பனி ஏரி (பாக்கித்தான்)

பனி ஏரி (Snow Lake) அல்லது லுக்பே லாவோ என்பது வடக்கு பாக்கித்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியிலுள்ள காரகோரம் மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு உயரமான பனிப்பாறைப் படுகை ஆகும்.[1] பெயரில் ஏரி என இருந்தாலும் இது ஏரி அல்ல.
பனி ஏரி கடல் மட்டத்திலிருந்து 16,000 அடி (4,877 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. சுமார் 10 மைல் (16 கி.மீ.) அகலம் கொண்டது. இந்த படுகை பியாஃபோ மற்றும் இஸ்பார் பனிப்பாறைகளின் உச்சியில் அமைந்துள்ளது. இது இஸ்பார் கணவாயிலிருந்து எதிர் திசைகளில் பரவி, துருவப் பகுதிகளுக்கு வெளியே உலகின் மிக நீளமான தொடர்ச்சியான பனிப்பாறைகளில் ஒன்றான 61 மைல் (100 கி.மீ.) பனியாற்றை உருவாக்குகிறது.
பிரபல பார்வையாளர்கள்
[தொகு]
மார்ட்டின் கான்வே என்ற முதல் வெளிநாட்டு பார்வையாளர் 1892 ஆம் ஆண்டில் பனி ஏரி என்ற பெயரைக் கொடுத்தார்.[2] Snow Lake is very difficult to reach, however, and only about 200 people manage to reach it per year.[3] 1899 ஆம் ஆண்டில், கணவர்-மனைவியான வில்லியம் அண்டர் வொர்க்மேன் மற்றும் பேன்னி புல்லக் வொர்க்மேன் அடங்கிய குழு இதனை காணும்போது துருவப் பகுதிகளில் உள்ளதைப் போலவே பனி ஏரியும் ஒரு பனி மூட்டமாக இருக்கலாம் என்று ஊகித்தது. அந்தப் பனிப்பாறைகள் எல்லா திசைகளிலும் பாய்ந்து, அதன் மொத்த அளவை 300 சதுர மைல்கள் (116 சதுர கிலோமீட்டர்) என மதிப்பிட்டன.
அணுகல்
[தொகு]
பனி ஏரிக்கான பயணம் பொதுவாக ஸ்கர்டுவில் தொடங்குகிறது. இதை இஸ்லாமாபாத்திலிருந்து விமானம் அல்லது வாகனம் மூலம் அடையலாம். ஸ்கர்டுவிலிருந்து, பிரால்டூ பள்ளத்தாக்கு வழியாக பயணிகளை அஸ்கோல் கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறது. அஸ்கோலிலிருந்து மலையேற்றம் முதலில் கே-2 கொடுமுடி நோக்கிச் செல்கிறது, பின்னர் பியாஃபோ பனிப்பாறையில் வடமேற்கே திரும்பி பனி ஏரியை அடைகிறது. மலையிலிருந்து இறங்கும் வழி சற்றே வேறுபடுகிறது. கன்சா பள்ளத்தாக்கு வழியாகச் சென்று கில்கிட்டில் முடிகிறது. அங்கிருந்து இஸ்லாமாபாத்திற்குத் திரும்புவதற்கு விமானம் அல்லது வாகனம் கிடைக்கும்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ice and isolation in the Karakoram". Archived from the original on 2022-12-11.
- ↑ David Noland. "Glacier Trekking to Pakistan's Legendary Snow Lake."Away.com. Retrieved on 2006-07-24.
- ↑ David Noland. "Pakistan: Snow Lake பரணிடப்பட்டது 2010-09-19 at the வந்தவழி இயந்திரம்."Outsideonline.com. Retrieved on 2006-07-24.