பனிப்பாறைப் பிளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பனிப்பாறைப் பிளவைத் தாண்டிச் செல்லும் மனிதன்

பனிப்பாறைப் பிளவு (Crevasse) என்பது பனிமலையிலோ, பனிவிரிப்பிலோ, பனியாற்றிலோ ஏற்படக்கூடிய ஆழமான பிளவுகளாகும். இவை பாறைகளில் ஏற்படும் பிளவுகளை ஒத்திருக்கும். பொதுவாக இவை நெடுங்குத்தான, அல்லது நெடுங்குத்துக்கு அண்மையான பிளவுகளாக இருக்கும். இவ்வாறான பிளவுகளினால் தோன்றும் நெடுங்குத்தான சுவர்கள் உருகி வெவ்வேறு பனி அமைப்புக்களை உருவாக்கும்[1].

இந்தப் பனிப்பாறைப் பிளவு மிகவும் ஆழமாக, பனித்திணிவின் முழு தடிப்பத்தையும் ஊடுருவிச் செல்லும்போது பனித் தகர்வு நிகழும்[2]. இவ்வகையான பிளவுகளின் அளவானது அது தோன்றும் மூலத்தில் இருக்கும் நீரின் அளவில் தங்கியிருக்கும். இவை 45 மீட்டர் ஆழம்வரையும், 20 மீட்டர் அகலம்வரையும், பல நூறு மீட்டர் நீளத்துக்கும் உருவாகலாம்.

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிப்பாறைப்_பிளவு&oldid=1370351" இருந்து மீள்விக்கப்பட்டது