்கள் வாழ்க்கை

[தொகு]

சாதிகள்

[தொகு]

பனையடிக்குப்பம் ஊர், சேரி என்று இரண்டாகப் பிரிந்து அமைந்துள்ளது. ஊர் என்ற பகுதியில் உயர் சாதியினரும், சேரி என்ற பகுதியில் கீழ்ச்சாதியினரும் வாழ்கின்றனர். சேரி என்பது மேல் பாதி, கீழ்ப் பாதி என இரண்டாகப் பிரிந்துள்ளது. (கீழ்ப் பாதி வையாபுரி நகர் எனவும் அழைக்கப் படுகின்றது.)

  • தாழ்த்தப்பட்டவர்கள்: இவர்கள் பறையர் என்று அழைக்கப் படுவர். இவர்களில் இரண்டு வகையினர்: 1)வள்ளுவர்,பண்டாரம்; 2)பறையர்.
    • பேசும் மொழி: தமிழ்
    • வணங்கும் தெய்வம்: முத்து மாரியம்மன், எல்லைக்கல் அம்மன், முருகன்.
    • பொருளாதாரம்: கூலி வாழ்க்கை; பெரும்பாலும் நிலம் அற்றவர்கள். பெரும்பாலான வீடுகள் குடிசை வீடுகள்.
    • வாழ்விடம்: சேரி.
  • உயர் சாதிக்கார்கள்: இவர்கள் பல பிரிவினர்.
    • கவுண்டர்
      • பேசும் மொழி: தமிழ்
      • வணங்கும் தெய்வம்: அங்காளம்மன், பெருமாள், முருகன்.
      • பொருளாதாரம்: நிலம் உள்ளவர்கள், குடிசை வீடுகள்.
      • வாழ்விடம்: ஊர் எனப்படும் பகுதி.
    • ரெட்டியார் - இவர்கள் நாயக்கர் காலத்தில் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள்.
      • பேசும் மொழி: தெலுங்கு, தமிழ்
      • வணங்கும் தெய்வம்: அங்காளம்மன், பெருமாள், முருகன்.
      • பொருளாதாரம்: செல்வந்தர்கள் எனப்படுபவர், நிலம் உள்ளவர்கள், கல்/மாடி வீடுகள்.
      • வாழ்விடம்: ஊர்.
    • ஐயர் (பார்ப்பனர்)
      • பேசும் மொழி: தமிழ் (மந்திரம்: சமற்கிருதம்)
      • வணங்கும் தெய்வம்: பெருமாள்
      • பொருளாதாரம்: நிலம் உள்ளவர்கள், கல்/மாடி வீடுகள்.
      • வாழ்விடம்: ஊர் எனப்படும் பகுதியில் கோவிலுக்கு அருகில்.

தீண்டாமை

[தொகு]

தாழ்த்தப் பட்டவர்கள் (பறையர்கள்) தீண்டினால் தீட்டு என்று சொல்லப்பட்டு வந்தது ஆனால் 1975யில் இந்த ஊரில் கருதப்பட்டு வருகின்றது. ஆண்டைகள் (ரெட்டி, நாயக்கர், கவுண்டர் ஆகியோர்) எதிரில் பறையர்கள் வேட்டியை இடுப்பில் கட்டிக்கொண்டு செல்லக் கூடாது, கோவணம்தான் கட்டிக்கொண்டு செல்ல வேண்டும். மீறினால், ஆண்டையின் வீட்டு வாசலில் உள்ள கருங்கல் தூணில் கட்டிவைத்து அடிப்பார்கள். (மே ரெட்டியார் என்ற ஆண்டையரின் வீட்டு எதிரில் இந்தத் தண்டனை நிறை வேற்றுவது வழக்கம். பயன்படுத்தப் பட்ட கருங்கல் தூண்கள் அண்மைக் காலம் வரை அந்த வீட்டு எதிரில் கிடந்தது என ஊரார் அறிவர்.) [3]

கடவுள் நம்பிக்கை

[தொகு]

