பனன் இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பனன் இராச்சியம்
(நோக்கர் பொநோம்)

អាណាចក្រហ្វូណាន
(នគរភ្នំ)
Status பேரரசு
தலைநகரம்வியாத புரம் என்பதற்கான வாய்ப்புள்ளது
சமயம் இந்து, பௌத்தம் , அனிமிசம்
அரசாங்கம் தெரியவில்லை

பனன் அல்லது பனான் அல்லது புனான்;( கெமர்: ហ្វូណន) அல்லது நோக்கோர் பொநாம் ( கெமர்: នគរភ្នំ "மலை கூட்டரசு") என்பது கி,பி முதலாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை தென்கிழக்காசியா பகுதியில் மீகாங்க் டெல்டாப் பகுதியை மையமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த ஒரு பண்டைய இராச்சியம் ஆகும். இப்பெயர் சீன வரைபடவியலாளர்கள், புவியியலாளர்கள், எழுத்தாளர்கள் மூலம் பண்டைய இந்துக் கலாச்சாரத்தை கடைபிடித்து வந்த இப்பகுதிக்குக் அல்லது மண்டலத்திற்குக்[1][2] கொடுக்கப்பட்ட பெயராகும். பனான் இராச்சியம் முதலாம் நூற்றான்டு முதல் ஆறாம் நூற்றாண்டு இருந்ததாக, இதை விவரிக்கும் சீன வரலாற்று நூல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. மேலும் மூன்றாம் நூற்றண்டின் மத்தியப் பகுதியில் நான்கிங்கின் 'வு' இராச்சியத்தின் பிரதிநிதிகளாக பனன் இராச்சியத்தில் தங்கியிருந்த காங் டாய், சூ யிங் ஆகிய இரண்டு சீன இராஜதந்திரிகளின் மிக விரிவான விளக்கக் குறிப்புகள் பனன் இராச்சியத்தைப் பற்றி மேலும் விரிவாக அறிய உதவுகின்றன.[3] :24

இப்பகுதியில் தற்பொழுது பேசும் நவீன மொழிகளில் ( பழைய கெமெர் ) அல்லது நோகோர் புனோம் ( கெமர் ), (ஃபனன்) ( தாய் ), மற்றும் Phù Nam ( வியட்நாமிய ), மொழிகளில் பனன் என்ற பெயர் காணப்பட்டாலும், அந்தக் காலத்திலிருந்து உள்ளூர் வம்சாவளியைச் சேர்ந்த எந்தவொரு நூல்களிலும் பனன் என்ற பெயர் காணப்படவில்லை, மேலும் பனன் மக்கள் தங்கள் இராச்சியத்திற்கு என்ன பெயர் கொடுத்தார்கள் என்பதும் தெரியவில்லை. பண்டைய சீன அறிஞர்கள் கெமெர் சொல்லான bnaṃ அல்லது vnaṃ என்பதுடன் தொடர்புடைய ஒரு சொல் எனவும் அதனையே பனன் என்பது குறிக்கிறது எனவும் வாதிடுகின்றனர். பனாம் என இன்று பயன்படுத்தப்படும் சொல்லுக்கு சீனமொழியில் மலை என்பது பொருளாகும். ஆயினும் பனன் என்பது ஏதேனும் ஒரு மொழியிலிருந்து படியெடுக்கப்பட்ட சொல்லாக இருக்கக்கூடும்.

ராச்சியத்தின் பெயரைப் போலவே, மக்களின் இன-மொழியியல் தன்மையும் நிபுணர்களிடையே அதிக விவாதத்திற்கு உட்பட்டது. முன்னணி கருதுகோள்கள் என்னவென்றால், பனானியர்கள் பெரும்பாலும் மோன்-கெமர், அல்லது ஆஸ்திரோனீசியர்களாக அல்லது அவர்கள் பல இன சமுதாயத்தை உருவாக்கியவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கிடைக்கக்கூடிய சான்றுகளை வைத்து இதற்கு எந்தவொரு முடிவையும் எட்ட இயலவில்லை. மைக்கேல் விக்கரி, என்பவரின் கருத்துப்படி கிடைக்கக்கூடிய சான்றுகள் இம்மக்கள் பேசிய பனன் மொழியைப் உறுதியாக அடையாளம் காண இயலாவிட்டாலும் இம்மக்கள் கெமர் சமுதாய மக்கள் என்று சான்றுகள் வலுவாகக் கூறுகின்றன.[4] பண்டைய பனன் இராச்சியத்தின் துறைமுகமான ஓக் ஈவோ என்ற இடத்தில் நடைபெற்ற தொல்பொருளியல் அகழ்வராய்ச்சி முடிவுகள் "ஓக் ஈயோ மற்றும் முன்-அங்கோரிய நிலைகளுக்கு இடையில், பனன் இராச்சியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் கெமர் மொழிகளில் உண்மையான இடைநிறுத்தம் எதுவும் ஏற்படவில்லை என்பதை நிரூபித்துள்ளன, இது பனான் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில் கெமர் மொழியியல் ஆதிக்கத்தைக் குறிக்கிறது.[5]

