உள்ளடக்கத்துக்குச் செல்

பனிச்சறுக்கு விரைவோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனிச்சறுக்கு விரைவோட்டம்
நெடுந்தொலைவு பனிசறுக்கு விரைவோட்டப் போட்டியில், சோய் சே-போங்(Choi Jae-Bong) பனித்தடகளத்தின் உள்வளைவு தடத்தில் இருந்து வெளித்தடத்துக்கு வருகின்றார்.
உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்புஅனைத்துலக பனிச்சறுக்கு ஒன்றியம்
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள்
இருபாலரும்ஆம்
தற்போதைய நிலை
ஒலிம்பிக்1924

பனிச்சறுக்கு விரைவோட்டம் (speed skating அல்லது speedskating) என்பது பனித்தடத்தில் (உறைபனித் தடகளத்தில்)காலில் பொருத்திய சிறப்புப் பனிக்கட்டைகளை அணிந்துகொண்டு விரைவாக சறுக்கிக்கொண்டே நடப்பது போல விரைந்தோடும் விளையாட்டுப் போட்டி. இது குளிர்கால களியாட்டுகளில் (விளையாட்டுகளில்) ஒன்று. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஒன்றாக இவ் விரைவுச் சறுக்கோட்டம் 1924 முதல் இருந்து வந்துள்ளது. தடகளத்தில் ஓட்டப்போட்டி நடப்பது போலவே, ஒடுபாதைகள் வகுக்கப்பட்ட பனித்தடகளத்தில் போட்டியாளர்கள் ஒரே நேரத்தில் புறப்பட்டு யார் விரைந்து ஒரு குறிப்பிட்ட தொலைவை முதலில் எட்டுகிறார்கள் என்று காணும் விளையாட்டு. இதில் குறுந்தொலைவு, நெடுந்தொலைவு மாரத்தான் என்று மூன்றுவகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. பொதுவாக போட்டிக்காக சீர் நிறுவப்பெற்ற தொலைவுகள் 500 மீ, 1500 மீ, 5000 மீ, 10,000 மீ ஆகும். பனிச்சறுக்கு விரைவோட்டத்தில் பனிச்சறுக்கர்கள் மணிக்கு 60 கி.மீ (மணிக்கு 37 மைல்) விரைவிலும் கூட சிறு தொலைவுகள் செல்வார்கள்.

இவ்விளையாட்டு அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளாகிய ஆத்திரியா, நோர்வே, சுவீடன்பின்லாந்து, இடாய்ச்சுலாந்து முதலான நாடுகளிலும், உருசியா, சீனா, நிப்பான், கொரியா ஆகிய நாடுகளிலும் குளிர்கால விளையாட்டாகவும் போட்டி விளையாட்டாகவும் ஆர்வத்துடன் மக்கள் கொண்டாடுகிறார்கள்.

குறுந்தொலைவு (500 மீ) பனிசறுக்கு விரைவோட்டப் போட்டி