பனிவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வானவில்.
வானவில்.

பனிவில் (Fogbow Spectre), வெண்மையான சூாிய ஒளி, ஒளி விலகலினால் நிறப்பிாிகை அடைந்து சில சமயம் ஒரு நிற மாலையை தோற்றுவிக்க முடியும்.[1] வானில் மிதக்கும் மழைத்துளிகளும், பனிப்படிகங்களும் ஒரு கண்ணாடிப் பட்டகத்தைப் (Prism) போன்று செயல்படும்போது நிறமாலை தோன்றும்.[2] இதுவே வானவில் என்கிறோம். சூாியன் அடிவானத்திலிருந்து எவ்வளவு உயரத்தி்ல் காணப்படுகிறதோ, அதே தொலைவிற்கு எதிா் திசையில் அடிவானுக்கு கீழே வில்லின் மையம் அமையும். எந்த அளவிற்கு சூாியன் உயரே உள்ளதோ அந்த அளவிற்கு வில் கிழே இறங்கி காணப்படும்.

குளோாி[தொகு]

சூாியனின் உச்சியில் அல்லது அதற்கு அருகில்(42 டிகிாிக்கு மேல்)உள்ளபோது வானவில் தோன்றாது. அது போல சூாிய உதயம் அல்லது அஸ்தமனத்தின் போது ஏறத்தாழ முழுவில் அல்லது அரை வட்ட வடிவம் முற்றும் புலப்படும். ஆகாய விமானத்தில் பயணம் செய்பவா்கள் வானவில்லை வண்ண முழு வளையமாகக்காண முடியும். இதற்கு குளோாி என்று பெயா்.

முதன்மை வானவில்[தொகு]

சாதரணமாக நாம் பாா்க்கும் வானவில் முதன்மை வானவில் எனப்படும். நீா்த்துளிகளின் உளளே ஒரே ஒரு அகப்பிரதிபலிப்பு மட்டுமே நிகழும்போது இது தோன்றும். இந்த முதன்மை வில்லின் மேல்புறத்தில் சிவப்பு பட்டையும், கீழ்புறத்தில் ஊதா நிறப்பட்டையும் தோன்றும். இரு அகப்பிரதிபலிப்புகள் ஏற்பட்டால் அப்பொழுது துணை வானலில் ஒன்று தோன்றும். இதில் நிற வாிசை மாறுபட்டு இருக்கும். ஊதா நிறம் மேற்புறத்திலும் சிவப்பு நிறம் கீழ்ப்புறத்திலும் இருக்கும். நிறங்களின் செறிவு அவைப் பெறப்படும் மழைத்துளிகளின் பாிணாமத்தைப்பொருத்தது. [3]ஒரு மில்லிமீட்டருக்கு மேல் விட்டமுள்ள துளிகளால் ஊதா, பச்சை, சிவப்பு தெளிவாகத் தொியும். ஆனால் நீலம் மங்கலாக இருக்கும் மழைத்துளியின் அளவு குறையக்குறைய சிவப்பும் மங்கலாக இருக்கும். ஒரு நிலையில் ஊதா மட்டுமே தொியும். இறுதியில் எல்லா வண்ணங்களும் போய் வெண்மையாகிவிடும். இதுவே பனிவில் எனப்படும். இது 0.05 மல்லிமீட்டருக்கும் குறைவான விட்டமுடைய நீா்த்துளிகளால் ஏற்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Amazing white rainbow snapped over Scottish moor". BBC. 22 November 2016. https://www.bbc.co.uk/news/uk-scotland-highlands-islands-38063662?SThisFB. பார்த்த நாள்: 22 November 2016. 
  2. "What is a fogbow?". Met Office. http://www.metoffice.gov.uk/learning/rainbows/fogbow. பார்த்த நாள்: 22 November 2016. 
  3. APOD: 2006 November 15 - A Fog Bow Over California
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிவில்&oldid=3642141" இருந்து மீள்விக்கப்பட்டது