பனங்கற்கண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பனங்கற்கண்டு[தொகு]

பனங்கற்கண்டு கல்லாக்காரம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இது பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரைக் காய்ச்சிப் பெறப்படும் சர்க்கரை ஆகும். 100 லிட்டர் பதநீரைக் காய்ச்சி 5 கிலோ பனங்கற்கண்டு தயாரிக்கலாம். கிலோவுக்கு ரூ.300-500 வரை விலை கிடைக்கும்.

சிறப்புகள்[தொகு]

இதில் 24 வகையான இயற்கைச் சத்துக்கள் உள்ளன. விலை சற்று அதிகமென்றாலும் நீரிழிவு நோயின் பிடியிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள இந்த இயற்கைச் சர்க்கரையைப் பயன்படுத்துவது சிறந்தது.

நன்மைகள்[தொகு]

வாதம் மற்றும் பித்தத்தை நீக்கும். நுரையீரல் கோளாறுகளைக் கட்டுப்படுத்தக் கூடியது. சுக்கு, மிளகு மற்றும் திப்பிலியுடன் பனங்கற்கண்டு சேர்த்து உண்பதால் இருமல் கட்டுப்படும்.

பனங்கற்கண்டு பால்[தொகு]

இது திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். பசும்பாலுடன் மிளகும் பனங்கற்கண்டும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

பூண்டுப் பால்[தொகு]

50 மில்லி பாலுடன் அதே அளவு நீரும் கையளவு உரித்த பூண்டுப் பற்களும் சேர்த்துக் கொதிக்க வைத்து, இறக்கும் முன் மஞ்சள்தூள், பனங்கற்கண்டு மற்றும் மிளகுத்தூள் கலந்து கடைய வேண்டும். இது இருமல் மற்றும் தலைவலியைக் கட்டுப்படுத்தக் கூடியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனங்கற்கண்டு&oldid=2904504" இருந்து மீள்விக்கப்பட்டது