பனித்தொடர் தோற்றப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனித்தொடர் தோற்றப்பாடு

பனித்தொடர் தோற்றப்பாடு (iceberg phenomenon) என்பது விளக்கமுறை நோய்ப்பரவியலில் பயன்படுத்தப்படும் உருவகங்களுள் ஒன்றாகும். இது ஒரு சமூகத்தில் நோய் காணப்படும் விதத்தை விளக்குகிறது. தண்ணீர் மட்டத்திற்கு மேலே உள்ள பனித்தொடரின் கட்புலனாகும் சிறிய பகுதி கண்டறியப்பட்டுள்ள நோயைக் குறிக்கிறது. தண்ணீர் மட்டத்திற்குக் கீழே உள்ள பெரும் பகுதி இன்னும் சமுதாயத்தில் கண்டறியப்படாமல் அல்லது ஆரம்ப நிலையில் இருக்கும் நோய் நிலையைக் குறிக்கிறது.

பனித்தொடர் தோற்றப்பாட்டைக் கொண்டிருக்கும் சில நோய்கள்[தொகு]

  1. சர்க்கரை நோய்
  2. உயர் இரத்த அழுத்தம்
  3. போலியோ
  4. ஹேன்சனின் நோய்
  5. பால்வினை நோய்கள்

பனித்தொடர் தோற்றப்பாடு இல்லாத நோய்கள்[தொகு]

  1. இரணஜன்னி (டெட்டனஸ்)
  2. ரேபிஸ் (வெறிநாய்க்கடி நோய்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனித்தொடர்_தோற்றப்பாடு&oldid=817500" இலிருந்து மீள்விக்கப்பட்டது