சீன வரலாற்றாசிரியர்களின் சான்றுகளின் அடிப்படையில், பனான் அரச அமைப்பானது கி.மு. முதலாம் ஆம் நூற்றாண்டில் மீகாங் டெல்டாவில் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது, ஆனால் தொல்பொருள் ஆய்வுகள் இந்த பிராந்தியத்தில் விரிவான மனித குடியேற்றம் கி. மு 4 ஆம் நூற்றாண்டுக்கு முனபு இருந்திருக்கிலாம் என்பதைக் காட்டுகிறது. சீன எழுத்தாளர்களால் இந்த இராச்சியம் ஒருங்கிணைந்த ஒரே ஆட்சியாக கருதப்பட்டாலும், சில நவீன அறிஞர்கள், பனான் இராச்சியம் நகர-மாநிலங்களின் தொகுப்பாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள், ஏனெனில் அவை சில சமயங்களில் ஒன்றுக்கொன்று போரிட்டிருக்கின்றன, மேலும் சிலசமயங்களில் அரசியல் ஒற்றுமையைப் பேணி வந்துள்ளன.[6] ஓக் ஈவ் என்ற இடத்தினை அகழாய்வு செய்ததில் ரோமானிய, சீன மற்றும் இந்தியப் பொருட்களை உள்ளடக்கிய, பெரும்பான்மையான பண்டையகாலப் பொருட்கள் கிடைத்துள்ளன. இந்தத் தொல்பொருள் சான்றுகளிலிருந்து, தெற்கு வியட்நாமில் "கண்ணாடி கால்வாய்" என்று பொருள்படும் பண்டைய வணிக மையமான ஓக் ஈயோ எனப்படும் துறைமுக நகரமானது பனான் இராச்சியத்தின் ஒரு சக்திவாய்ந்த வர்த்தக மையமாக இருந்திருக்க வேண்டும் என்பது அறியப்படுகிறது.[7] தெற்கு கம்போடியாவில் அங்கோர் போரே என்ற இடத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி ஒரு முக்கியமான தீர்வுக்கான ஆதாரங்களை வழங்கியுள்ளது. இன்றும் ஓக் ஈயோ நகரமானது கடற்கரையில் உள்ள ஒரு துறைமுகத்துடனும், அங்கோர் போரேயுடனும் கால்வாய்களின் அமைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இடங்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து பனனின் மையப்பகுதியாக அமைந்திருக்கலாம் என்று கருத வாய்ப்புள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Martin Stuart-Fox (2003). A Short History of China and Southeast Asia: Tribute, Trade and Influence. Allen & Unwin. பக். 29. 
  2. Dougald JW O′Reilly (2007). Early Civilizations of Southeast Asia. Altamira Press. பக். 194. 
  3. Higham, C., 2001, The Civilization of Angkor, London: Weidenfeld & Nicolson, ISBN 9781842125847
  4. Michael Vickery, "Funan reviewed: Deconstructing the Ancients", Bulletin de l'École Française d'Extrême Orient XC-XCI (2003–2004), pp. 101–143
  5. Pierre-Yves Manguin, "From Funan to Sriwijaya: Cultural continuities and discontinuities in the Early Historical maritime states of Southeast Asia", in 25 tahun kerjasama Pusat Penelitian Arkeologi dan Ecole française d'Extrême-Orient, Jakarta, Pusat Penelitian Arkeologi / EFEO, 2002, p. 59-82.
  6. Hà Văn Tấn, "Oc Eo: Endogenous and Exogenous Elements", Viet Nam Social Sciences, 1–2 (7–8), 1986, pp.91–101.
  7. Lương Ninh, "Funan Kingdom: A Historical Turning Point", Vietnam Archaeology, 147 3/2007: 74–89.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனன்_இராச்சியம்&oldid=2868364" இருந்து மீள்விக்கப்பட்டது