கடவுள் நம்பிக்கை வாழ்க்கையின் பல கூறுகளில் ஒன்றாகவே கடவுள் நம்பிக்கை உள்ளது. இங்கே உள்ள கோயில்கள்:

  • முத்து மாரியம்மன் கோயில்: இதில் முத்து மாரியம்மன் படிமம்(statue) வைக்கப் பட்டுள்ளது. இந்தக் கோயில் தாழ்த்தப் பட்ட சாதியினருக்கு என்று கட்டப்பட்டதாகும். இந்த அம்மனை தாழ்த்தப் பட்டவர்கள் மட்டும் தான் வணங்குகிறனர்.
முத்து + மாரி + அம்மன் --> முத்து மாரியம்மன்; முத்து - முதிய, மிகப் பழமையான; மாரி -மார்(அழி), மாரி(அழிக்கும் தன்மையுள்ள), வலிமையுள்ள; அம்மன் - உறைந்திருப்பவள்.
  • அங்காளம்மன் கோயில்: இதில் அங்காளம்மன் படிமம் வைக்கப் பட்டுள்ளது. இந்தக் கோயில் உயர் சாதியினருக்கு என்று கட்டப்பட்டதாகும். இந்த அம்மனை உயர் சாதியினர் வணங்குகின்றனர்; தாழ்த்தப் பட்டவர்கள் நுழையக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. (இது அண்மைக் காலங்களில், கி.பி. 2010 - உக்குப் பிறகு சற்று தளர்ந்து இருக்கிறது.)
அங்காள் + அம்மன் --> அங்காளம்மன்; அங்காள் - உடன் இருப்பவள்; அம்மன் - உறைந்திருப்பவள்.
  • பெருமாள் கோயில்: இங்குப் பெருமாள் (கிருட்டிணர்) படிமம் வைக்கப் பட்டுள்ளது. இந்தக் கோயில் உயர் சாதியினருக்கு என்று கட்டப்பட்டதாகும். இந்தக் கோயில் உள்ள தெருவில் தாழ்த்தப் பட்டவர்கள் நடக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.
பெரும் + ஆள் --> பெருமாள்; பெரும் - பெரிய, வலிமையுள்ள

போராட்டம்

[தொகு]

தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள் 1970 முதற்கொண்டு தங்கள் உரிமைக்காகவும், கூலி உயர்வுக்காகவும் போராடி வந்தனர். இதன் விளைவாக, 1989-இல் ஏற்பட்ட காவல் துறை துப்பாக்கிச் சூட்டில் சட்டக் கல்லூரி மாணவர் சேகர், மற்றும் முருகேசன் மகன் கந்தன் என்ற இருவரும் இறந்தனர்.[4] "புதுச்சேரியின் விடுதலைக்காக பிரெஞ்சு அரசாங்கத்தை எதிர்த்துப் போராடிய மக்கள் தலைவர் வ.சுப்பையா தலைமறைவாக இருந்து தங்கிய சில இடங்களில் இந்த [பனையடிக்குப்பம்] ஊரும் ஒன்று."[5][6]

திருவிழா கொண்டாட்டங்கள்

[தொகு]

பனையடிக்குப்பத்தில் பல வகையான திருவிழாக்கள் கொண்டாடப் பட்டு வருகின்றன.

பொங்கல் கொண்டாட்டம் - பனையடிக்குப்பம்
பொங்கல் கொண்டாட்டம் - பனையடிக்குப்பம்
  1. பொங்கல்
  2. தீபாவளி
  3. ஆற்றுத் திருநாள்
  4. அம்புத் திருநாள்
  5. நெருப்புத் திருநாள்
  6. ஆயுத பூசை
  7. பிள்ளையார் சதுர்த்தி
  8. கார்த்திகைத் தீபம்
  9. நவராத்திரி
  10. ஊருணிப் பொங்கல்

ஏந்துகள்

[தொகு]

படக்காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனையடிகுப்பம்&oldid=3699544" இலிருந்து மீள்விக்கப்பட்டது